நூலும் வாழ்வும்

அணிந்துரை

                                                                                    டாக்டர்.தே.ஞானசேகரன்,

                                                                                                தமிழ்ப் பேராசிரியர்,

                                                                        பாரதியார் பல்கலைக் கழகம்,

                                                                        கோயம்புத்தூர்- 641 046

வாதிரியாரின் வாழ்வியல்

 

            “மாற்றமில்லாத இறந்தகால நிகழ்ச்சிகளின் தொகுப்பே வரலாறு” எனும் அரிஸ்டாடில், வரலாறு என்பதற்கு அளித்த வரையறையிலிருந்து “வரலாறு ஒரு விஞ்ஞானம்” பியு+ரி (டீரசல) எனும் மேலை நாட்டு வரலாற்று அறிஞர் கொடுத்த வரையறைவரை வரலாறு என்றால் என்ன? என்பதற்கான வரையறைகள் பலவிதமாகச் சொல்லப்பட்டு வந்துள்ளன. ஆனால் அரச மரபினரின் வாழ்க்கை, பரம்பரை, பேரர்கள் பற்றியவையே வரலாறு என்று கருதப்பட்ட நிலைமாறி பரந்துபட்ட மக்களின் வாழ்க்கைக் கூறுகளை உள்ளடக்கிய சமுதாய வரலாறே (ளுழஉயைட ர்ளைவழசல) ஒருநாட்டின் முறையான சமூகப் பண்பாட்டு வரலாறாக (ளுழஉயைட யனெ ஊரடவரசயட ர்ளைவழசல) அமையும் என்ற கருத்து 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது. ஆட்சியாளர்கள் எப்படி ஆண்டார்கள் என்பது மட்டுமல்லாமல் மக்கள் அவர்களின் ஆட்சி முறையை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும் வரலாற்றில் அவசியம் இடம் பெறுதல் வேண்டும் என்ற கருத்தும் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றது. இவ்வாறு எழுதப்படும் வரலாறே பொது மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சமூக வரலாறாக அமையுமென்ற கருத்து இன்று வலுப்பெற்று வருகின்றது.

 

            தமிழகத்தில் எழுதப்பட்ட வரலாறுகளில் வரலாறு எழுதுவோரின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையால் அவர்கள் சார்ந்துள்ள சமூகங்களின் அடையாளங்கள் மட்டுமே அவரவரின் ஆசைக்கேற்ப திணித்து எழுதப்பட்டது. உண்மையான அனைத்துத் தமிழக மக்களின் சமூகப் பண்பாட்டு மரபுகளையும் இணைத்து எழுதப்பட்ட வரலாறு இன்னமும் தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் இடம் பெறவில்லையென்றே சொல்லலாம். தமிழக வரலாற்றில் இது வரை இடம்பெற்றுள்ள ஒருசில இனங்கள் தமது மேலான இன ஆதிக்கத்தால் இடம் பெற்றதே ஆகும். இதில் அந்தந்த இனமே வரலாற்றில் தம்மை இட்டு நிரப்பிய பணியைச் செய்திருப்பதை வரலாறு படிப்போர் உணர்வர். ஆனால் இதில் தம்மை அண்மைக்காலம் வரை இணைத்துக்கொள்ளாத மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் அண்மைக்காலத்தில் குறிப்பாக கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்டர்.குருசாமி சித்தரின் தலைமையில் இயங்கும் தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம் மூலம் தமது வரலாற்றைத் தேடித் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பணியின் இன்னொரு பங்களிப்பே த.செயகுமார் அவர்களின் “நூலும் வாழ்வும் – ஓர் ஆய்வு” எனும் இந்நூல் ஆகும்.

           

            தமிழகத்தின் மூவேந்தர் மரபைத் தோற்றுவித்து, மருத நிலத்தில் நெல் வேளாண்மையை உண்டு செய்து, மள்ளர், களமர், தேவேந்திர குல வேளாளர், காலாடி, கடையர், பலகனார், பணிக்கனார், குடும்பனார், பண்ணாடி, வயல்காரர், வாதிரியார்… என்று பல்வேறு பெயர்களில் வாழ்ந்து வரும் தமிழகத்தின் மூத்த குடியான இவ்வினம் தமது வரலாற்றை மறந்ததற்கான காரணம் இந்நாட்டை விட்டு தம்மை வேறுபடுத்திப் பார்க்காததே ஆகும். இதனை மானுடவியல் அறிஞர்.ஆ.செல்லப்பெருமாள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “தபால் தலையையும், தபால் துறையையும் முதன் முதலில் கண்டுபிடித்த நாடு இங்கிலாந்து. ஆனால் இங்கிலாந்து நாட்டின் தபால் தலையில் இங்கிலாந்து என்று இருக்காது. உலகிலுள்ள பிற நாடுகள் தங்களின் தபால் தலையில் தங்களின் நாடுகளின் பெயரை அச்சிடுகின்றன. காரணம் இது தங்களின நாட்டின் தபால் தலை என்று அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அச்சிடும் நாடுகள் இதனைக் கண்டுபிடிக்கவில்லை. இது போன்றுதான் தமிழகத்தில் வாழும் பலர் தங்களை தமிழ்நாட்டோடு அடையாளப்படுத்தி வரலாறு எழுதுகையில் மள்ளர்களுக்கு அந்த அவசியம் ஏற்படவில்லை. காரணம் இவர்கள் இந்த மண்ணின் அசல் மைந்தர்கள் என்பதால்தான். ஆனால் இன்று இந்த மண்ணின் ஆட்சியுரிமையோடு தங்களை இணைத்துக்கொள்ள தமது வரலாற்றை மீட்டெடுக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர் பணியாகவே மள்ளர்கள் குறித்த ஆய்வுகள் தமிழகம் முழுமையும் தற்சமயம் பல அறிஞர்களால் தேடப்பட்டு எழுதப்பட்டு வருகிறது. வரலாறு என்பது மாறாதது என்பார்கள். ஆனால் நமது நாட்டின் வரலாற்று சான்றுகள் புதிது புதிதாகக் கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டு வருவதை நாம் பார்க்க முடியும்.

 

            இந்தியாவை 1922 வரை மொகஞ்சதாரோ, அரப்பா, சிந்துவெளி நாகரிகச் சான்றுகள் கிடைக்கும்வரை மேல்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் “ஒரு பண்பாட்டுப் பாலைவன நாடாகவே” கணித்திருந்தனர். ஆனால் சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதும், இந்தியப் பண்பாட்டின் தொன்மை உலகையே வியக்க வைத்தது. இந்தச் சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடைய நாகரிகமே பண்டைய சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழர் நாகரிகம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. அதாவது சிந்து வெளியில் கிடைத்த எலும்புக் கூடுகளும், தாமிரபரணி ஆற்றங்கரை ஆதிச்சநல்லூhpல் கிடைத்த எலும்புக்கூடுகளும் ஒரே இனத்தைச் சார்ந்தவை என்பதோடு பல வாழ்வியல் மரபுகளின் சான்றாதாரங்கள் சிந்து வெளி நாகரிகம், தமிழர் நாகரிகம் என்பதை உறுதி செய்வதைக் காண்கின்றோம். பண்டைய தமிழகம் மூன்று முறை கடல்கோளால் அழிந்தது. முதற்சங்ககால நூல் நமக்குக் கிடைக்கவில்லை. இடைச் சங்க காலத்து நூல் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு கடைச் சங்ககாலத்து நூல்கள், இதில் குறிக்கப்படும் முதன்மைக் குடிமக்களான மள்ளர் எனும் மருத நில மக்களின் வரலாறு தமிழகத்தின் கடல் கொண்ட வரலாறு முதல் இன்றுவரை தொடர்புடையது. இவர்கள் குறித்த உண்மை வரலாறுகள் அண்மைக் காலத்தில் புதிது புதிதாய் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இப்படி காலந்தோறும் அறிஞர்களால் புதிது புதிதாக அதே நேரத்தில் ஓர் உண்மையை நோக்கி முன் வைத்து நகரும் துறையே வரலாற்றுத் துறை ஆகும். இத்துறையில் தமக்கான ஒரு பங்களிப்பை இது வரை அண்டை ஊர்க்காரன் கூட தம்மை யாரென அறிய முடியாது வாழும் ஓர் இனத்தின் மக்கள் வரலாற்றை தமக்கான எளிய முறையில் முன்வைக்கின்றார் இந்நூலின் ஆசிரியர்.

 

            இவரின் முயற்சி துணிச்சலானது. காரணம் தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிகளின நெருக்கடிக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களின் ஒரு பிரிவினரே இன்று தங்களை தனிச் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும் வாதிரியார் இனத்தவர் என்று ஆய்ந்து சொல்வதனால் ஆகும். நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் ஆதிக்க சாதியினரின் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு ஆளான தேவேந்திரர்கள் தமது மருதநில வேளாண் மரபை விட்டு விடாது போராடி இன்றும் வேளாண் மக்களாக வாழ்ந்து வருகின்றனா;. ஆனால் இங்கே ஒரு வியப்பான, விந்தையான சமூக மாற்றம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. வேளாண் தொழில் செய்த மள்ளர்களில் ஒரு பிரிவினர் நெசவு செய்தனர். இத்தொழிலால் இயல்பாகவே இவர்கள் பிறரைச் சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டு மென்மையான வாழ்க்கை வாழத் தலைப்பட்டிருக்கின்றனர். இதனால் தமது ஆயுதக்கலாச்சாரத்தை தாமே ஒடுக்கி சமூக ஒடுக்குதலுக்கு ஆளான ‘பள்ளர்’ (மள்ளர்) எனும் பெயரை மாற்றி வாதிரியார் எனும் பெயரை ஏற்றனர். ஆனால் இவர்களைப் பிற சாதியார் பள்ளவாதிரியார் என்றே அழைத்தனர். இவர்களின் சாதிச் சான்றிதழ்களும், பத்திரங்களும் இவர்களைத் தேவேந்திரர், பள்ளர்(மள்ளர்) என்றே அழைத்தனர். ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் எந்த இனமும் தான் விரும்பும் பெயரில் அழைக்கப்பட உரிமையுண்டு என்ற அடிப்படையில் அட்டவணை இனத்தில் (ளுஉhநனரடநன ஊயளவந) இருந்த பள்ளா; (வாதிரியார்) தம்மை வாதிரியார் எனப் பெயர் மாற்ற 1977-ல் மனுச் செய்து வெற்றி பெற்றனர். இந்தப் பெயர் மாற்றத்தால் தம்மைத் தனித்த இனம் என்று காட்டிக் கொள்ள பலர் முயலும்போது இல்லை காலப்போக்கில் இவ்வினத்திற்கு இத்தனிமைப்படுத்தல் தீங்காகவே அமையும் என்ற கருத்தியலோடு (ஐனநழடழபல) இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

 

            இங்கே பண்பாட்டு மற்றும் சமூகத்தில் தேவேந்திரர் அந்தஸ்தும், தொழிலால் நெசவாளர் அந்தஸ்தும் கொண்ட வாதிரியார் எனும் ஒரு பிரிவினரின் வாழ்வியலை இந்நூல் மிக நுணுகி ஆராய்கிறது.

 

            தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் உள்ளடக்கி பரமன்குறிச்சியை மையமாகக் கொண்டு சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழும் மொத்த மக்கள் தொகை சுமார் 25000 பேர் மட்டுமே ஆவர் என்ற புள்ளி விபரத்திலிருந்து இவர்களின் வழிபாடு, கிளைப்பிரிவுகள், திருமணச் சடங்குகள், ஊர் நிர்வாகம், நெய்தல் தொழில் வழிபாட்டு மரபுகள் என்பதாக இம்மக்களின் வாழ்வியலை ஓர் இனவியல் வரலாறாக (நுவாiஉயட ர்ளைவழசல) சொல்லியுள்ள முறை பாராட்டுதலுக்குரியது ஆகும்.

 

            ஆசிரியரின் தொலைநோக்கும் மனித நேயமும் அளவிடற்கரியது. இன்றைய தமிழகத்தின் வாழ்வியல், மனித இயல்பு என்பது தங்களை அடையாளப்படுத்தி தங்களின் மக்கள்பெருக்கத்தைக் காட்டி அரசியல் அதிகாரத்தை (Pழடவைiஉயட Pழறநச) நெருங்கி பிறரை அடக்குதல் என்பதாகப் போய்க்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தின் மக்கள் தொகையில் 11ஃ2 கோடிக்கு மேல் வாழும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளரின் ஒரு பிரிவினர் தங்களை அந்நியப்படுத்தி சிறுபான்மையாக காணாமல் போய் விடுவரோ என்ற கருணையுடன் கூடிய தொலைநோக்கு இந்நூலின் ஆசிரியரிடம் காணப்படுவதை நாம் போற்றியாக வேண்டும். இவரின் அச்சம் நியாயமானதாகவே இருக்கிறது. அணிதிரள்தல் அதிகாரத்தை நெருங்குதல் எனும் கோட்பாடு மிக வலுப்பட்டு வரும் காலக்கட்டத்தில் அந்நியப்படுதல் ஆபத்தாகவே மடியும். அதுவும் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாகவும், சமூகமாகவும் தன்னை வெளிக்காட்டி எழுச்சி பெற்று வரும் தேவேந்திர குல வேளாளரின் ஒரு பிரிவினர் குறித்த வரலாற்று வாழ்வியல் நூல் காலத்திற்கேற்ற தேவையான ஒன்றாகவே அமைகின்றது. இந்நூலை இச்சமூக மக்கள் ஏற்று இந்நூலாசிரியரின் உள்ளக்கிடக்கையை ஏற்று எழுச்சி பெற விழைகின்றேன். தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலை தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் ஒருபுது வரவாக ஏற்றுப் போற்றும் என்றும் நம்புகிறேன்.

 

                                                                                    டாக்டர்.தே.ஞானசேகரன்,

23.12.99.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முன்னுரை

 

            பாரத நிதி அமைச்சர் நாட்டில் உள்ள மொழிகளைப் பட்டியலிடும்போது தனது தாய்மொழி விடுபட்டுப் போனதை அறிந்து பாராளுமன்ற நடு மண்டபத்தில் கண்ணீர் விட்டுக் கதறிய ஒருபெண் உறுப்பினர் குறித்த செய்தியை எனது இள வயதில் பத்திரிகையில் பார்த்தபோது நெகிழ்ந்து போனேன்.

 

            தன் தாய்மொழி, தான் சார்ந்த சமூகத்தின் பண்பாடு, இவையெல்லாம் அழிந்துபோக யாருக்குத்தான் மனம் வரும்.

 

            பார்க்கும் இடங்களிலோ படிக்கும் நூல்களிலோ வாதிரியார் சமூகம் குறித்த ஒருவரிச் செய்தியேனும் இல்லாததும் அவ்வாறே இருப்பினும் போகிற போக்கில் முரணான செய்தி ஒற்றை வரியில் வீசப்பட்டு எனது நெஞ்சில் காயமேற்படுத்திய அந்த நாட்களில், இனி வாதிரியார் குறித்த செய்திகளைத் திரட்டவும், இவர்களின் தனித்த பண்பாடுகளை ஆய்ந்து அதன்கண் கட்டுரைகள் தீட்ட வேண்டும் என்ற பேரவாவும் எமக்கு ஏற்பட்டதன் விளைவே இந்நூல்.

 

            இங்கு எழுந்துள்ள சிந்தனைக்கு அடித்தளமிட்டு அருமையான அணிந்துரை நல்கிய பேராசிரியப் பெருந்தகை முனைவர்.தே.ஞானசேகரன் அவர்களோடு தொடங்கிய நட்பும், நல்ல உரையாடல்களும், மள்ளர் பிரிவினரான வாதிரியார் குறித்த நூல் தங்களால் வெளியிட இயலும் என்று ஊக்கமளித்த இவருக்கு எனது முதல் நன்றியைத் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

 

            இதே வகையில் வாதிரியார் குறித்த செய்திகளைத் தயங்காது தனது மள்ளர் மலரில் வெளியிட்டு எனது சிந்தனைக்கு உரமேற்றிய அய்யா. முனைவர் குருசாமி சித்தர் அவர்களுக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

 

            கோவை தமிழர் பண்பாட்டு சமூக ஆய்வு மன்றக் கூட்டங்களில் ஒற்றை மனிதனாய், வாதிரியார் மள்ளர் பிரிவினரே என்று நான் வாதிடும்போதெல்லாம், எனது வாதங்களில் உள்ள உண்மையை ஏற்று உடனே ஆதரவு நல்கியவரும் இந்நூல் ஆக்கத்தின் போது பேருதவி புரிந்தவரும் நல்ல நண்பரும் ஆகிய திரு.எம்.கிருஷ்ணசாமி அய்.ஆர்.எஸ். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

 

            பல்வேறு கருத்தரங்குகளில் வாசித்தளிக்கப்பட்ட வாதிரியார், குறித்த கட்டுரைகள் மற்றும் அவ்வப்போது கள ஆய்வின்போது பெற்ற தரவுகள், தகவல்கள் ஆகியவை கொண்டு எழுதப்பெற்ற சில கட்டுரைகளும் இங்கு நூல் வடிவம் பெறுகின்றது.

 

            “வாதிரியாரும் தேவேந்திரரும்” மற்றும் “வாதிரியார் சமூகம்- நெய்தல் கலையும் நெறிமுறைகளும்” ஆகிய இரு கட்டுரைகளும் கோவைத் தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றக் கருத்தரங்குகளில் முறையே 18.08.96-இலும் 12.06.99-இலும் வாசித்தளிக்கப்பெற்றவை.

 

            வாதிரியார் சமூகத்தின் கிளை வழி உறவு முறைகள் எனும் கட்டுரை தமிழாய்வு மன்றம் – திருச்செந்தூரில் 11.01.98 அன்று நடைபெற்ற கருத்தரங்கின்போது வாசித்தளிக்கப்பட்டது.

 

            ‘வாதிரியாரும் முருக வழிபாடும்’ எனும் கட்டுரை அருள்மிகு.தண்டாயுதமாணி சுவாமி திருக்கோவயிலும் அருள்மிகு பழனியாண்டவர் கலை – பண்பாட்டுக் கல்லூரியும் இணைந்து 09.08.98-ல் நடத்திய தேசியக் கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்டது.

 

            மேற்கூறிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.

 

            இந்நூல் வெளிவர பெரிதும் ஊக்கமளித்த தம்பிமார்கள் திருமுருகன், ஸ்டீபன் சூசை, சேவிசன், மணிவண்ணன், பவுல்ராஜ், நவநீதகிருஷ்ணன், கிருபாகரன் இவர்களுக்கும் பாவாற்று குறித்து தரவு அளித்த திரு.அலெக்ஸ் மற்றும் மகிழ்வுடன் வாதிரிகள் குறித்து உரையாடிய அம்மா திருமதி.குணசீலியம்மாள், இல்லாள் திருமதி.இந்திராகாந்தி, கொழுந்தியாள் திருமதி.அமலா ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.

 

            பரந்துபட்ட பெரிய சமூகம் ஒன்றின் கிளைச் சமூகமான வாதிரியார் சமூகத்தின் வரலாற்றினையும், மரபு வழக்காறுகளையும் புரிந்துகொள்ள இந்நூல் கட்டாயம் துணை நிற்கும் என நம்புகிறேன்

 

சென்னை                                                                                                                த.செயகுமார்

26.12.99

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உள்ளே…

                                                                                    பக்கம் எண்

1.         வருங்காலமும் – வாதிரியார்களும்                                                           17

2.         நெய்தல்கலையும் – நெறிமுறைகளும்                                                     29

3.         கிளைவழி உறவு முறை                                                                                 38

4.         அம்பலகாரர் பணிகள்                                                                           45

5.         திருமணம் – உறவு நிலை                                                                    52

6.         “முருக வழிபாடு”                                                                                   57

7.         வாதிரியாரும் தேவேந்திரரும்                                                                     63

8.         கிறிஸ்துவமும் வாதிரியார்களும்                                                              70

9.         சாத்தன் வழிபாடும், வாதிரியார் வழக்கமும்                                         76

10.       வாதிரியார் வாழ்வில் “களியலடி” விளையாட்டு                                            84

11.       வாதிரியார் இனப் பெண்கள் குறித்த உரையாடல்                                           89

12.       புலம் பெயர்ந்த நிலையில்                                                                 92

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1.         வருங்காலமும் வாதிரியார்களும்

 

 

காலங்காலமாக…

 

            கைவினை புரியும் எத்தனையோ சமூகங்களிடையே, கடந்த இரு தலைமுறைக்கு முன்பு வரையிலும் தனக்கென்று தனித்த பழக்க வழக்கங்களையும், உணவுப் பழக்கங்கள், உடை தனித்த மதிப்பீடுகள் போன்ற பண்பாட்டு அம்சங்களில் வாதிரியார் சமூகம் இப்போது தனக்கெனவிருந்த குலத் தொழிலையும் விடுத்து, நகரங்களில் குடிபெயர்ந்து நகரம் சார்ந்த தொழில் முறைக்குத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு தனித்த வழக்காறுகள், பேச்சு, இருப்பிடம் இவை எல்லாவற்றையும் இழந்து சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் குடியேறி திருமணம், போன்ற நிகழ்வுகளில் மட்டும் தன் சமூகம் என்ற எண்ணம் மேம்பட சிறிது நேரம் கலந்து கொண்டு விட்டு இயந்திரத்தனமான நகர வாழ்வில் மீண்டும் தன்னை கரைத்துக்கொண்டு ஒரு விதமாக வாழ்க்கையை நகர்த்திச் செல்;லும் இன்றைய வாதிரியார் சமூகத்தின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்தும், இத்தகைய மாற்றங்களின் விளைவும், எதிர்காலத்தில் இவற்றின் நிலை பற்றிய கருத்துக்களும், உள்வாங்கிய நிலையில் தன்னை வெளிப்படுத்த இச்சமூகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் ஆய்வு செய்கிறது இக்கட்டுரை.

 

            அப்போது, வேளாளருக்;குப்பின் தனித்த இருப்பிடங்களைக் கொண்டு வாழ்ந்த சமூகம் ஆதிக்க அடாவடிச் சாதிகளுக்கு மத்தியில் மிகமிக மென்மையான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தது.

 

            அதிகாலையில் எழுந்திருந்து தனது வீட்டு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பெண்கள், பாவாற்றும் பொருட்டு விடியலிலே தனது தட்டுச் சேக்காளியைத் தேடிச் சென்று சுறுசுறுப்புடன் வேலைகளை ஆரம்பிக்கும் ஆண்கள், தேரி மணல் பரப்பப்பட்ட அழகிய மெழுகிய தரையில் சேலையை மூடித் தூங்கும் குழந்தைகள். இதுவே காலங்காலமாக வாதிரியார் குடியிருப்புகளில் காணப்படும் காலைக்காட்சியாகும்.

 

            பாவாற்றுதல் முடித்து, தறிக்குச்செல்லும் ஆண்களும,; பெண்களும் பள்ளிச் செல்லும் குழந்தைகளும், மாலை வரையிலும் நெசவுச் சத்தம் அலை அலையாய் படர்ந்து பரவி ஒலிக்கும் வாதிரியார் குடியிருப்புகளில் மாலை வீடு திரும்பும் சிறார்களின் விளையாட்டுக் காட்சிகள், ஊர்ப் பொதுக் கிணறுகளில் குளிப்பதற்காகக் கூடியிருக்கும் ஆண்கள், வழிபாடு மற்றும் சமையல்களில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இது மாலைக்காட்சி.

 

            ஆதிக்கம் புரிகின்ற அண்டைச் சாதிகளின் தொல்லை தாங்காது அன்று பெரிதும் ஆட்சி செய்த நோய்களின் தாக்கத்திற்கு பயந்து தனது இருப்பிடங்களை அடிக்கடி மாற்றி வந்த ஒரு சில கிளை வழியினரும் பின் மத மாற்றங்களில் கிடைக்கப் பெற்ற ஒரு வித பாதுகாப்புணர்வும் பிற சாதிகளின் மனமாற்றமும் இவர்கள் நிலைத்து வாழ இடங்கொடுத்தது.

 

            தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளைக் கொண்டு வாழ்ந்து வருகின்ற வாதிரியார் இனம் எவ்வாறு தனது வாழ்வியல் மாற்றங்களைப் பெற்றது என்;பதைக் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஆய முற்படுகிறது இக்கட்டுரை.

 

 

 

 

 

 

1.         மதமாற்றம்

2.         கல்வியறிவு

3.         தொழில் முறை மாற்றம்        – மில்களில் பணியமர்வு

             பத்திhpகைகளில் பணியாற்றல் தினத்தந்தி, மாலைமுரசு,                                                            தினகரன் குழுமம்

                                    – அரசுப்பணி, நகர்ப்புற வியாபாரம்

                                    – விசைத்தறி

4. விரிந்த பொருளியல் ஏற்றத்தாழ்வும் எதிர்காலமும்

 ஆகியன இவர்களின் வாழ்வியலில் மாற்றங்களுக்கான காரணங்கள் என அறியப்பட்டு அதன் வழியிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

            இவை குறித்த விரிவான ஆய்வுகள் தொடர வேண்டும், அல்லாமல் இச்சிறிய சமூகம் தனது வேர்களை இழந்து விடும் அபாயமும் இதனூடே இருந்து வருகிறது என்பதும் கண்டறியப்பட்டது. இனி மாற்றங்களின் காரணிகள் குறித்து விரிவாகக் காணலாம்.

 

மதமாற்றம் :

 

            குறிப்பாக நெல்லை மாவட்டம் முழுவதும் 19-ஆம் நூற்றாண்டில் ஒப்பிலக்கணம் எழுதிய போப் கால்டுவெல் எனும் தமிழ்நாடு மதப்போதகரால் கிருத்துவம் பரப்பப்பட்டது. இன்றைய தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம்; என்றழைக்கப்படும் ஊரில் பிற இனத்தவர்களுடன் வாதிரியார்களும் கணிசமான அளவில் கிருத்துவத்திற்கு  மாற்றப்பட்டுள்ளனர்.

 

            சாதுராக் எனும் மதப்போதகர் முயற்சியினால் செந்தியம்பலம் என்ற ஊரில இருந்த அனைத்து வாதிரியார்களும் கிருத்துவத்துக்கு மாற்றப்பட்டு, கத்தோலிக்க கிருத்துவர்களாயும், பிராட்டஸ்டெண்ட் கிருத்துவர்களாயும் தழுவினர். திரு.நம்மயாழ்வார் வாதிரியார் ஞானசிகாமணி எனப் பெயரிடப்பட்டு முதல் கிருத்துவராகி தொண்டாற்றியமைக்காக அவரது பெயரால் இன்றும் ஒரு தொடக்கப்பள்ளி சாதுராக் (சாலைப்புதுhh;) தெருவில் உள்ளது. இதன் வழி வாதிரியார்கள் தங்கள் தொடக்கக் கல்வியறிவு பெற்று பின்நாட்களில் அயல் நாடுகளுக்குச் சென்று கிருத்துவத் தொண்டு புரிந்திருக்கின்றனர். இன்னும் பலர் ஆங்கிலக் கல்வியின் பயனாக அரசுப் பணிகளுக்காக மதகுருமார்களால் பரிந்துரைக்கப்பட்டு, பணியிலமர்ந்து வேறு சாதிகளில் மணமுடித்து சமூகப் பற்று சிறிதும் இல்லாதவராய் மாறி விட்டிருந்தனர். எனினும் இந்த மதமாற்றம் வாதிரியார்களுக்கு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வியறிவு பெறக் காரணமாயிருந்தது எனில் மிகையாகாது.

 

            இதே காலத்தில் தான் பிற ஊர்களிலும் (பரமன்குறிச்சி, மகிழ்ச்சிபுரம் போன்ற ஊர்கள்) மதம் மாறியுள்ளனர். பரமன் குறிச்சியில் அன்று இருந்த ஆதிக்க இனங்கள் அரசு நிலங்களை பட்டா போட்டு ஆளுகை உந்துதலால் வாதிரியார் குடியிருப்பைக் கூட உடைமுள் வைத்து வேலி அமைத்து இந்த இடம் எனக்கு உரிமையானது எனக்கூறித் துன்புறுத்தியிருக்கின்றனர். இதனால் இங்கிருந்த வாதிரியார்கள் கிருத்துவப் பாதிரியாரைப் பார்த்து தமக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் களைய வேண்டினர். அதன்வழி கிருத்துவப் பாதிரியாரும் தனது பணபலத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி இவர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறார்.

 

            ஆக.19-20-ம் நூற்றாண்டுகளில் வாதிரியார்களில் பெரும்பான்மையோர் கல்வி, பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காகவே மதம் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

 

            இன்றையநாள் வரையிலும் மதமாற்றங்கள் இதே காரணங்களை முன்வைத்தே நிகழ்கின்றன என்பது இங்கு நினைவு கூறத்தக்கது. மத மாற்றங்களின் வழி வாதிரியார்களின் ஒரு பகுதியில் வாழ்ந்தவர்கள் வளம் பெருகியவர்களாயும் அதன்வழி பெரு வியாபாரி என்று அழைக்கக்கூடிய மாஸ்டர் வீவர்களாயும் பரிணமித்தார்கள். இதுவே நாளடைவில் பிற வாதிரியார்களையும் வாழ்க்கை வளம் என்ற குறிக்கோளை நோக்கிச் சொல்ல வழி கோலியது.

 

கல்வி நிலை :

 

மதம் மாறிய வாதிரியார்களின் வாழ்வுமுறை பெரிதும் மாறி இருந்தது. மாதாந்திர வௌ;ளியைக் கடைப்பிடித்து வந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளை ஓய்வு நாளாக்கி கோவில்களுக்குச் சென்று வர ஆரம்பித்தனர். இதே காலகட்டத்தில் பள்ளிக்கூடங்களும் பரவலாக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட வாரச்சம்பளத்தில் நெய்து கொண்டிருந்த வாதிரியார்களுக்குக் கல்வி பெறுவது இலகுவாகவே இருந்தது. ஆயினும் கல்லூரிக்கல்வியைத் தொட்டவர்கள் குறிப்பிட்ட ஒரு சிலரே. காரணம் அன்றிருந்த பெருங்கட்டணமும், அறியாமையும் ஆகும்.

 

            ஆரம்ப கல்வியை அன்று வாதிரியார் அனைவரும் பெற்றிருந்தனர். இது வாதிரியார்களின் மனப்போக்கை பெரிதும் மாற்றியிருந்தது. தங்களளவில் நெசவுக்கு குறைந்த கூலி தரப்படுவதாகவும், மாஸ்டர் வீவர்கள் தங்களை உறிஞ்சுவதாகவும் உணரத் துவங்கினர். இதற்கு மாற்றாக ஏதும் அறியாக நிலையில தங்கள் குழந்தைகளுகு;க கைத்தறித் தொழில்மீது ஒரு வெறுப்பை உருவாக்க முடிந்தது. இதன்வழியே ஒரே கிராமத்தில் காலங்காலமாக கைத்தறி நெசவு செய்து கொண்டிருந்த வாதிரி இன இளைஞர்கள் வேற்றூர்களில் வெவ்வேறு வேலைகள் செய்யப்பழக்கப்பட்டனர். குறிப்பாக அரசுப்பணி, அச்சுப்பணி, வியாபாரம் மில் வேலை போன்றவற்றில் ஈடுபட்டனர்.

 

தொழில்முறை மாற்றங்கள்

 

            50-60 களில் நசிந்து வந்த கைத்தறித்துறை நாடெங்கிலும் நெசவாளர்களுக்கும் தென் தமிழகத்தில் வாதிரியார்களுகு;கு பேரிடியாகவும் இறங்கி வந்தது. ஒரு வேளை உணவுக்கும் தொய்வின்றி நெய்ய வேண்டிய கட்டாயமும், கல்வியினால் வெளியு+ர் செல்ல விழைந்த வாதிரியார் இன இளைஞர்களும், இதே காலத்தில் தொழில் முறை மாற்றத்தை தீவிரமாக சிந்திக்கத் தூண்டியது. இதன் விளைவாகவும், அன்று தொழில் மயமான வளர்ச்சியில் கீழ்க்கண்ட மாற்றங்கள் வாதிரியார்களுகு;குக் கிடைக்கப்பெற்றது.

 

(அ) மில் மற்றும் துணை ஆலைகளில் வேலை வாய்ப்பு

 

            தூத்துக்குடியில் ஆர்.வி.மில் (மதுரா கோட்ஸ்) நாசரேத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூல் ஆலை, இவற்றில் குறிப்பிட்ட வாதிரியார்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இதனால தொழிலாளி எனும் உணர்வும், சங்கம் இவற்றின் போக்குகளும் இவர்களுக்குத் தெரிய வந்தது. தனது குலத்தொழிலான நெசவுக்குத் தொடர்பு இருப்பதால், துணி ஆலைகளில் இவர்கள் செல்வாக்குடன் இருந்தனர். இதே வேளையில் மகிழ்ச்சிபுரம், சாயர்புரம் போன்ற ஊர்களில் இருந்த வாதிரியார்கள் பம்பாய், சூரத் போன்ற ஊர்களுக்கு பயணப்பட்டு இதே போன்ற நூல், துணி ஆலைகளில் பணியில் சேர்ந்தனர். அங்கு அதன் தொடர்ச்சி இன்று வரையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

(ஆ) தினத்தந்தி குழுமம் : இதே காலத்தில் திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களால் நிறுவப்பட்ட தினத்தந்தி மற்றும் மாலைமுரசு நாளேடுகளுக்கு தேவைப்பட்ட பணியாளர்கள் பெரும்பாலும் வாதிரியார்களாகவே இருந்தனர். தனது கிராமமான காயா மொழிக்கருகிலிருக்கும் பரமன்குறிச்சி மற்றும் சாயர்புரம் ஆகிய ஊரில் இருந்த வாதிரியார் இன இளைஞர்களின் நடத்தையில் பெரும் நம்பிக்கை வைத்திருந்த திரு.ஆதித்தனார் அவர்களுக்கு இவர்களை பணியாளர்களாகத் தேர்ந்தெடுக்கக் காரணியாக இவர்களின் நுணுக்கமான நடைமுறை இருந்திருக்கும் என்பதை நினைத்து போற்றலாம். அதன் தொடர்ச்சியாக பெரிதும் வளர்ச்சியுள்ள தினத்தந்தி குழுமத்தில் இன்றளவும் வாதிரியார் இனத்தவர்களுக்கு வாய்ப்பு மிகுதியாகவே உள்ளது என்றும் உறுதி கூறலாம். கடினமான காலத்தில் தினத்தந்தி குழுமம் வாதிரியார் இனத்திற்கு கை கொடுத்திருக்கின்றது என்பதை எண்ணும்போது இந்த சிறு சமூகம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்றே கூறலாம். இதன் தொடர்ச்சியாக தனது குலத்தொழில் சம்பந்தப்பட்ட தொழில்களை விடுத்து முற்;றிலும் புதியதான அச்சுத்தொழிலுக்கு மாறிய வாதிரியார்இனத்தவர்கள் அங்கும் தனது கூரிய அறிவால் வெற்றி கண்டனர் என்றே கூறலாம்.

 

(இ) அச்சகமும், எழுத்துத்;துறையும் :

 

            தினத்தந்தியின் மூலம் பெறப்பட்ட அச்சுத்துறை சம்பந்தப்பட்ட அறிவும், அனுபவமும் வாதிரியார் சிலர் தனக்கென்று அச்சுக்கூடங்கள் அமைக்கவும், செய்தி ஆசிரியர்களாகவும் வார இதழ்களுக்கு கட்டுரை எழுதும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றனர் எனில் மிகையாகாது.

 

(ஈ) அரசுப்பணி

 

            நெருக்குதலுக்குள்ளாகும ஓர் இனம் வீறு கொண்டெழும் என்பதற்கிணங்க அன்று வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாத வாதிரியார் இனம், கல்வியில் விழிப்புணர்வு பெற்று வெறி கொண்டு படித்தது என்றே கூறலாம். இதன் விளைவாக, ஊருக்கு 10 பேர், தெருவுக்கு 5 பேர் எனப்பல ஊர்களில அரசுப்பணியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இது இவர்களுக்கு நகரங்களுக்குக் குடி பெயர்ந்து செல்லும் வாய்ப்பையும், பிற சமூகத்தினர்களுடனமன தொடர்பை வலுப்படுத்தும் நிகழ்வையும் பெற்றுத்தந்தது. இது முறையே நன்மையும் தீமையும் உள்ளடக்கியதாக இருந்தது.

 

            தனக்கென தனித்த பண்பாடுகளைத் கொண்டிருந்தும், அகமண உறவுகளில்அதீத நம்பிக்கை கொண்டிருந்தும், கிளைப் பொருத்தம் பாhக்காமல் திருமணப் பேச்சே இல்லை என்றிருந்த பழக்க வழக்கங்கள் இங்குதான் மீறப்பட்டது. புதிதாக வேற்றூர்களில் வேலையின்பொருட்டு தனித்திருந்த வாதிரியார் இளைஞர்கள் கலப்;புத் திருமணம் புரிந்து கிராமங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். அவர்களின் பணம், வறுமையிலிருந்த பெற்றோர்களின் வாயை அடைத்துவிட்டது. இது பின் நாட்களில் இவர்களின் அடுத்த தலைமுறையில் மிகப்பெரிய நெருக்கடியைத் தந்தது. இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளைத் திருமணம் முடித்து வைக்க பெரிதும் சிரமத்திற்குள்ளானார்கள் என்பதே நகரங்களில் குடி பெயர்ந்திருந்த இவர்கள் பிற இனங்களுடன் நகரக்கலாச்சாரத்துடன இணைந்து காணாமல் போயினர் என்பதும் வாதிரியார் இனத்துக்கு ஏற்பட்ட தொய்வு என்றே கூறலாம்.

 

            ஆயினும் இன்றைய தலைமுறையினர், இந்த குறைபாடுகளை நன்கு அறிந்திருந்து சமூக விழிப்புணர்வை எற்படுத்தியிருக்கிறார்கள் என்பதும், கடந்த காலங்களைப் போல் தன்னிலை மறந்த இளைஞர்களாய் இவர்கள் இல்லாதிருப்பதும் மேலக்கலாச்சாரத்தினையும், வௌ;ளை இனக் கவர்ச்சியை வெறுத்து ஒதுக்கியவா;களாயும் இருக்கிறார்கள்.

            குறிப்பாக ஊரை விட்டு, கிராமத்தைவிட்டு வெகு தூரத்தில மருத்துவ பணியாற்றிய பல மருத்துவர்களைப் புறந்தள்ளி, தனது சொந்த கிராமத்திலேயே மருத்துவப் பணியாற்றும் தெங்கம்புதூர் மருத்துவர் திரு.மோகன்தாஸ் எனும் இளைஞரே இத்தலைமுறைக்கு எடுத்துக்காட்டு எனலாம்.

 

உ. நகர்புற வியாபாரம் தொழில் :

            அரசுப்பணிக்குச் செல்லக்கூடிய அளவுக்கு வாய்ப்பு பெறாதவர்களும் நகர்ப்புறம் பெயர்ந்தால் நல்லபடி செழிப்பாக வாழலாம் என்ற எண்ணம் மேலோங்கிட நகரங்களில் குடியேறி மிதிவண்டிஃ தள்ளுவண்டிகளில் அலுமினியம், எவர்சில்வர் போன்ற பாத்திரங்கள் விற்கும் வியாபாரிகளாயினர். இதுவும் வறுமையை மாற்றிவிடவில்லை. மாறாக, நிழலில் இருந்து செய்து கொண்டிருந்த வாதிரியார்கள் நகரங்களில் வெயிலில் காய்ந்து வீதியில் அலையும் போதும் நெய்தற் தொழிலின் சிறப்பை அறிந்தாரில்லை. வேப்பலோடை போன்ற ஊரிலிருந்து நகரம் நோக்கி வந்தவர்கள் சிறிய அளவிலான இனிப்பகங்களையும், நடத்தி வருகின்றனர்.

 

            1990 களில் பரமன்குறிச்சியிலிருந்து புலம் பெயர்ந்த படித்த இளைஞர்கள் சிலர் இரும்பு கம்பிகள் தயாரிக்கும் ஆலைகளில் கணக்காளர்களாயும், பின் நம்பிக்கைக்குரிய மேலாளர்களாயும் தரம் பிரித்;;து கொள்ளும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  பொருளாதார ரீதியாக முற்றிலும் புதிய மாறுபட்ட அதாவது இழையில் இருந்து இரும்புக்கு என்ற நிலைக்கு மாறி அதிலும் வெற்றி நடைபோடுகின்றனர் எனில் இவர்களின் நுட்பமான அறிவுக்கு எதுவும் கைகூடும் என்பது புலனாகிறது.

 

ஊ.விசைத்தறி

 

            முற்றிலும் விவசாயம் மட்டுமே தெரிந்திருந்த வேளாளர்களாயிருந்து பருத்தி விவசாயம் பார்த்ததிலிருந்து கைத்தறி நெசவுக்கு மாறிப்போன வாதிரியார்கள், கைத்தறித் தொழிலிலேயே தங்கிவிட்டனர். அரசு முயற்சித்து இவர்களுக்கு ஏற்படுத்தி தந்த கூட்டுறவு சங்கங்களும் நேர்மையாய் செயல்பட முடியாததால், கீழ்நிலைக்கு சென்றுகொண்டிருந்த கைத்தறித் தொழிலுக்கு மாற்;;றாக வேறு வேலைகளைத் தேடிக் கொண்டிருந்த வாதிரியார்களுக்கு தனது குலத்தொழிலை புத்துலகத்திற்குத் தகுந்தவாறு மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் 1995 வரையிலும் ஏற்படாமலிருந்தது மிகவும் ஆச்சரியம் தான்.

 

            பின் சூரத்திலிருந்து திரும்பிய சாயர்புரத்திலிருந்த சிலர் இப்போதுதான் விசைத்தறி அமைத்து நெய்து வருகின்றனர். இதுபோல் வாதிரியார் இனத்திற்கே முதன் முறையாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பரமன்குறிச்சி கிளை 1998-ல் பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் விசைத்தறி அமைக்க கடன் வழங்கியிருக்கிpறது. இதுவும் மாறுபட்ட சூழலில் சரியான பாதையை நோக்கி எடுத்து வைத்திருக்கும் முதல் அடி என்றே கூறலாம். இதைப்பற்றிய சரியான சிந்தனைகளை முன்னெடுத்து செல்லக்கூடிய வாதிரியார்களை அடையாளம் கண்டு ஆக்கப் பணியில ஈடுபட வைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையாளரின் அவா.

 

4. விரிந்த பொருளியல் ஏற்றத்தாழ்வும் எதிர்நோக்கியிருக்கும் சவால்களும்

            இதுகாறும் கூறப்பட்ட செய்திகளிலிருந்து நாம் பெறுகின்ற ஒரு முடிவு இன்னைய காலத்தில் வாதிரியார் சமூகம் பெரிதும் நகரங்களிலும், குறைவாக கிராமங்களிலும் தனது தனித்த பாரம்பரியத்; தொழிலை இழந்து

            தந்தி ஊழியர்களாகவும்

            வங்கி ஊழியர்களாகவும்

            வணிகர்களாகவும்

            வாத்தியார்களாகவும்

            சிறிய இனிப்பக உரிமையாளர்களாகவும்

            அச்சுக்கூட உரிமையாளர்களாகவும்

            அரசுப்பணியாளர்களாய்

            தனியார் துறையில் பணி புரிபவராகவும்

            சிறிய அளவில் மருத்தவர்களாயும்

            மிகக் குறைவாக விசைத்தறி உரிமையாளர்களாயும மாறிப் போனதன் பயன் இவர்களுக்குள்ளே விரிந்த, பரந்த அளவில் பொருளாதார ஏற்றத் தாழ்வு காணக்கிடக்கிறது.

 

            கிராமத்தில் ஒரே தெருவில் ஒரு வேளைச் சோற்றுக்குத் திண்டாடுபவரும், தொலைபேசியில் பக்கத்து வீட்டோடு உறவாடுபவர்களும், வசிப்பதுமே இவா;களின் ஏற்றத் தாழ்வுக்கு சாட்சியாக நிற்கிறது. நகரங்களில் இந்த ஏற்றத் தாழ்வுகள் தெரிவதில்லை. எனினும் வாதிரியார் வீட்டுத் திருமணத்திற்கு வந்திருக்கும் சைக்கிள்களின் எண்ணிக்கையையும் அதே அளவில் வந்திருக்கும் மோட்டார் பைக்ஃகார்களையும் காணும்போது இதன் விரிவு இன்னும் அதிகமாக இருப்பது கண்கூடு. இதன் விளைவுகளை எண்ணும்போது, அக மண உறவு முறையில் கெட்டி தட்டிப்போன இன்றைய சமூகத்தில் வாதிரியார்களில் வசதிமிக்கவர் வறியவர் என இவர்கள் இரு வேறு சாதியினராக மாறிவிடுவரோ என்ற கருத்தும்கூட உருவாக வாய்ப்பு உள்ளது.

 

            இன்று இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் இரு பெரும் சவால்களாக,

1.         பொருளியல்உயர்வு

2.         தனக்கான தொழிலை மீட்டுருவாக்கம் செய்து பின் விசைமயப்படுவது.

 

இந்த இரண்டு செய்திகளுமே ஒன்றுக்கொன்று உறவாடுபவை. முரணானது அல்ல. இரண்டாவது விஷயமான தொழில் மீட்டுருவாக்கமும், விசைமயமாக்கலும் என்பதே வாதிரியார்களுக்கு இழந்து விட்ட பண்பாட்டு விஷயங்களை வென்றெடுக்கக் கூடியதாயும், ஏற்றத் தாழ்வுகளைத் துடைத்தெறியும் அம்பாகவும் அமையும ;என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை என்றே கருதலாம்.

 

            இதன்வழி, முதல் முயற்சியாக சென்னையிலிருக்கும் பரமன்குறிச்சி வாதிரியார்கள் அமைச்சருக்குத் தெரிவித்து விசைத்தறியமைக்க அரசுதவி பெற ஆவன செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

 

            இதற்கு எடுத்துக்காட்டாக கட்டு மரங்களில் சென்று மீன் பிடித்துக் கட்டுப்படியாகாமல்அரசு உதவியுடன் விசைப்படகுகள் பெற்று தனது தொழிலை மாற்றாமல், அதே வேளையில் வருவாய் பெருக்கத்திற்கும் வழி செய்த பரதவர்களைக் காட்டலாம். இவ்வாறு வாதிரியார்களும் விசைத் தறிகள் பெற்றார்களேயாயின் மிக்க குறைவான காலத்திலே இச்சமூகம் தனது சிறியஃசீரிய உழைப்பால் முன்னுக்கு வருவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

 

            இன்று இதற்கு உறுதுணையாக சமூகச் சிந்தனையுள்ள மருத்துவர்கள், பெரிதும் அக்கரை கொண்ட வங்கியாளர்கள், கவனத்துடன் உற்று நோக்கும் பத்திரிகையாளர்கள், துடிப்பான இளைஞர்கள், விசைத்தறியில் அனுபவமிக்க இளைஞர்கள் இவர்களின் ஒன்றுபட்ட சிந்தனை வாதிரியார்களுக்கு எதிரேயிருக்கும் ஏற்றத் தாழ்வெனும் சவாலை முறியடிக்கும்.

 

           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2. நெய்தற்கலையும் – நெறிமுறைகளும்

 

            தனக்கென தனித்த பழக்கவழக்கங்களையும், பெருமை மிக்க பாரம்பரியங்களையும் கொண்டு, குறிப்பிட்ட புவியியல் எல்லைப்பகுதியை உள்ளடக்கி, தனித்தே இருந்து தான் வாழும் நாட்டின்கண் ஒடுக்குகிற வேறு எந்தச் சமூகத்தையும் வெறுத்தொதுக்கு – ஒரே முன்னோரிடம் இருந்து பிரிந்;த தலைமுறைகள், பல பட்டங்கள் தாங்கி வாழுகின்ற இனம் மள்ளரினம்.

            இவ்வினத்தில வாதிரியார் பட்டம் தாங்கி தென்தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்ற வாதிரியார் எனும் பிரிவினரின் நெய்தல் கலை குறித்து ஆய்கிறது இக்கட்டுரை.

 

வாழிடம்

            தென்மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம், தங்கம்மாள்புரம், சிவ்வர்புரரும், பரமன்குறிச்சி, சாயர்புரம் போன்ற ஊர்களிலும், நெல்லை மாவட்டம் மடப்புரம், மகிழ்ச்சிபுரம் போன்ற பகுதிகளிலும், இராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டியிலும் நெய்தல் தொழிலைக் குலத்தொழிலாகக் கொண்ட வாதிரியார்கள் வாழ்ந்து வருகின்றனர். மேற்கண்ட ஊர்களில் நில உடைமை கொண்டு வாதிரியார்கள் நெய்தல் தொழிலுடன் விவசாயத்தினையும் தமது தொழிலாக் கொண்டிருக்கின்றனர். (1) “பருத்தியை பயிரிட்ட உழவர்கள் (மள்ளர்கள்) பிற்றை நாட்களில் நெசவுத்தொழிலை ஏற்றுக்;கொண்டு வாதிரியார் பட்டம் வாங்கினர்” என்று முனைவர் ஞானசேகரன் கூறுவார்.

 

நெசவு :

            “உடை பெயர்த்தெடுத்தல்” (தொல்காப்பியம் – மெல்-14)

            “பருத்தி நெசவு முதன் முதல் இந்தியாவில் தான் நெய்யப்பட்டதென்றும், அங்கிருந்தே மேலநாடுகளுக்குப் பரவின”தென்றும் வயவா; – கான் மார்சல் கூறுவதாக மேற்கோளிடுகிறார் தேவநேயப்; பாவாணர்.

            “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” (புறம்-189) எனும் நக்கீரரின் கூற்று, சங்க காலத் தமிழர்கள் இடையில் ஓர் ஆடையும், மேலே ஒரு துண்டும் அணிந்திருந்தனர் என்பதைக் கூறும் காலக்கண்ணாடியாக உள்ளது.

            இங்ஙனம் உலகில் உழவினர்க்கடுத்து தொன்மைத் தொழிலாக நெசவுத் தொழிலை மேற்கொண்டிருக்கும் வாதிரியார்கள் தனித்தெருவில் வசித்து வருகின்றனர். இன்றும் வாதிரியார் தெரு என்று அழைக்கப்படும் தெருக்களை தென் மாவட்டங்கிளல் குறிப்பிட்ட ஊர்களில் காணலாம்.

            அழகிய மெல்லிய இழைகளால் ஆடை நெய்யப்பட்டது. அஃது பாம்பின் சட்டையை போன்றிருந்தது என்று புறநானூறு கூறுவனம் மூலம் கைத்தறியால் துணி நெய்து வரப்பட்டது என்பது அறியப் பெருகிறது.

 

பருத்திச் சேலை :

            ஆங்கிலேயர் ஆட்சியின்போது, இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலியில் பருத்தி விவசாயம் பல்கிப் பெருகி நடைபெற்று வந்தது. பரமன்குறிச்சி பள்ளர்கள் (வாதிரியார் பட்டம் வாங்கிய மள்ளர்கள்) நெசவுத்தொழில் செய்து வாழ்ந்து வந்தனர். வௌ;ளையரது வியாபாரச் சுரண்டலினால், இவர்களது தொழில் நசிந்தது. அவர்களில் சிலர் வௌ;ளையரால் கொடுமைப்படுத்தப்பட்டனர் என திரு.நா.வானமாமலை கூறுவதாக செல்வி பரமெஸ்வரி தனது “இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமும் – தேவேந்திர குல வேளாளர்களின் பங்கேற்பும்” என்;னும் கட்டுரையில் மேற்கோளிடுவதிலிருந்து பண்டைக்காலத்தில வாதிரியார்கள் பருத்தி நெசவு செய்தனர் என்பது புலப்படுகிறது.

 

            இன்றும் வாதிரியார்கள் பருத்தி நூலினாலேயே வேட்டி மற்றும் சேலை நெய்து வருகின்றனர். பரமன்குறிச்சியில் கூட்டுறவு சங்கம் அமைத்து சுமார் 500 கைத்தறிகளில் பருத்தி சேலை நெய்யப்பட்டு வருகிறது. மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் அரசின் உதவியால் கடன் பெறப் பெற்று பருத்தி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு தொழில் நசிவுறாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

 

பாவாற்றும் – புல்வேரும்

 

            பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கை.

            “நூலினு மயிரினு நுழைனுற் பட்டினும்

            பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து

            நறுமடி செறிந்த வறுவை வீதியும்: (சிலப் 14-205-217)

 

                        காருகர் எனப்படும் நெசவாளர்களுக்கெனத் தனித்தெருக்கள் இருந்தன என்பதை மேற்காண் சிலப்பதிகாரப் பகுதி காட்டும். அவ்வண்ணமே இன்றும் வாதிரியார்கள் தமக்கெனப்பட்ட தெருக்களில் வாழ்ந்து வந்து நெய்தல் தொழிலை மேற்கொள்கின்றனர்.

 

                        இன்று பாவாற்றுதல் எனப்படும் பாவு நூலை நெய்வதற்குத் தக்க ஆற்றுப்படுத்துதல் என்ற செய்முறை வழக்கொழிந்து விட்டாலும் (ஆனால் குமரி மாவட்டம தெங்கம்புதூர் – பனிக்கன் குடியிருப்பில் சுகுமார் வாதிரியார் இன்றும் இத்தொழிலை மேற்கொள்கிறார்) அம்முறையினால் இவர்கள் எவ்வாறு கட்டுக் கோப்புடனும் ஒற்றுமை மற்றும் சுறுசுறுப்புடனும் வாழ்ந்தார்கள் என்பதை கீழ்க்கண்டவாறு அறியலாம்.

 

                        அன்று ஆற்றுப்படுத்த வேண்டிய பாவுக்கு உரிமையாளர் அதிகாலையில் எழுந்திருந்து தமது நீண்ட நெடிய தெருவில் 100 மீட்டர் நீளமுள்ள பாவை ஆற்றும் பொருட்டு, மூதலைக்காலும், இளந்தலைக்கலும் நட்டுகிறார். பாவுக்கு முதலில் வருகின்ற மூதலைக்காலிருந்து 10 மீட்டர் இடைவெளியில் தாங்கு குழி தோண்டிபின் பனைமட்டையில் செய்யப்பட்ட தாங்கி மட்டையை நட்டு இடைதாங்க கம்பைப் போட்டுச் செல்கிறார்.

 

            இதே வேளையில் பாவுக்குத் தேவையான பசை (அரிசிமாவு செய்து அல்லது ஏழிலைக்கிழ்ஙகு மாவினால்) தயாரிக்க தனது வீட்டில் உள்ள பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பின் பாவு நீட்டப்படுகிறது. அப்போது புணி எனப்படும் பின்னல்களுக்கிடையில் அலயக்கம்பு மற்று துவரி போடப்படுகிறது. இந்நேரத்தில் தெருக்களில் உள்ள ஏனையோர் 10 மீட்டர் இடைவெளி கொண்ட தட்டு எனப்படும் பகுதியில் உள்ள பாவினை அனைத்து விரித்து பசை ஏற்ற வழி வகுக்கிறார்கள்.

 

            தட்டுக்கு இருவரைன குறைந்தபட்சம் 20 பேர்கள் ஒன்று கூடி ஒரே குழுவாயிருந்து பணி முடிக்க வேண்டும். பசை ஏற்றப்பட்ட பாவில் காலதாமதம் செய்தால் முறக்கேறிப் போய்ப் பாழாகிவிடும் என்பதும் இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இதனால் ஒற்றுமையுடன் வாழ்தல் கூடிப்பணி புரிதல் எனும் பண்பாட்டு நிலை இவர்களிடம் அதிகம் உள்ளது. சண்டையிட்டால் தொழில நசிவு என்ற அச்சம் காரணமாக மிக ஒற்றுமையுடன் வாழ இவர்களுக்கு பாவாற்றும் தொழல் முறை பெரிதும் உதவியிருக்கிறது.

 

            இந்நேரத்தில் தான் உள்ளுர் விவகாரம் முதல் அகில உலக அரசியல் கூட விவாதிக்கப்படுகிறதால் இவர்கள் அறிவுக் கூர்மையும் பெற்று விடுகிறார்கள்.

 

            அன்று உழவர் பெருங்குடி மக்களாயிருந்ததால் சேவல் கூவிடும் போது சுறுசுறுப்புடன் (மள்ளர்) எழுந்திருந்து இத்தொழிலில் ஈடுபடுவது இவர்களுக்குச் சிரமமாயிருப்பதில்லை.

           

            ஆக மனித குலத்தின் மிக அரிய பண்பாட்டு நிலைகளான, ஒற்றுமை, பொறுமை, சுறுசுறுப்பு எனப்பட்ட மூன்று நிலைகளை வாதிரியார்கள் எனப்படும் மள்ளர்களுக்கு தனது தொழில் முறையில் பாவாற்றுதல் மூலமே கிடைக்கப் பெற்றமை மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

 

            புல் வாழித்தல் எனும் சொல் இங்கு புல்லைக் கொண்டு கட்டிய ஒருவகை நெடிய தூரிகையினால் பாவு நூலினை மதர்க்கச் செய்தல் அல்லது வாழிப்பாக்குதல் எனும் பொருளிலே பேசப்படுகிறது. வாழித்தல் எனும் அழகிய பழந்தமிழ்ச் சொல் எவ்வாறு வாதிரியார்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதிலிருந்து இவர்கள் பழம் பெரும் தமிழர்களாம் மள்ளர் மரபினர் என்பது விளங்கும்.

 

ஆலையும் வீடும் :

 

            “நல்லில்” என்றழைக்கப்படும் மள்ளர் குடிகளை நாம் இலக்கியம் நெடுகிலும் காணலாம். அதன் சிறப்பினைப் பெரும்பாணாற்றுப்படை இவ்வாறு விவரிக்கும் (185-191)

 

            “நெடிய சுவர்களைக் கொண்டிருந்த வீடுகளில் வண்டிச் சங்கரங்களும், கலப்பைகளும் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. முன்னாலிருந்த பந்ததில் யாகைள் நின்றாற்போல் குதிர்கள் இருந்தன. பக்கத்தில் மாட்டுத் தொழுவம் இருந்தது. வைக்கோலால் வேயப்பட்டிருந்த இவர்கள் வீட்டிற்கு முள்வேலி இடப்பட்டிருந்தது”.

 

            அவ்வாறே ஆலையின் தாழ்வாரங்களில் கயிறுகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும (கிடையாக) அலையக்கம்பும், துவரியும் அனைவரையும் ஈர்க்கும். நெடிய சுவர்களைக் கொண்டிருக்கும் 4 தறி ஆலைகைள் இன்றும் வீட்டின் எதிரில் கட்டியிருப்பதைக் காணலாம். தறிக்;கூடம் என்பதை அழகு தமிழில் ஆலை எனப் பெயரிட்டு அழைக்கும் வாதிரியார்கள் உண்மையிலேயே போற்றுதற்குரியவர்கள்.

 

            ஆலைகளில் கீழிறங்கிய ஜன்னல்கள் நெசவுக்கு வெளிச்சம் கொடுக்கும் அதே வேளையில் தொழில்கெடாமல் யாருடனும் பேசவும் உதவி புரியும். நீண்ட மடக்குப் பாவுகளுக்கு உகந்த 20ஃ30 அடி அகலம் உடையதாய் இருக்கும். ஆலையின் ஓரத்தில் கலையம்சத்துடன் செய்யப்பட்டிருக்கும் இராட்டினம் இருக்கும். ஊடு நூலைத் தார்களில் சுற்றவதற்குப் பயன்படும் நேரான கம்பிகளுக்கு ‘கதிர்’ எனப் பெயரிட்டிருப்பதிலிருந்து இவர்களின் தமிழுணர்வு நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். ஏனெனில் சூரியக்கதிர் போல் நேராக இல்லாத எந்தக் கம்பியிலும் தார் அல்லது கண்டு சுற்றுவது கடினமும் இரைச்சல் மிகுந்ததாயும் இருக்கும்.

 

            கரையான் பாவு நூலில் எள்ளளவும் ஏறிவிட இடங்கொடுக்காமல் தினமும் ஊன்றிக் கவனித்து ஆலையைச் சுத்தம் செய்யும் வாதிரியார் இனப் பெண்களுக்கு இணை இவர்கள்தாம்.

 

            அகன்ற முற்றத்திற்கு எதிரில் இவர்களின் வீடு அமைந்திருக்கும் நெடிய பாய்களில் (நெல் பாய் என்;;றே பெயர்)  நெல்லைக் காய வைப்பதற்கேற்றதான அந்த முற்றம பெண் குழந்தைகள் விளையாடவும் பயன்பட்டிருக்கின்றது.

 

            நெய்த புடவைகளை கம்பிகளில் சுருட்டி, பிரித்து அப்படியே ஆலைகளில் கட்டியுள்ள கொடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் அழகு எவரையும் மகிழ்விக்கும்.

 

            நிறைந்த முதலிட்டு செம்மையாக ஆலை அமைக்கும் முறை வாதிரியார்களுக்கு இன்றியமையாதது. காரணம் மழைக்காலத்தில் ஒழுகிய கூரையின் கீழ் நெய்யவே இயலாது. ஈரப்பதம் அதிகமாயிருந்தாலே அச்சுகளில் விழுதுகளில் நூல் குறுக்கும் நெடுக்குமாக ஏறி இறங்கச் சிரமப்படும்.

 

            ஒரே சீராக ஏற்படும் தறியோசையும் இராட்டினம் கொடுக்கும் ஓசையும் ஆலைகளை மீண்டும் மீண்டும் உயிரோட்டம் மிக்கதாகவே ஆக்கியிருந்தது.

 

பாவோட்டும், கண்டு சுற்றும் :

 

            கண்டுத்தட்டு, கண்தட்டு, புணித்தட்டு என்று மூன்று தட்டுகள் கொண்டு சூழ்ச்சம் என்ற சுழல் மரத்தில் பாவோட்டப்படுகிறது.

 

 

            நூற்கட்டுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கழி, சிட்டமாக வகிர்ந்தெடுக்கப்பட்டு கண்டுகளில் இராட்டைகள் மூலம் சுற்றப்படுகிறது. வாதிரியார் தெருக்களில் மூன்று நான்கு கிழவிகள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு நாட்டு நடப்புகள் பேசிக்கொண்டு கண்;டு சுற்றும் அழகே தனி. கண்டு சுற்றுவதற்குப் பயன்படும் அழகிய மூங்கில் குழல்கள் எவ்வாறு வண்டுகள் துளைக்காமலும், உளுத்துப்போகாமலும் நெடுநாளுக்குப் பயன்படுகிறதென்பதை எண்ணிப் பார்க்கையில் அதிசயமாகத்தான் இருக்கிறது.

 

            சந்தையிலிருந்து வாங்கி வரப்பட்ட மூங்கில் குழல்களை அரையடி அளவில் சீராக வெட்டப்பட்டு, வெறுந்தண்ணீரில் வேக வைத்தால் வளைந்து விடும் என்பதால், நெல் அவிக்கப் பயன்படும் பானைகளில நெல்லின் மீது கட்டுக்கட்டாக செங்குத்தாக நிறுத்தப்பட்டு வேக வைக்கப்படுகிறது. வெந்த மூங்கில் குழல்கள் நிழலில் காய வைக்கப்பட்டு பின் கண்டு நூல் சுற்றப் பயன்படுகிறது.

 

            பாவின் நீள அகலத்திற்குத் தக்கவாறு சுற்றப்பட்ட கண்டுகள் கண்டுத்தண்டு என்றழைக்கப்படும் பகுதியில் கம்பிகளில அடைக்கப்பட்டு அதன் மெல்லிய நுனி இழைத் தட்டு வழியாகத் தொடுக்கப்பட்டு புணித்தட்டில் (பின்னல் ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டத் தட்டு) வழியாக சூழ்ச்சத்தை அடைகிறது.

 

            கண்டுகளில் இருந்து வரும் இழைகள் அறுந்து போனால் கவனித்துச் சொல்வதற்கு வாதிரியார் குழந்தைகள் பயன்படுகிறார்கள். அறுந்து போன கண்டு நின்றுபோகும். அதைக் கண்டுபிடித்துச் சொல்வதே குழந்தைகளுக்கு ஆனந்தமான விசயமாகும்.

 

            இவ்வாறு கண்ணும் கருத்துமாக ஓடப்பட்ட பாவு தெருவுக்கு வந்தபின் தான் பசை ஏற்றப்பட்டு வாழித்து ஆற்றப்பட்டு தறிக்குச் செல்கிறது.

 

நெசவும் தமிழும் :

 

            வாதிரியார்கள் தமது தொழிலுக்கு எவ்வளவு தமிழ்ச் சொற்களை நினைவில் வைத்திருக்க வேண்டும், என்பதை எண்ணும்போது நசிந்து வரும் இத்தொழில் நன்னிலையடையாதா எனும் ஏக்கம் தான் வருகிறது.

 

            எடுத்துக்காட்டாக சில சொற்களை மட்டும் நாம் இங்கு பார்க்கலாம். ஆலை, அச்சு, விழுது, புடவை, தறி, மூதலைக்கால், இளந்தலைக்கால், கப்பிக் கயிறு, கம்பு, துவரி, கலையம், தெளித்தல், வாழித்தல், புல்வேர், பஞ்சு, நிரடுதல், படமரம், தரி, தார்ப்புல், குழல், கண்டு, சூழ்ச்சம், தட்டு, கண்தட்டு, புணித்தட்டு, பாக்கால், ஊடுநூல், பிள்ளைக்குழி, தறிக்குழி, நெய்கக்குழச்சி, தண்டை, கதிர், மாலைக்கயிறு, குத்தி, தாங்கி மட்டை, இடை தாங்கி, நூல், பட்டை, பு+, மடிவைத்தல், உருளை, கூட்டுப்பலகை, ஓடம், சுண்டுக்கட்டை, இழுப்புக்கட்டை, மிதிபலகை, நின்னாடுத்தட்டு, சேலை, வேட்டி, தார், சூவை இன்னும் பல.

 

            “ஆவியன்ன வலிர் நூல் கலிங்கம்” எனும் பதிற்றுப்பத்து பாடல் வரி (4-169) களினாலும் பாலாடைக்கும் பஞ்சாடைக்கும் ஆடை என்ற பொதுப் பெயரிருந்ததாலும், பாம்பு கழற்றிய மீத்தோல் சட்டையெனப்படுவதிலும், கைத்தறி நெசவு எவ்வளது பழமையானதெனப் பு+ரிப்பு எய்துவார் தேவநேயப்;;;;;;;பாவாணர்.

 

            “உழு தொழில் வல்ல மள்ளர் கோலிய

வுறிவி னாக்கம்“ எனத்

 

            தொடங்கும் தியாகராயலீலைச் செய்யுள் (101) மள்ளர்களின் உழு நேர்த்தியை நெசவோடு உவமிக்கும். இதனை முனைவர் குருசாமி சித்தர் “தமிழ் இலக்கியத்தில மள்ளர், தேவேந்திர குல வேளாளர்” எனும நூலில் (பக்கம் 114) கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

 

            “உழவுத் தொழில் வல்லுநர்களான மள்ளர் இனத்தார் செழிப்பான நிலத்தை வளாவெடுத்த புதுத் துணி நெய்வது போல் உழுது சம்பாதி;க்கின்றனர்”.

 

            இதுவே நெய்தற் கலையின் சிறப்பிற்கொரு சான்றெனலாம்.

 

            இவ்வாறு பழம்பெருமை மிக்க ஒரு தொழிலை தனது குலத்தொழிலாகக்கொண்டு எண்ணற்ற இன்னல்களைத் தொடக்க காலந்தொட்டே எதிர் கொண்டு வரும் வாதிரியார் எனுஞ் சமூகத்தின் சிறப்பு நிலைகள் பதிவு பெறுவதில் பெருமை கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

           

           

 

3.         “கிளைவழி உறவுமுறை”

 

அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்

வருந்ததைத்தாகும் மள்ளர் எனும் பெயர்

 

–           திவாகர நிகண்டு

 

செந்தமிழ்நாட்டின் தொன்மைக்குடியினரான மள்ளர்

குலத்தவரின் எண்ணற்ற பிரிவுகளில் வாதிரியார் எனும்

குலப்பட்டம் தாங்கி தென்தமிழ்நாட்டில் வாழுகின்ற

மள்ளர்களின் கிளைவழி உறவுமுறைகள் குறித்த ஆய்வு இக்கட்டுரை

 

            பெருமை மிக்க மள்ளர் இனத்தில், வாதிரியார் எனும் பிரிவினர் தங்களது பிறப்பு, பு+ப்பு, மணவிழா மற்றும் நிறைவுச் சடங்குகள் அனைத்திலும் தாய்வழிச் சகோதரனை (மாமன்) முன்வைத்தே நடத்துகின்றனர். இன்றைய தமிழகத்தில் மாமனை (தாயின் சகோதரன்) மணமுடிக்கும் பல்வேறு சாதிகளின் மத்தியில மிகப்பெரிய மள்ளர் இனத்தின் ஒரு சிறிய பிரிவினராகிய வாதிரியார் இனம் இன்று மதமாற்றங்கள், நகர வாழ்வினால் ஏற்பட்ட வாழ்வியல் மாற்றங்கள் ஆகியவற்றால் மாறிவிட்ட சமூகச் சூழலிலும் ‘தன் இனம் பொன் இனம்’ என்னும் என்னும் பழமொழிக்கிணங்க தனது திருமணச்சடங்கில் இன்றுவரையிலும் கிளைவழி உறவைக் கடைப்பிடித்து வருவது ஈண்டு உற்று நோக்கத்தகுந்தது. தாயின் கிளையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே சகோதர, சகோதரிகள் என்னும் உணர்வு இன்றும் வாதிரியார்களுக்கு இயல்பாகவே இருந்து வருகிறது.

ஏழு பெருங் கிளைகள் :

 

            வாதிரியார்கள் தாய்வழிக் கிளைகள் எழு பெருங்கிளைகளைக் கொண்டுள்ளனர். அவை முறையே

 

1.         சைவன்

2.         பட்டன்

3.         நம்பாளி

4.         அருகப்பணிந்தான்

5.         ஆவிடைப்பணிந்தான்

6.         அருமறைக் கொடி

7.         கன்னிகை குறையான்; – ஆகும்

இவர்கள் தங்களது ஒவ்வொரு சடங்கிலும், இக்கிளைவழி உறவுகளைப் பெருமைப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. மதம் மாறிய இந்துக்களிடம் எவ்வாறு சாதி விட்டுப் போகவில்லையோ அவ்வாறே மதம் மாறிய வாதிரியார்களும் தமது கிளைவழியை எம்மதத்தைத் தழுவியிருப்பினும் காப்பாற்றி வருவது இன்றும் நோக்கத்தக்கது. இனி ஒவ்வொரு கிளையும் எவ்வாறு தோன்றியிருக்கிறது என்பதைக் காணலாம்.

           

 

1. சைவன் :

 

            தமிழர்களின் பழம்பெரும் சமயம், சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயமாகும். சிவ எனும் சொல்லுக்கு செம்மை என்ற பொருள் உண்டு. சோழர்கள் காலத்தில் சைவ சமயம் அரசின் சமயம் எனும்பெருமை பெற்றிருந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுவர். அன்றைய நாட்களில் சைவ மதத்தைத் தழுவி, சிவனை வழிபட்டு வந்தவர்கள் வாதிரியார்களில் ‘சைவன்’ கிளைச் சேர்ந்தவர்கள் எனப் பெயர் பெற்றனர்.

            சைவக்கிளையின் உட்கிளையாக பரியேறி, துலாவேறி, சேர நாட்டான் மற்றும் திமிர்ந்தான் எனப்பெயர் பெறும். இவை மேலும் ஆயத்தக்கது.

 

            “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமானது ஆகும் அறிவார்”- என்னும் திருமூலர் வாக்கிற்கிணங்க, சைவங்கிளைச் சார்ந்தவர்கள் அன்பு நெறி கொண்டு வாழ்ந்து வருகின்றனர். உயர்ந்த குறிக்கோள் ஒன்றைக் கொண்டு அதற்காக எதனையும் தியாகம் செய்யும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் சமயம் சைவமாகும். சிவன் கோவில் உள்ள வாதிரியார் குடியிருப்பை பரமன்குறிச்சியில் காணலாம்.

 

2. பட்டன் :

 

            பட்டன் எனுஞ் சொல்லுக்கு பட்டத்துக்குரியவன், அதாவது இராஜவம்சத்தில் அரசராகக் கூடிய வாய்ப்பைப் பெற்ற இளவரசன் என்று பொருள் கொள்வார் திரு.பால்வாதிரியார். எனினும் பட்டன் எனுஞ் சொல் கலைஞான பண்டிதன், அர்ச்சகன் எனும் பொருளில் விளங்கி வருவதாலும், சைவனும் பட்டனும சகோதரக் கிளைகள் என்பதாலும், சைவ மதத்தைத் தழுவி சிவனை வழிபட்ட வாதிரியார்களில் சிவனுக்கு அர்ச்சனை செய்து வந்த அறிஞர்கள்ஃமத குருக்கள் பட்டன் எனும் கிளைச் சேர்ந்தவர்கள் எனலாம்.

 

            ஆயினும் பட்டன் எனும் கிளையின் உட்பிரிவை நோக்குங்கால் பணிந்த பெருமாள் எனும் பிரிவு இருப்பதால், இவர்கள் வைணவத்தைத் தழுவியவர்களாயும் இருந்திருக்க வாய்ப்புண்;டு. திருமாலை முழுமுதற் கடவுளாகக்  கொண்ட சமயம் வைணவமாகும். பன்னிரு ஆழ்வார்களும் திருமால்பெருமையை இன்னிசையோடு பரப்பி வந்ததாக வரலாறு கூறும். இன்னும் வாதிரியார்கள் வாழும் மடப்புரம், பொத்தரங்கன்விளை தெருக்களில் பெருமாள் கோவில்கள் இருப்பதைக் காணலாம்.

 

            பக்தியே ஈடேற்றம் அளிக்கவல்லது எனும் வைணவக் கொள்கைகளை பட்டங்கிளையைச் சார்ந்தவர்கள் கடைப்பிடித்து ஒழுகி வருகிறார்கள்.

 

            பட்டனின் உட்கிளைகளாக பணிந்த பொருமாள்; அக்காலை, பு+மாலை, அவையொற்றி கிருஷ்ண வாதிரியான் என்பன.

 

3. அருகப் பணிந்தான் :

 

            அருகம் எனுஞ் சொல்லுக்கு சமண மதம் எனும் பொருள் உண்டு. அருகப் பணிந்தான் எனும் கிளையைக் கொண்ட இப்பிரிவினர் அக்காலத்தில் சமண மதத்தினைத் தழுவியவர்களாய் இருக்கலாம். சைவ சமயத்திற்கும், சமணத்திற்கும் பொதுவான கூறுகள் உண்டு. சிவனும், அருகனும் காலங் கடந்தவர்கள். முப்புரம் எரித்தவர்கள் ஆணவம், கன்மம், மாயை இவற்றை முப்புரம் என்று சைவர்களும், காமம் வெகுளி, மயக்கம் இவற்றை முப்புரம் என்று சமணர்களும் கூறுவர். திருவள்ளுவரது சமயம் எதுவென அறிய இயலவில்லை எனினும், கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை முதலிய சமண மத அறங்கள் வள்ளுவரால் போற்றப்பட்டது. சிலம்பும் சமணக் கருத்துக்களை உள்ளடக்கியது. இதன் உட்கிளை நல்லக்குட்டி, சிலுக்கவட்டி நாராயண ஆதிச்சவாதிரி, பரிதேசி.

 

4. ஆவிடைப் பணிந்தான் :

 

            ஆவிடை எனில் பராசக்தி என்று பொருள். வாதிரியாh;களின் சக்தியை வழிபட்ட கிளையைச் சேர்ந்தவர்கள் ஆவிடைப் பணிந்தான் என்று பெயர் பெற்றனர். பெண்ணை ஆதிசக்தியாய் வழிபட்டு வந்தவர்கள் தொன்மைத் தமிழர்கள். சைவ சமயம் தழைத்தோங்கி இருந்த காலததிலும் சிவ சக்தி வழிபாடு இருந்து வந்ததாக திருவிளையாடற்புராணம் பறைசாற்றும். அருகப் பணிந்தான் கிளைச் சேர்ந்தவர்களும், ஆவிடைப் பணிந்தான் கிளையைச் சேர்ந்தவர்களும் சகோதரக் கிளையுடையவர்களாவர். இவர்களுக்குள் மண உறவு கிடையாது. இலிங்க வழிபாடு சிறப்புற்றிருந்த காலத்தில் இவர்கள் சக்தி வழிபாட்டை ஏற்றிருக்கக் கூடும். ஆயினும் சமணத்திற்கும், சக்தி வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பு புலப்படவில்லை.

 

            ஆவிடைப் பணிந்தான் கிளையின் உட்கிளை நல்லாப்பணிந்தான் எனப் பெயர் பெறும்.

 

5. நம்பாளி :

           

            நம்பாளி பிரிவைச் சேர்ந்தவர்களை நம்காளி எனப் பகுத்து காளியை வணங்கியவர்கள் எனப் பொருள் கூறுவர். சைவ சமயம் மேலோங்கி இருந்த காலத்தில் பராசக்தி வழிபாடும் அதன் வழியே காளி தெய்வ வழிபாடும் இருந்திருக்கலாம் எனக் கருத வாய்ப்பிருக்கிறது. இக்கிளையின் உட்கிளைகளை நோக்குமிடத்து காரியாண்டி, மெய்யுள்ளான் எனப் பலவாகப் பிரிந்திருக்கிறது.

 

            தென்னிந்திய கல்வெட்டுகளில் மள்ளர் குறித்த குறிப்பொன்று பகுதி 8 எண்.590 வருமாறு குறிப்பிடுகிறது. “சாதனைப்படியால் உள்ள மள்ளன் பிறவியும், இவன் மள்ளி அழகியாளும், இவன் மகன் நம்பாளும், இவன் தம்பி வாளத்தானும், இவன் தம்பி ஆண்டியும், இவன் தம்பி காரியும், ஆகப் பேர் ஏழாக இந்த வகைப்படி நிலமும் மனையும் சிறப்புற வௌ;ளாட்டிகளும், 43 அடிவாரையும்…….”

 

            நம்பாளியும், காரியும், ஆண்டியும் சகோதரர்கள் என்பதும், வாதிரியார்கள் மள்ளர்களின் ஒரு பிரிவினர் என்பதும் இதன் மூலம் அறிய வருகிறோம்.

 

            நம்பாளி கிளையின் உட்கிளைகளாக காரி, ஆண்டி, கருத்தகுட்டி, மெய்யுள்ளான், கோமாளி, வௌ;ளவொட்டான், மார்த்தாண்டன், செந்தில் குறையான், பெருமாள் வாதிரியான் எனப்படும். இவை ஒவ்வொன்றும் ஆயத்தக்கது.

 

            மார்த்தாண்டன் எனும் கிளை மார்த்தாண்டன் எனும் சேர மன்னனின் வாரிசுகளாக இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு. மூவேந்தர்களின் பரம்பரைகளான மள்ளர் இனத்தில் சேர மன்னர்களின் நேரடி வாரிசுகளெனப்படும் சேரமான் பெருமாள் எனப்படும் பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்றும் கேரளத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருப்பது ஈண்டு நோக்கத்தக்கது.

 

6. அருமறைக்கொடி :

 

            இக்கிளையைச் சேர்ந்தவர்கள் மிகவும் குறைவான மக்கட்தொகையைக் கொண்டவர்கள். இதனால் இக்கிளையை அருமைக்கொடி என்றும் அழைப்பர். அருமறைக்கொடி எனில் உயர்ந்த வேத வழியை நாடிய மக்கள் குழாம் என்று பொருள். இதிகாச காலங்களில அரசப் பரம்பரையினருக்கும் ராஜ குருக்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் வழி வந்தவர்கள் இவர்கள் எனினும் மத குருக்களாக இருந்ததால் கிளை வளர்ச்சி மிகவும் அறுகிவிட்டது எனலாம். பகவத் கீதை வழங்கிய மாகபாரதத்தில் வரும் பாண்டவ கௌரவர்களுக்கு குருவாயிருந்த துரோணாச்சாரியாருக்கு அருமறைக் கொடியோன் என்னும் பெயர் இங்கு நோக்கததக்கது.

 

7. கன்னிகைக் குறையான் :

 

            கன்னிகைக் குறையான் கிளையைச் சார்ந்தவர்கள் கன்னி தெய்வத்தை வணங்கியவர்கள் என்;பர். இன்று பெண்ணாதிக்கச் சமூகத்தின் எச்சங்களாக நிற்கும் கன்னி தெய்வங்கள் முத்தாரம்மன், குமரி, செல்லி முதலிய தேவியர் தென்பாண்டி நாட்டில் பிரபலமானவர். இவற்றை பயத்தோடுதான் மக்கள்வழிபட்டனர். இத்தேவியர் கோயில்களுக்கு சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பது இன்றும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வழக்கம். வில்லுப்பாட்;டு பாடி கொடை நாட்களில் தேவியர் கதைகளைக்; கூறி வாழ்த்துவது மரபு.

 

            இத்தெய்வங்களுக்கு கொடை கொடுக்காவிட்டால் பக்தர்களை துன்பத்துக்குள்ளாக்குவர் என்பது நம்பிக்கை. இன்றும் வாதிரியார்களுக்கு முத்தாரம்மன் வழிபாடு தெற்கு பரமன்குறிச்சி, பொத்தரங்கன்விளை, சாஸ்தான் கோவில் விளை ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெற்று வருவது கண்கூடு.

 

            கன்னி தெய்வ வழிபாடு பழந்தமிழர்களிடத்து வேறு நாட்டிலுள்ள ஆதி குடியானவர்களிடத்தும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை டாக்டா. தே.ஞானசேகரன் தமது நாட்டார் தெய்வக் கதைகளில் மிகத் தெளிவாக விளக்குவார்.

 

            மேலும், மள்ளர் இனத்தின் வேறு பிரிவுகளில் பெண் கொள்ளும் வாதிரியார்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் கன்னிகைக்குறையான் கிளையைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

 

            அவ்வாறே வேற்று இனங்களில் மணமுடித்து விட்ட நகர, சென்னை வாழ் வாதிரியார்களின் குழந்தைகளும் இன்றும் கன்னிகை; குறையான் கிளைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.

 

            காட்டாக 70களில் ‘தாய் வழி நற்பணி மன்றம், சென்னை – வேறு சாதிகளில் பெண் எடுத்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகட்டு கன்னிகைக் குறையான் என்னும் கிளையைச் சேர்ந்தவர்களாக் கருதலாம்’ என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

            இங்ஙனம் 7 பெருங்கிளைகளைக் கொண்ட வாதிரியார் இனத்தில் 5 தலைமுறைகளில் மதம் மாறியவர்கள் உட்பட இன்று வரையிலும் திருமண நிகழ்வில் கிளைவழி உறவை அதாவது சைவனும், பட்டனும் கசோதரக் கிளைகள் ஏனைய கிளையில் மட்டுமே திருமணம் அருமைப் பணிந்தானும், ஆவிடைப் பணிந்தானும் அவ்வண்ணமே ஏனைய 5 கிளைகளில் மட்டுமே திருமணம். கன்னிகை குறையான் மட்டும் பிற கிளை அனைத்திலும் மணமுடிக்கும் கொள்கை கொண்டு ஒழுகுவது இன்றும் புருவத்தை உயர்த்தச் செய்கிறது. இவை குறித்த ஆய்வுகள் மேலும் தொடர வேண்டுகிறோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4. அம்பலகாரர் பணிகள்

 

 

            அம்பலம், மன்றம், பொதியில் என்பவை அக்காலத்தில் ஊர்களில் இருந்த அவைகள்

 

            அம்பலம் என்ற சொல்லுக்கு வழிப்போக்கர் தங்குமிடம் அல்லது பொதுவிடம் என்று பொருள்கொள்வார் நச்சினார்க்கினியர் (மலைபடு 492)

 

            ஊர்சபை கூடுகின்ற இடம் அம்பலம் என்றும், அதன் தலைவர் அம்பலகாரர் என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றனர். தமிழகத்தின் தொன்மைச் சமூகத்தினரான வாதிரியார்களும் தங்களின் தலைவனை அவ்வவ்வு+ர்களில் அம்பலகாரர் என்று அழைத்து தங்களின் வாழ்நாட்களில் சிறப்புச் சடங்குகள் செய்யும்போதும், ஊர் விழாக்களிம்; அம்பலகாரருக்கு உரிய மரியாதை கொடுத்து வந்தனர்.

 

            வெவ்வேறு சமூகங்கள் தங்கள் இனக்குழுத் தலைவனை வெவ்வேறு பெயர்களில் அழைத்து வருகின்றனர். காட்டாக மூப்பன், பட்டக்காரர், குடும்பன், நாட்டான்மை, ஊர்க்கவுண்டன்,பெரிசு, தலைவர், சான்றோன் என்ற பெயர்களில் அழைத்து வருகின்றனர்.

 

            இலக்கியங்களிலும் இவர்கள் சீறூர் மன்னன், சீறுhர் மதவலி, சிறுகுடிக்கிழான், சீறூர் வன்மையோன், சீறூர் நெடுந்தகை, தன்மனையாளும் வேந்தர், வலம்படு தானை வேந்தன் என்னும் பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

 

            இவ்வாறான தலைவனை உள்ளடக்கிய ஊர்ச் சபைகள் எங்;ஙனம் தோன்றின என்பது அறுதியிட்டுக் கூறுவது கடினம். வேட்டைச் சமூகமாயிருந்த மாந்தர் குழுக்களாய் பிரிந்து வாழும் நிலையிலே தமக்கான தலைவனைக் கொண்டிருந்தது நமக்கு வரலாறு வழி அறிய முடியும்.

 

தேர்வு :

            சிற்றூரில் அவைகளில் வாரியங்கள் எவ்வாறு தெரிந்தெடுக்கப்படுகின்றன என்பதும், குடவோலைத் தேர்வு (அக்கால வாக்குச் சீட்டு) எவ்வாறு நடைபெற்றது என்பதையும், நாம் உத்திரமேரூர் கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறோம்.

 

            வாதிரியார்களும் தங்களி;ல் நேர்மை, வீரம், அயல் சமுகத்தோடு மிகைத் தொடர்கொள்ளக் கூடியவர்களை தங்கள் அம்பலக்காரனாகத் தேர்ந்கெடுக்கிறார்கள். பின் அது பரம்பரையாக தொடர்ந்து வந்திருக்கிறது. “அம்புலார் பேரன்” என்று தன்னை அறிமுகப்படுத்தும் இளைஞர்களை இன்றும் பரமன்குறிச்சி, சாயர்புரம் உள்ளிட்ட ஊர்களில் காணலாம்.

 

            அம்பலக்காரர்கள் பொதுவான பிற வாதிரியார்களைவிடவும் வசதிமிக்கவர்களாயும், குறிப்பாக நெசவுத்தொழிpலை விடுத்து வாதிரியார்கள் நெய்து கொடுத்த துணிமணிகளை வேறு சமூகத்தினரிடம் கொண்டு சென்று விற்பனை செய்யும் வணிகர்களாயும் இருந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஊர்களில் தறி போட்டு நடத்தும் முதலாளி நெசவாளர் (ஆயளவநச றுநயஎநச) களாகவும் இருந்திருக்கிறார்கள். பொதுவாக ஊர் அவை (அம்பலம்) கூடுமிடத்தில் இன்னாருக்குப்பின் இன்னார் அம்பலமாகத் தோ;ந்தெடுக்கப்பட்டார் என்று ஊரில் உள்ள பெரியவர்கள் கூடிய அமைப்பு ஒன்று அறிவிக்கும். இவ்வாறு அம்பலகாரர் தெரிந்தெடுக்ப்பட்டதாக செவிவழிச் செய்தி மூலம் அறிய முடிகிறது.

 

அம்பலகாரர் இயல்பு:

 

            தொன்மைச் சமூகம் ஒரு கூட்;டுச் சமூகமாக வாழ்ந்து வந்ததாக வரலாறு எங்கும் தெரிகிறது. அவ்வாறு கூட்டுச் சமூகத்தினை இனக்குழுக்களாகப் பிரித்து பின் ஒரு தலைவர் உருவானபின் அவர் எப்படிப்பட்ட இயல்பு கொண்டிருந்தார் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்களான பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை நன்குவிவரிக்கும். இனக் குழுத் தலைவர் அக்குழுவில் உள்ள மக்களைப் Nபுhலவே மிகவும் சாதாரண நிலையிலே வாழ்ந்து வந்தார் என்றும் அவருக்கு என்று தனிப்பட்ட சலுகைகள் எதுவும் இல்லை என்றும் மக்களோடு சேர்ந்து கொண்டு அவர்களின் அன்றாட உழைப்பில் பங்கு கொண்டு வாழ்ந்து வந்ததாக ஆற்றுப்படை நூல்கள் விவரிக்கும்.

 

            நாள்தோறும் வாரி வழங்கும் வள்ளல் போன்றவன் அல்லன் என்றும் இல்லையென மறுப்பதைச் சிறுமையாய் எண்ணி இயன்றதை அளிக்க வல்லவன் என்று குழுத்தலைவனின் எளிய இயல்பை புறநானூறு (180) எனும் நூல் எடுத்துரைக்கிறது.

 

            இவ்;;;வாறே அம்பலக்காரர் எனப்பட்ட ஊர்த் தலைவரும் தனக்கு இதைத் தனிப்பட்ட உரிமையாகவோ, சலுகையாகவோ இன்றி அதை ஒரு மதிப்புமிக்க பதவியாகவே எண்ணி வாழ்ந்திருக்கிறார்கள்.

 

            அம்;பலகாரர் இன்றியமையாப் பொழுதுகளில் மட்டும் தான் தலைமைப் பொறுப்பில் செயல்படுவார். பிற சமயங்களில் சாதாரணமான ஒரு வாதிரியார் போலவே நடந்து கொள்வார். இது ஒரு நுட்பமான சமூக உறவுதான். இதைப் புரிந்து கொண்டு செயல்பட்ட வாழ்க்கையைக் கொண்டிருந்தார்கள் அன்றைய நாட்களில்.

 

மக்கட் தொடர்பு :

 

            அம்பலக்காரர்களுக்கும் ஊர்ப்பொதுமக்களுக்கும் இருக்கின்ற மரியாதை கலந்த நட்பு வாழ்வின் பொருளை விளக்கவதாய் உள்ளது. குறிப்பாக திருமணம், பு+ப்பு, இறப்பு போன்ற முக்கியமான நிலைகளில் அம்பலக்காரர் முக்கியத்துவமிக்க மனிதராகக் கருதப்படுகிறார்.

 

            ஊருக்குச் சொல்லக்கூடிய நிகழ்ச்சிகளான பு+ப்பு, திருமணம் ஒரு வீட்டில் நடப்பதாக இருந்தால் அதை விசாரிக்கும் பொருட்டு “ஊர்ப்பாக்கு போட்டாச்சா” என்று கேட்பார்கள்.

 

            ஊர்ப்பாக்கு போடுதல் என்றால், அம்பலக்காரர் வந்து வீட்டு முற்றத்தில் அமர்ந்;திருப்பார். நிகழ்ச்சி நடைபெறும் வீட்டுச்சொந்தக்காரன் ஒரு பிளாப்பெட்டி (பிளவுப்பட்டி – பனையோலையால் செய்யப்ட்டிருக்கும்) -யில் வெற்றிலை பாக்கு எடுத்து அவர் முன் வைப்பார். தெருவில்இருக்கும் ஓரிரு சிறார்கள் அம்பலக்காரர் எடுத்துக்கொடுக்கும் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று சேதியைச் சொல்லிக் கொடுப்பார். அவ்வாறு கொடுக்கபட்ட வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து விருந்துக்கான பண்டங்கள் செய்யப்படும் அல்லது உணவு சமைக்கப்படும்.

 

            ஒரு வேளை யார் வீட்டிலாவது கொடுக்கப்பட்ட பாக்கு, வெற்றிலை வாங்கப்படவில்லையெனில் அம்பலக்கார் அவர்களுக்கு இருக்கும் சிறு மனஸ்தாபங்களைத் தெரிந்து கொண்டு, இவரே அவர் வீட்டுக்குச் சென்று ஒற்றுமையாய் இருக்கச் சொல்லி பாக்கு வெற்றிலை எடுத்துக் கொள்ளச்சொல்லி அவர்களுக்குள் இருக்கும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பார். இவ்வாறு ஒரு மக்கள் தொடர்பாளராய் வலம் வருகின்றார் அம்பலகாரர்.

 

            இதே போல்தான் வாதிரியார்கள் வீடு கட்டும்போது வாசல்கால் நடுவதைச் சிறந்த நிகழ்வாகவும், ஊரழைத்தும் நடத்துகின்றனர். அம்பலக்காரர் இல்லாமல் வாசல்கால் நடுதல் நடைபெறுவதில்லை என்ற அளவுக்கு அவர் தலைமையில் ஊரில் உள்ள நாலைந்து பேர் கூடி அந்த வாசல்களை நடுவர். இந்நிகழ்வு இவரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாகக் கருதலாம்.

 

பஞ்சாயத்து :

 

            நீதியரசர்களைக் கொண்டு இயங்கும் இன்றைய நீதிமன்றங்களைக் காட்டிலும் மன்றம் என்னும் அம்பலங்களில் அரசமரத்தடித்; திண்ணைகளில் கோழித்திருட்டு முதலான சிறிய குற்றங்கள் தொடங்கி பாலியல் தொடர்பான பெருஞ்சிக்கல் ஈராக எவ்வளவு பிணக்குகளை எத்தனை எளிமையாகவும், வேகமாகவும் தீர்த்து வைத்திருக்கிறார்கள், இவர்கள் என்று எண்ணும்பொழுது வியக்காமல் இருக்க இயலவில்லை. பொதுவாக இரவில் கூடும பஞ்சாயத்தில் அம்பலகாரர் தலைப்பாகை மற்றும் தடி சகிதம் வந்து அமர்ந்திருப்பார். பக்கத்தில் வாதிரியார்களுக்கான குடிமகன், வண்ணான் இவர்கள் அருகில் உட்கார்ந்து இருப்பார்கள்.

 

            குற்றம் சுமத்தப்பட்டவனும், முறையிட்டவனும், அம்பலக்காரரை வணங்கி பின் ஊர்ப் பொதுமக்களையும் வணங்கி தோளில் இருக்கும் துண்டை இடுப்பில் கட்ட வேண்டும். குடிமகனும் வண்ணானும், ஆளுக்கொருவராய் வெற்றிலை பாக்கு வாங்கி அம்பலத்தில் வைப்பார்கள். பின்னரே விசாரணை தொடங்கும்.

 

            பாலியல் தொடர்பான விசாரணைகள் இரவில்தான் நடைபெறும். பிற விசயங்கள் அவ்வப்போதே நடைபெறுவதுண்டு.

 

            பொதுவாகக் குற்றம் புரிந்தவர்களுக்கு கோவிலுக்கு இவ்வளவு காணிக்கை மற்றும் இவ்வளவு நாட்களுக்கு ஊர் விளக்கு எண்ணெய் வாங்கி ஊற்ற வேண்டியதான தண்டனையே இருக்கும். பொறுமையுடனும் நேர்மையுடனும் நடைபெற்றிருந்த இவ்வகையான பஞ்சாயத்துகள் மீண்டும் வராதா என்ற ஏக்கம்;தான் எஞ்சியிருக்கிறது.

 

ஆட்சி :

 

            அம்பலக்காரர்கள் தொன்மையான இனக்குழுத் தலைவனுக்கு ஒப்பானவர்கள் என்றும் தனிப்பட்ட அதிகாரங்கள் இவர்களுக்கு மிகையாக இருந்ததில்லை என்றும் பார்த்தோம் எனினும் ஊரில் உள்ள உறுப்பினர்கள் ஏதேனும் பிணக்கு, பொருளியல் தாழ்ச்சி இருப்பின் அம்பலகாரர் தலையீடு நடைபெறுகிறது. காட்டாக கைத்தறி நெய்யும் வாதிரியார்களின் பாவு பசை முறுக்கேறிவிட்டாலோ, தறியில் உள்ள பாவுகளில் கறையான் ஏறிவிட்டாலோ, நொடிந்து போகும் நிலையை அடைவார்கள். அப்போது அம்பலகாரர்களே பொருளுதவி (கடனாகக் கொடுத்து) புரிந்து அவருக்கு அரணாக இருக்கிறார். சேமிப்பு என்பது வாதிரியார்களுக்கு இன்றியமையாததென்பதை உணர்ந்த அம்பலகாரர் சீட்டு முறையை நடத்திச் செல்லுபவராகவும் இருக்கிறார். ஊர்ச்சீட்டு என்ற ஒன்றும், கழிவுச்சீட்டு என்றும் இருவகையில் ஊருக்கு வருமானம் வரச் செய்து ஏலம் கூறும் பணியை அம்பலகாரர்களே செய்து வருகின்றார்.

 

            நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்;டங்களிpலேயே பெரிதும் மிகுந்திருக்கும் வாதிரியார்களுக்கு கொடை விழா நடத்துவதும் கொற்றவைகளை ஆற்றுப்படுத்தும்பொருட்டு அவர்களுக்குப் பலி கொடுக்கும் விழாக்களும் நடைபெறுவதுண்டு. இப்படிப்பட்ட திருவிழாக்களை நடத்துவதில் அம்பலக்காரர்களின் பங்கு இன்றியமையாதது. ஒவ்வொரு வீட்டிற்குமான தலைக்கட்டு வரிகளை விதிப்பதும் அதைக் கொண்டு விழா நடத்தி முடிக்கவும முன்னிலையில் இருக்கிறார்கள்.

 

வீழ்ச்சி :

 

            காலங்காலமாக ஒற்றை இனக்குழுத் தலைவனாக இருந்து தன் குழுவில் இருந்த உறுப்பினர்களுக்கு ஆவன செய்தும், அவர்களில் ஒருவராக இருந்து உற்ற உதவிகளும் தக்க சமயத்தில் தலைமைப்பண்பையும் வெளிக்காட்டி முன் நடத்திச் சென்ற அம்பலகாரர்கள் இன்று பெயருக்கு இருக்கிறார்கள். சில ஊர்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தலைவர் அஃதார் என்று கூட அழைக்கப்பட்டு தனக்கிருந்த தனித்த பண்புகளை இழந்து நிற்கின்றனர்.

 

            இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பார்த்தால், ஆங்கிலேய வியாபாரிகள் ஆட்சியாளர்கள் மாறிப் போனபோது கிருத்துவம் இங்கு பரப்பப்பட்ட காலங்களின் செம்பாதியான வாதிரியார்கள் கிருத்துவத்துக்கு மாற்றப்பட்டார்கள் – மாறினார்கள். அப்போதே இனக்குழுத் தலைவரின் பணிகளான விழா நடத்துதல், வரி விதிப்பது போன்றவை அம்பலகாரர்களிடமிருந்து சாமியார்களுக்கு அல்லது அய்யர் என்றழைக்கப்படும் கிருத்துவப் போதகர்களுக்கு இடம் பெயர்ந்தது.

 

            உறுப்பினர்களுக்கு இருந்த சிற்சில சச்சரவுகளைத் தீர்த்து வைத்தல் போன்ற பணிகளைக் காவல்துறை எடுத்துக்கொண்ட பின்பும், கடந்த நூற்றாண்டில் பெறப்பட்ட கல்வியினால் நீதிமன்றம் போன்ற அமைப்புகள் அறிந்து கொண்டதாலும், அம்பலகாரர்களின் பணி முற்றிலும் தேவையற்றதாகப் போய்விட்டது. இவ்வாறு இனக் குழுத்தலைவன் நிலையில் இருந்து மிக இயல்பான ஊரின் உறுப்பினர் என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டது அம்பலக்காரர்களின் ஆட்சி. பின் நாட்களில் இவர்களின் சுயநலமும் கூட வீழ்ச்சிக்குக் காரணம் எனலாம். காட்டாக கோவில் சொத்துக்களைச் சுரண்டுதல, ஏழை நெசவாளர்களான வாதிரியார்களை தொழிற்சுரண்டல் மூலம் கைத்தறி நெசவினை நசிய விட்டதும் ஆகும்.

 

தொகுப்புரை :

 

            சிற்றூர்களில் சிறப்பாக வாழ்ந்து வந்த வாதிரியார்கள் நகரங்களில் குடி பெயர்ந்தபின் தமக்கேயான சில பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். அவைகளில் ஒன்று அம்பலக்காரர் முறை.

 

            அம்பலக்காரர்கள் வாதிரியார் சமூகத்தில் தெரிந்தெடுக்கப்பட்டு, இயல்பாய் வாழ்ந்து, பஞ்சாயத்து முறை செய்து, திருவிழாக்களில் முன்னின்று பின் வீழ்ந்துபட்டு நின்றாலும், அவர்களைப் பற்றியும் அவர்களின் பணி குறித்து நினைத்து பார்க்கும்போது இவை ஒரு சமூக வளர்ச்சியின் நிலையில் சறுக்கல் என்றே எண்ணத் தோன்றுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5. திருமணம் – உறவு நிலை

 

            தாய்வழி உறவுமுறை பேணும் வாதிரியார் இன மக்களின் மணவிழா நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.

 

            ஒருவனுக்கு ஒருத்தி எனும் முறை இன்றும் இம்மக்கள் மத்தியில வழக்கத்தில் உள்ளது. தாய் வழி உறவினைப் பேணுவதால் ‘தாய் மாமனுக்கு’ அனைத்துச் சடங்கிலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

 

            திருமணங்கள் பெரியோh;களால் நிச்சயிக்கப்படுகிறது. மாப்பிள்ளையின் தந்தையுடன் பதின்மர் சென்று பெண் கேட்கிறார்கள். அப்போது தங்களுடன் எடுத்து வந்த நெற்றி முட்டுக் கம்பினை மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்பதன் குறியீடாக (முத்திரை மோதிரம் போன்று) பெண்ணின் தாயிடம் கொடுத்த வாங்குவது ஈண்டு தொன்மைத் தமிழர்களின் வீரப்பண்பாட்டுக் குறியீட்டை நினைவு கூர்கிறது எனில் மிகையாகாது.

 

            பிற இனங்களுக்கும் பொதுவான நிகழ்ச்சிகளை விடுத்து வாதிரியார் இனத்திற்கு மட்டுமே உரிய நிகழ்ச்சிகளை பின்வருமாறு குறிப்பிடலாம்.

அ) பெற்றோர் உரைத்தல்

ஆ) மாமன் செய்தல்

இ) கிளையம்பலம்

உ) கும்பிட்டுக்கட்டு

 

            மேலே குறிப்பிட்ட நான்கு நிகழ்ச்சிகளும் கிளை வழி உறவினையும், வீரப்பண்பாட்டினையும் எவ்வாறு உணர்த்துகிறது என்பதை எண்ணுங்கால் வியப்பு மேலோங்கி நிற்கிறது.

 

அ). பெற்றோர் உரைத்தல்

           

            மணமக்கள் மணவறைக்கு வந்த பின்பு முதல் நிகழ்வாக இது நடைபெறுகிறது. மாப்பிள்ளையின் பெற்றோர்கள் தனித்தனியே தேங்காப் பழத் தட்டை மாப்பிள்ளை (மகன்) இடம் மும்மறை கொடுத்து வாங்கும் நிகழ்ச்சி பெற்றோர் உரைத்தல் எனப்படுகிறது.

 

            இந்துக்;கள் இறைவனுக்குப் படைக்கும் மங்கலப் பொருளான தேங்காய் – மேலோட்டமாகப் பார்த்தால் கரடு முரடாகவும, நார்கள் பின்னப்பட்டதுமானது. தேங்காயின் உள்ளீடு எவ்வளவு பயன்பாடுமிக்கது. அவ்வாறே இனி நீ நடத்தப்போகும் இல்லற வாழ்வும் மேலோட்டமாக கரடு முரடாகத் தோன்றினாலும், பல பிரச்சனைகள் வந்தாலும், அதைப் பகுத்துப்பார்த்து தெளிந்த நிலையில் உணர்ந்த நிலையில் இன்பமயமாய் இருக்கும் என்பதைக் குறிக்க இத்தேங்காய் கொடுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

            இதன்பின் மாப்பிள்ளையின் தந்தை தனது இடுப்பில் இருக்கும் கத்தியை எடுத்து மாப்பிள்ளையின் இடுப்பில் செருகி வைப்பார். இது இம்மக்களின் வீரப்பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சி என்றே கூறலாம். இன்று சீக்கியர்கள் ‘கிர்பான்’ என்னும் கத்தியை எவ்வாறு தங்களுடன் வைத்திருக்கிறார்களோ, அவ்வாறே வாதிரியார்களும், மணக்கோலத்தில் இருக்கும்போது பெறப்பட்ட கத்தியை தன்னுடன் வைததிருப்பதாக அறிகிறோம். இந்நிகழ்வு

 

அ) வாதிரியார்கள் வீரச் சமூகமாய் இருக்கிறார்கள் என்பதை நினைவு+ட்டும் நிகழ்ச்சி மற்றும்

ஆ) மணமகனிடம் ஆயுதம் இருப்பது பேய், பிசாசை அண்ட விடாமல் தடுக்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் நிகழ்த்தப்படுவதாய் அறிகிறோம்.

 

 

ஆ). மாமன் செய்தல் :

 

            தாய்வழிச் சமூகத்தில் தாய்மாமன் சிறப்பிடம் பெறுவதாக முன்பே பார்த்தோம். திருமண நிகழ்ச்சியிலும், பெற்றோர் உரைத்தல் நிகழ்ச்சிக்குப்பின் நடைபெறும் இன்றியமையா நிகழ்ச்சி மாமன் செய்தல் எனலாம். இந்நிகழ்வில் மாப்பிள்ளையின் தாய்மாமன் மணமக்களை வாழ்த்துகின்ற முறை ஏனைய வாழ்த்துக்களை விடவும் மாறுபட்டிருப்பது ஆய்வுக்குரியது.

 

            சந்தனக் கிண்ணத்தில் வெற்றிலை(2) தொட்டு மருமகனின் (மாப்பிள்ளை) தலையில் மும்மறை தெளித்து வாழ்த்துகின்றார். பின் இரண்டு வெற்றிலைகளையும் தனித்தனியே சுருட்டி மணமக்கள் இருவரின் காதுகளில் வைக்கும் நிகழ்ச்;சி மாமன் செய்தல் எனப் பெயர் பெறுகின்றது.

 

            மாமன் செய்தலில் வெற்றிலையைப் பயன்படுத்ததல் ஈண்டு உற்று நோக்கத்தக்கது. தென்பாண்டி நாட்டில் வெற்றிலை விருந்தோம்பலிலும், பு+ஜை செய்தலின்போதும் பயன்படுத்துவது வழக்கம். இதில் வெற்றிலை என்;பது கொடியுடன் கூடித் தழைத்தோங்கும் விவசாயப் பயிராகும. நாமாய் முயன்று அழிக்காமல் தானே அழியாது. அவ்வாறே மணமக்களின் குடும்பமும் வெற்றிலைக் கொடிபோல் படர்ந்து தழைக்க வேண்டும் என்பதால் மாமன் செய்யும்போது வெற்றிலையால் வாழ்த்துவது வாதிரியார்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் தாய்மாமன் (மணமகள் – மணமகன்) மார்கள் முன்னின்று வாழ்த்துவது தாய் வழி சமூகத்தில் வேறு (முறை மாப்பிள்ளைஃபெண் தவிர) இடத்தில் மணமுடிப்பதில் தாய்மாமனுக்கு முழுச் சம்மதம் என்பதை உணர்த்துவதாயும் உள்ளது.

 

இ) கிளையம்பலம்

 

            மாமன் செய்து முடிந்ததும், கிளையம்பலம் எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது பெண்ணின் கிளையைச் சேர்ந்தவர்கள் (சகோதர உறவுகள்) ஒருபுறமும் மாப்பிள்ளை கிளையைச் சேர்ந்தவர்கள் மறுபுறமும் உட்கார்ந்து கொண்டு, தேங்காயை உருட்டி விளையாடும் ஒரு வகை விளையாட்டு. எதிரில இருப்பவர்கள் மைத்துனா;கள் என்பதையும், மணமக்கள் உறவினர்களை ஏனையோருக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாயும் இதனைக் கருதலாம். இவ்விளையாட்டு நடைபெற்று முடிந்ததும் அனைவருக்கும் வெற்றிலைப்பாக்கு வழங்குவதும், தேங்காயை உடைத்து அனைவரும் பகிர்ந்து உண்பதும், இப்போதும் பின்னும் இவர்கள் ஒற்;றுமையாய் இருப்பதை பறைசாற்றும் நிகழ்ச்சி எனவும் இதைக் கருதலாம்.

 

            இந்நிகழ்வில் மாப்பி;ள்ளை வழியைச் சேர்ந்தவர்கள் பெண்ணுக்கு அறிமுகமாகி விடுவதால் தான் இனிச் செல்ல வேண்டிய புகுந்த வீட்டிலும் அந்த ஊரிலும் தனக்கு சகோதர உறவு உடையவாகள் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று மனத்தளவில் மணமகளுக்கு ஒரு துணிவையும், உறவுகளை ஒழுங்காகப் புரிந்து கொண்டு அதன்படி பழகி வாழ இடங்கொடுக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கிளையம்பலம் நடைபெற்ற வருகிறது. (இன்றும் வெளியு+ருக்குச் சென்;றால் என்ன கிளை என்று விசாரித்து உடனே உறவு முறை கூறி விருந்தோம்புவது வாதிரியார்களிடையே வழக்கமாய் இருக்கிறது)

 

ஈ) கும்பிட்டுக்கட்டு

 

            பட்டிணப்பிரவேசம் முடிந்ததும், மணப்பெண் தனக்கு மச்சான் முறை உள்ளவர்களிடம் பாதம் தொட்டு வாழ்த்து பெறும் நிகழ்ச்சி கும்பிட்டுக்கட்டு என வழங்கி வருகிறது. ஒவ்வொரு முறை வாழ்த்து பெறும்போதும் பணம் பெறுவது நடைமுறை. மச்சான்மார்கள் மடி நிறைய சில்லறை வைத்துக்கொண்டு மணமகளான கொழுந்தியாளை முதுகொடிய பலமுறை குனிந்;து கும்பிடவைக்கும் இந்த விளையாட்டு நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியு+ட்டுவதாக இருக்கும். இவ்வாறு மணமகள் பெறுகின்ற பணம், புகுந்த வீட செல்ல இருக்கும் தனக்கு மிக உதவியாக இருக்கும் என்பதால் போதும்அம்மா என்று கூறும் வரை இவளும் கும்பிட்டு வணங்கத் தயங்குவதில்லை.

 

            ஆனால் இப்போது இந்நிகழ்ச்சி அறுகிவிடடது என்றே கருதுகிறோம். ஏனெனில் முன்காலததில் 3 நாட்கள் நடைபெற்ற திருமண விருந்து 1 நாளாகக் குறுகிப் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இவ்வாறு கொடுக்கப்படும் பணத்திற்காக மண வீட்டார் அவர்களுக்குத் தனியாக விருந்து கொடுத்து, ரூபாய்க்கு இவ்வளவு என ‘முறுக்கு’ கொடுக்கும் வழக்கம் மாறிவிட்டதும் காரணம்.

 

            இவ்வாறு மிக எளிதான திருமண முறைகளைத் தனக்கென கொண்டு சிறப்புடன் வாழ வகை செய்து தரும் வாதிரியார்கள் தென் தமிழ் மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

6 முருக வழிபாடு

 

            தென்தமிழகத்தில் பெரிதும் பரவி வாழும் மள்ளர் எனும் பெருஞ்சமூகத்தின் ஒரு சிறிய பிரிவினரான வாதிரியார் எனும் கிளைச் சமூகத்தினரின் தமிழ்த் தெய்வமான முருக வழிபாடு குறித்த ஆய்வு இக்கட்டுரை. வாதிரியார் எனும் சமூகத்தினர் வாழும் பரமன்குறிச்சி (திருச்செந்தூரிலிருந்து 8-வது கிலோ மீட்டரின் உள்ளது) இக்கட்டுரையின் ஆய்வுக்களமானது.

 

வாதிரியார் வாழ்நிலையில் முருக வழிபாடு

 

            மக்கள் கூடி அல்லது குடும்பம் ஒன்றிணைந்து தமது வாழ்க்கையில் வரும் ஏற்றத் தாழ்வுகட்கு தமக்கு மேலிருக்கும் சக்தியே காரணம் என்று நம்ப, எல்லாம் வல்ல இறைவனை எண்ணி, ஆன்றோர்கள் இட்டுச் சென்ற வழிபாட்டு முறைகளை அதாவது பு+, பழம், நறுமணப்புகை, நறுமண நீர் இவைகளைப் படையலிட்டு தலைவணங்கிச் செய்யும் செயலை வழிபாடு எனலாம்.

 

            பழந்தமிழர் வாழ்க்கையில் நிலவழி ஐம்பெரும் பிரிவினராக இருந்து, காடும் காடு சேர்ந்த இடமும் ஆகிய குறிஞ்சி நில மக்கள் வழிபட்ட தெய்வமாகிய சேயோன் எனும் முருகன் பின் நாட்களில் தமிழ்த்;தெய்வமாகி அறுபடை வீடு எனும் ஆறு பெரிய நகரங்களில் கோயில் கொண்டு வீற்றிருக்கின்றான். அதில் இரண்டாம் படை எனும்பேறு பெற்ற இடமாகிய திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூர், ஏனைய படை வீடுகளினின்றும் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், பிற படை வீடுகள் எல்லாம் குமரன் குடியிருக்கும் குன்றுகளிலிருக்கும்போது, இரண்டாம் படை வீடெனும் இத்திருச்செந்திலம்பதி, குறிஞ்சி நிலத்தை விடுத்து, நெய்தல் நிலத்திலிருப்பதும், வங்கக்கடலின் தாலாட்டில் வருகின்ற பக்தர்களுக்கு வரம் தந்து அருளிக்கும் செந்தில் வேலவனை செவ்வேள் (அக நானூறு 59) என்றும், திருச்செந்தூரினை அலைவாய் (அக-266) செந்தில் (புறநானூறு 55) எனும் பெயரில் தொகை நூற்கள் குறிப்பிட்டவை இங்கு நினையத் தக்கது.

 

            இவ்வாறு தனிச்சிறப்புப் பெற்ற திருத்தலம் வாழ் முருகனை வாதிரியார்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறப்புறப் போற்றி வாழ்ந்தார்க்ள எனினும், குறிப்பாக கீழ்க்கண்ட அய்ந்து நிலைகளில் இவர்கள் முருகனுக்குச் சிறப்புச் செய்தமை இக்கட்டுரையில் ஆயப்பட்டுள்ளது.

 

1.         பிறப்புச்சடங்குகள் – முடியெடுத்தல் – பெயரிடல்

2.         நேரிச்சை

3.         திருமண நாள் வழிபாடு

4.         திருவிழாப் பங்கேற்பு

5.         மாதாந்திர வௌ;ளி

ஒரு சமூகம் தான் பெற்று வருகின்ற அனுபவங்களால் கட்டப்படுவதே. பின் நாட்களில் சமூக ஒழுங்கு எனப்படுகிறது. இங்கு வாதிரியார்கள் தங்களின் இன்ப துன்பங்களில் எவ்வாறு தங்கள் மீது ஆட்சி செய்யும் குமரனை அடிபணிந்து வருகின்றனர் என்பதை விரிவாகக் காணலாம்.

 

 

 

 

 

பெயரிடுதல் – முடியெடுத்;தல்

 

            இறைவனின் பெயரை இன மக்களுக்கு வைத்தழைத்தல் இறைவனை நினையும் காலமும், இதனால் வாழ்நாளில் வளம் பெருகும் என்பது பிற சமூகங்கள் போலவே வாதிரியார்களுக்கும் நம்பிக்கை. பரமன்குறிச்சிவாழ் வாதிரியார்கள் முருகனைத் தலைத் தெய்வமாகக் கொண்டிருப்பதால், தனது மக்கட்கு பெரிதும் முருகன் எனும் பெயரையே வைத்து அழைத்தார்க்ள. காட்டாக கட்டுரையாளரின் தந்தையின் தந்தை தனது இரண்டு ஆண்மக்கட்கு இட்ட பெயர் முறையே ‘தங்கவேல்’ மற்றும் ‘பழனி’. இவர்கள் தங்களது தலைமக்கட்கு இட்ட பெயர் முறையே (ஜெய) குமாரன், திருமுருகன்.

 

            வாதிரியார்கள் தங்கள் குழந்தைக்கு முடியிறக்கம் செய்தல் எனும் விழாவை குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் நடத்துகிறார்கள். பெயரிடும் நிகழ்ச்சியைத் தங்கள் இல்லங்களில் நிகழ்த்தி முடித்திருப்பினும், தலைமுடி எடுத்தல் என்னும் நிகழ்ச்சியை விழாவாக நடத்துகிறார்கள். அதாவது, அனைத்து உற்றார் உறவினர்களையும அழைத்து அருகிலிருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று (பெரிதும் கால்நடையாகவே) தாய்மாமன் மடியில் குழந்தையை இருத்தி முடியிரக்கம் செய்கிறார்கள். எல்லாம் வல்ல முருகனுக்கு முடி காணிக்கை செய்வதை மள்ளர்கள் தங்களது கிரீடத்தைக் காணிக்கையாக்கும் நிகழ்ச்சிக்கு ஒப்பாக இதை எண்ணி மன நிறைவு கொள்கின்றனர்.

 

நேரிச்சை:

 

            இவ்வுலக வாழ்வின் இன்ப மயமே மக்கள் வாழ்வின் இலக்காய் இருந்தது. இதனால், துன்பங்களைக்; கண்டு துவண்டு போன மக்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்தல் இயல்பானதுதான். இதை வேண்டுதல் என்றும் நேரிச்சை என்றும் அழைத்து வந்தனர். நேர்+ இச்சை அதாவது தனது விருப்பத்தை நிறைவேற்றுதல் (இச்சையை நேர் செய்தல்) நேரிச்சை எனப் பெயர் பெற்றது.

 

            வாதிரியார் மக்களும் தங்களுக்கு வறுமை, நோய் இவை வரும்போது முருகனுக்கு காவடி பால்குடம் எடுப்பதாகத் தீர்மானித்து, அந்நேரிச்சையினை குடும்பத்திலுள்ள பிறருக்கு அறிவிக்கின்றனர். பின் வறுமை அல்லது பிணி நீங்கியதாக இவர்கள் நம்பியதும், நேரிச்சையை நிறைவேற்றும் பொருட்டு தனது சொந்த பந்தங்களுக்குச் சொல்லியனுப்பி ஒரு நல்ல நாளில் கோவிலுக்குச் சென்?று எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகின்றனர். இந்நிகழ்வை ‘நேரிச்சைக் கடன் கழித்தல்’ என்று கூறுகின்றனர்.

 

            எனினும் பேருந்து வசதி, கல்வி அறிவு இவை பரவலாக்கப்பட்ட பின்பு நடந்தே சென்று கோவில்களில் நேரிச்சை நிறைவேற்றுதல் அறுகிவிட்டது எனலாம். இவர்கள் இந்நிலையை ஏற்படுத்து முன்பு 30 அல்லது 40 நாட்கள் விரதம் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பொதுவாக விரதம் என்பது அசைவ உணவை விலக்கல் என்றே பொருள்படுகிறது. உடல் உழைப்பை (நெசவை) நம்பி வாழும் இம்மக்களுக்குப் பட்டினி விரதம் சாத்தியப்படாது என்பது இயல்புதானே.

 

திருமண நாள் வழிபாடு :

 

            வாதிரியார்கள் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் மட்டுமே வாழிடங்கள் கொண்டவர்களாக இருப்பதாலும், பெண் வழிக் கிளைகளைப் போற்றி வருவதாலும், திருமணங்கள் பெரும்பாலும் உறவினர்களுக்குள்ளேயே நடைபெறுகிறது. திருமணம் பெண் வீட்டில் நடைபெறுகிறது. மாப்பிள்ளையாகிச் செல்பவர் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது அல்லது முருகன் கோவில் கோபுரம் தெரிகின்ற இடத்தில் இறைவனை எண்ணி, தேங்காய் உடைப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

 

            பின் மணமுடித்ததும், பெண்ணோடு ஊர் திரும்பிய பின்பு பெண்ணும், மாப்பிளை;ளையும் முதன் முதலில் முருகன் கோவிலுக்குச் செல்வதையே பெருமயைhக் கருதுகின்றனர். அப்போது பத்து வயதுக்குட்பட்ட குழந்தை ஒன்றைக் கூடவே அழைத்துச் செல்கின்றனர். கோவிலுக்குச் சென்றதும், முருகனுக்கு அர்ச்சனை இருவர் பெயராலும் செய்கின்றனர். பிறந்த நட்சத்திரம், கோத்திரம் தெரியாதவர்களாயிருக்கும் தம்பதிகளாயின் சுவாமி பெயருக்கே அர்ச்சனை என்று சொல்லி சுவாமிக்கானது நமக்கு என்று திருப்தியுறுகின்றனர். பின் கொண்டு வந்த தின்பண்டங்கள், கட்டுச்சோறு இவைகளை காலி செய்துவிட்டு மாலையில் திருச்செந்துhர் கடற்கரையில் உட்கார்ந்து காற்று வாங்கியபின் இருட்டுவதற்கு முன்பாக வீடு வந்து சேர்கின்றனர். பெறப்பட்ட வழிபாட்டுப் பொருட்களான திருநீறு, பழம் இவைகளை பெரியவர்கட்குப் பகிர்ந்து ஆசி பெறுகின்றனர்.

 

திருவிழாப் பங்கேற்பு

 

            திருந்செந்தூரில் திருமுருகனுக்குச் சிறப்பான நாட்களான மாசித் தேர்த் திருவிழா வைகாசி விசாகத்திருவிழா இவை இரண்டிலும வாதிரியார் சமூக மக்கள ஒன்று கூடிப் பங்கேற்கிறார்கள்.

 

            மாசித் திருவிழா நாட்களில் குடும்பத்தில் ஓரிருவர் கோவிலுக்குச் சென்று வந்தாலும், தேர்த்திருவிழா அன்று குடும்பத்துடன் ஆறுமுகத்தானின் தேர்வடம் பிடிக்கிறார்கள். தேர்வடம் பிடித்தலை ஒரு புனிதச் செயலாகக் கொண்டிருக்கின்றனர்.

 

            அவ்வண்ணமே வைகாசி விசாகத் திருவிழாவிற்கும் அதிகாலையிலே எழுந்து குழித்து, குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு நடந்தே செல்கின்றனர். கோடை காலத்தில் நடைபெறும் திருவிழாவானதால் போகிற வழியில் ‘பானக்காரம்’இ ‘தண்ணீர்ப் பந்தல்’ இவை அதிகம் காணப்படும். பதநீரில் மாம்பழத்தைப் பிசைந்து ஒரு பானம் உருவாக்கி அருந்தி மகிழ்தல் அன்று காணலாம். மாலையில் சூரபத்மனின் வதைக் காட்சி காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். தங்களது குழந்தைகளைத் தலை மீதும், தோள் மீதும் வைத்து அக்காட்சியைக் காணும் வாதிரியார்களை இன்றும் காணலாம். விசாகத்திற்கு வரும் குமரி, நெல்லை மாவட்ட உறவினர்கள் வருகின்ற வழியில் பரமன்குறிச்சியில் வந்திருந்து தனது தயாதிகளைப் பார்த்து செல்வது இன்றும் நடைமுறை நிகழ்ச்சிதான்.

 

மாதாந்திர வௌ;ளி

 

            ஒவ்வொரு மாதத்திலும் வருகிற கடைசி வௌ;ளிக்கிழமை செந்திலாண்டவருக்குச் சிறப்பான நாளாகும். அதை மாதாந்திர வௌ;ளி என்று அழைக்கின்றனர்.

 

            மாதம் முழுவதும் நெசவு செய்து களைப்புற்ற வாதிரியார்கள் மாதாந்திர வௌ;ளி நாளைச் சோர்வு நீக்கும் ஓய்வு நாளாகக் கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை.

 

            அன்று தான் குழந்தைகளுக்குப் பிடித்தமான பலகாரங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. காலையில் ஒவ்வொரு வீட்டின் தெருப்பகுதியும் சுததம் செய்;யப்பட்டு தண்ணீர் தெளித்துக் கோலம் போடப்படுவதை காண்பது மன நிறைவைத் தரும் நிகழ்ச்சி. அன்று இளைஞர்கள் முருகனைப் பற்றிய பாடல்கள் பாடி தெரு வலம் வருதல் மிகச் சிறப்பான ஒன்று. இன்றும் இதைத் தெற்குப்பரமன்குறிச்சியில் காணலாம். மாலையானதும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருதல்;; மாதந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சி. நெறிமுறைகள் வகுத்து தந்த ஆன்றோர்களின் செயல் உன்னதமானதுதான்.

 

            இவ்வாறு பல வழிகளில் வாதிரியார் இன மக்கள் தங்களின் தலைவனாம் முருகனைப் பலவாராகப் போற்றி வழிபட்டு வருகின்றனர். திருச்செந்தூரில் இருக்கும் இவர்களது மடம் பல வழிகளில் இதற்குப் பெருந்துணை புரிகிறது எனினும் ஏழைகளாய் இருக்கும் இவர்களி வாழ்வு “வாதிரியார் மடத்தை”ப் புதுப்பிக்கும் சக்தியற்றதாகவே இருக்கின்றது.

 

 

 

 

 

6.         வாதிரியாரும் தேவேந்திரரும்.

 

   தமிழகத்தில் பெரிதும் பரவி வாழும் ஒன்றரை கோடி தேவேந்திர குல வேளாளாகளும் பல்வேறு குலப்பட்டங்களையும் பிரிவுகளையும் கொண்டு விளங்குவர் ஆவர். இதில் தென் மாவட்டங்களில் வாதிரியார் எனும் பட்டத்துடன் வாழும் சமுதாயத்தினர் தேவேந்திர குல வேளாளரில் ஒரு பிரிவினரே ஆவர் என்பதை இக்கட்டுரை பல சான்றுகளால் ஒரு கருத்தியலை ஒருவாக்க முயல்கிறது. சிதம்பரனார் மாவட்டம் திருச்செந்தூh வட்டம்  பரமன்குறிச்சி கிராமம் மட்டும் இக்கட்டுரையின் ஆய்வுக் களமாக அமைகிறது.

 

வாதிரியார் – அறிமுகம்

 

            தமிழ்நாட்டில் குறிப்பாகச் சிதம்பரனார், நெல்லை மாவட்டங்களை உள்ளடக்கி பரமன்குறிச்சியை மையாகக் கொண்டு சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் (நெல்லை- பொன்னிவாய்க்கால், இராமலிங்கபுரம், நம்பிபத்து, வள்ளியம்மைபுரம், அருளானந்தபுரம், மடப்புரம், மகிழ்ச்சிபுரம், சிதம்;;பரனார்- பரமன்குறிச்சி, சாயர்புரம், தூத்துக்குடி வேப்பலோடை, தருவைக்;குளம், பனையு+ர், விளாத்திகுளம் சூரங்குடி) குமரி மாவட்டம்; தெங்கம்புதூரிலும், இராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டியிலும் ஆக சுமார் 25,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் தம்மை வாதிரியார் என அழைத்துக் கொண்டாலும், நாடார் முதலிய பிற சாதியினர் இவர்களைப் பள்ளர்கள் என்றும் இவர்கள் குடியிருப்பை பள்ளக்குடி என்றுமே முன்னர் அழைத்து வந்தனர்.

 

            இவர்களில் தற்போதைய குலத்தொழில் நெசவுத்தொழில் அதே வேளையில் முற்காலத்தில் வேளாண்மையும் இவர்களது தொழிலாக இருந்திருக்கிறது. இன்றும் இவர்களில் சிலர் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டு நிலவுடைமையாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

 

            பரமன்குறிச்சியில் நாடார்கள் தேவேந்திர குலத்தில் ஒரு பிரிவான வாதிரியார், பறையர், சக்கிலியர் ஆகியோர் வாழ்கின்றனர். வாதிரியார் பிற சமூகப் பழக்க வழக்கங்களில் பக்கத்து ஊர்களிலுள்ள குடும்பர்களுடன் சகோதரத்துவ சாதி துறை கொண்டாடுவர். பறையரை இவாகள் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. பறையர் வீடுகளில் வாதிரியார் உணவு உட்கொள்வதில்லை. காரணம் வாதிரியார் மாட்டுக்கறி உண்ணாமல் இருப்பதாலும், வாதிரியார்களை விட பறையாகள் கீழான சாதி என்ற எண்ணம் இவர்களிடம் இருப்பதாலும் தான். பண்பாட்டு ரீதியில் வாதிரியாருக்கும் பறையர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. சாதீய ஒடுக்கு முறை நோக்கில பள்ளக்குடி என்று முற்காலததில் பிறர் சொன்னால், அதை எதிர்த்து கலகமும் செய்திருக்கின்றனர். தேவேந்திரர் எப்படி பள்ளர் என்ற சொல்லைத் தாழ்வாகக் கருதினரோ அவ்வாறே வாதிரியார்களும் தாழ்வாகக் கருதி இருக்க வேண்டும்.

 

            வாதிரியார் என்று அழைக்கப்படும் பரமன்குறிச்சி தேவேந்திரர்க்கு தாம் ஒரு தனிச்சாதியாகவும் இருந்திருக்கலாம் என்ற சிந்தையும இருந்திருக்கிpன்றது. இதனை, 1990 இல் திரு.பால் வாதிரியார் தொகுத்த “வாதிரியார் சமூக வரலாறு பழக்க வழக்கங்கள்” எனும் சிறு நூல் வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்நூலி;ல் பண்பாட்டு ரீதியில் தேவேந்திரர்களுக்கும், தமக்கும் உள்ள தொடர்பை மறைத்தே எழுதியுள்ளார் எனவும் கூறலாம். காரணம் மேற்கண்ட நூலில் பக்கம் 39-ல் ‘தென்நாட்டில் வாதிரியார் சாதி – அட்டவணையில் குமரி, நெல்லை மற்றும் பல மாவட்டங்களில் சேர்க்கப்படாததால் இச்சங்கம் அரசுக்கு 9.1.76-ல் தமிழ்நாடு முழுமைக்கும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கும்படி மனு அனுப்பியது என்று குறிப்பிடுகிறார். ஆனால் வேறு எந்த மாவட்டங்களில் வாதிரியாருக்கு அட்டவணை சாதியில் இடம் இருக்கிறது? ஏன்?  என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் கட்டுரையாசிரியர் முயன்று பெற்ற அட்டவணையில் கோவை மற்றும் சேலம் மாவட்டங்;;;;;களில் மட்டும் தேவேந்திரர்களின் பிரிவினராகிய 1) பண்ணாடி 2) வாதிரியான் -அட்டவணை சாதியெனக் குறிக்கப்பட்டுள்து. பின்னர் 1976-ல் தமிழகம் முழுமைக்கும் ஆனது. இதன்பொருட்டே 1976-க்கு முன் சாதிச் சான்று பெற்ற வாதிரியார்கள் “பள்ளன்” என்று பெற்றனர் என்பதும், வெறும் சலுகை;காக சாதி என்று கொண்டிருந்தால் கட்டுரையாளர் அறிந்த வரையில் 1976-க்கு முன் எந்த வாதிரியாரும் வேறு அட்டவணை சாதியில் உள்ள பிரிவில் சான்று பெறவில்லை என்றும், ‘பள்ளர்’ என்று சாதிச்சான்றிதழ் வழங்குவதற்கு எந்த அதிகாரியும் மறுத்ததில்லை என்பது திண்ணம்.

 

            ஆனால் இரா.தேவ ஆசீர்வாதம் அவர்கள் “மூவேந்தர் யார்?” எனும் நூலில் “பறையரில் குதிரைப் பராமரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட கோலியர் தம்மை இந்நாளில் வாதிரி என தென்மாவட்டங்களில் அழைத்;துக்கொள்கின்றனர். (பக்-114) எனக் கூறி இருக்கும் கருத்து வாதிரியார் இன மக்களை பெரிதும் பாதித்துள்;ளது என்றே கூற வேண்டும். காரணம் தேவேந்திரர்களுடன் தொடர்புடைய ஓர் இனம் என எண்ணிக்கொண்டிருக்கும் இவர்களை தேவேந்திரர்களில் ஒரு பிரிவு அல்ல எனப் பகர்வது வாதிரியார் யாh;? என்ற கேள்வி எழுகின்ற அளவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 

வாதிரியார் தேவேந்திர குலத்தவரே என்பதற்கான ஆதாரங்கள்

பேராசிhpயா; நா. வாணமாமலை

            “பரமன்குறிச்சி பள்ளர்கள் நெசவுத்தொழில் செய்து வந்தார்கள். வௌ;ளையரது வியாபாரச் சுரண்டலினால் இவர்களது தொழில் நசிந்தது. இவர்களில்  சிலர் வௌ;ளையரால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தியுற்றிருந்த பள்ளரையும் ஊமைத்துரை வௌ;ளையர் எதிர்ப்பணியில் சேர்த்துக் கொண்டான்”

                                                            (வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் -பக்-14)

 

பேராசிரியர் கோ.கேசவன்

 

            “வௌ;ளையர் எதிர்ப்பு போரில் சாதி ரீதியில் பள்ளர்கள் கணிசமாக இருந்தார்கள். இவர்களைத் தன் பக்கம் குறிப்பாக பரமன்குறிச்சி பள்ளர்களை தமது போராட்டத்தில் பயன்படுத்திக் கொண்டான் ஊமைத்துரை”

 

                                                            (கதைப்பாடல்களும சமூகமும் – பக்-70)

 

கீழ்க்கோட்டை கணக்கெடுப்புக் குறிப்பு :

 

            இரா.தேவ ஆசீர்வாதம் அவர்களின் ‘பள்ளர் அல்ல மள்ளர்’ எனும் நூலில்.

 

… யபசiஉரடவரசந ளை வாந வசயனவைழையெட ழஉஉரியவழைn ழக யடட வாந ளநஉவள ழக வாந pயடடயசளஇ நஒஉநிவ ழநெ ளநஉவ மழெறn யள எயனயை pயடடயசள றாழ வழழம வழ றநயஎiபெ (1961 உநளெநள ழக ஐனெயை ஏழட.ஐஓ ஆயனசயள pயசவ ஏஐ ஏடைடயபந ளுரசஎநல ஆழழெபசயிhஇ முடையமழவவயi ஏடைடயபந) (பக்கம் 37) நெசவுத் தொழில் புரியும் வாதியப்பள்ளர் என்ற பிரிவைத் தவிர ஏனைய பள்ளப் பிரிவினர் அனைவருக்கும் விவசாயமே குலத் தொழில்) குறிப்பிட்டுள்ள இங்கு குறிக்கப்படும் வாதியப் பள்ளரே பரமன்குறிச்சியில் வாழும் வாதிரிப் பள்ளர் என்றும் கருதலாம். ஆனால் இதற்கு குறிப்பு எழுதும்போது ஆசிரியர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

 

            ‘ஓதியப் பள்ளர் என்ற ஒரு பிரிவு பள்ளருக்கு இல்லை. நெசவுத் தொழிலில் ஈடுபடுவர் கோலியர் ஆவார். இவர் தம்மை வாதிரி என்பர்’.

 

திரு.வே.கோபாலகிருஷ்ணன் சட்டமன்ற பேச்சு

 

            4.5.95 அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற ஒறுப்பினர் திரு,வே.கோபால கிருஷ்ணன் ஆதிதிராவிட நலத்துறை மானியக் கோரிக்கையின் மீது பேசியபோது பின்வருமாறு பதிவு செய்திருக்கின்;றார். “தமிழகத்தில் 1 கோடி மக்கள் தொகை கொண்ட தேவேந்திர குல வேளாளர் பள்ளர், குடும்பன் பண்ணாடி, காலாடி, வாதிரியான், பட்டக்காரர் தேவேந்திர குலத்தான் என்று பல்வெறு பெயர்களில் அரசு பதிவு இதழ்களில் குறிப்பிட்டுள்ளது. இப்பிரிவு அனைத்தையும் ஒரே பிரிவாக “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்கப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்” (மள்ளர் மலர் – ஜூன் 1995- பக்22) இப்பதிவு தேவேந்திரர்களில் ஒரு பிரிவு வாதிரியார் என்பதையே காட்டுவதாகும்.

 

வாதிரியார் மடம் – திருச்செந்தூர்

 

            வாதிரியாருக்கென திருச்செந்தூரில் மடம் ஒன்று பாழடைந்த நிலையில் இன்றும் இருப்பதும், அது தேவேந்திர குலத்தாருக்கான மடத்தோடு ஒட்டி அமைந்துள்ளது – இவர்களது தேவேந்திர குல வேளாளருக்குமான பண்பாட்டு உறவையும சாதியத் தொடர்பையும வெளிக்காட்டும் சரித்திரச் சான்றாகும்.

 

            மேற்கண்ட வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படியும், மக்கள் குடிக்கணக்குக் குறிப்பின்படியும், எம்.எல்.ஏ அவர்கள் பேச்சின் அடிப்படையிலும், வாதிரியார் தேவேந்திரகுல வேளாளர் ஒரு பிரிவினரே என்பதை அறிகிறோம்.

 

வாதிரியார் தேவேந்திரர் பண்பாட்டுத் தொடர்பு

 

            வாதிரியார் வேளாண்மையில தொடர்பு உடையவர்கள். இன்றும் சிலர் வேளாண்மை நில உடமையாளராய் இருப்பதும், வேளாண் தொழில் புரிவதும், இதனை உறுதியாக்கும். வேளாண்மையுடன் நெசவுத் தொழிலையும் இவர்கள் முன்னோர் ஏற்றிருக்கலம். காரணம் பருத்தி வேளாண்மை செய்த சமூகம் அதன் தொடர்புடைய நெசவுத்தொழலையும் செய்திருக்க வாய்ப்பு உண்டு. தேவேந்திரர்களின் பண்பாடு சிலவற்றை திரு.இரா.தேவ ஆசீர்வாதம் தமது ‘பள்ளர் அல்ல மள்ளா’ எனும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்படுகிறார்.

 

            – தேவேந்திரர் குலத்தார் தந்தையின் உடன் பிறந்த அத்தைமகளை முறைப் பெண்ணாகக் கொள்வர்.

            – கணவன் இறந்தால் விதவைக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமை உண்டு

            – இவர் மாட்டிறைச்சி உட்கொள்வதில்லை

            – இவரில் சிலர் வைணவ மதத்தைத் தழுவினர்

            – இன்னும் சிலர் கிருத்தவ மதத்தைத் தழுவினர்

            – இம்மரபினர் மத்தியில சாஸ்தான்கோவில் வழிபாடு உண்டு

            – முருகன் ஆலயங்கள் உள்ள திருச்செந்தூர் முதலான ஊர்களில் இவர்களுக்கு தனியாக மடங்கள் உண்டு

            – கோவில் கொடையின்போது அருள் ஏறி ஆடுபவர் இம்மரபினரே

            – பட்டிணப் பிரவேசம் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் நடைபெறும்

            – சிலம்பு விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்

 

            இவை அனைத்தும் வாதிரியார் சமூகம் கடைப்பிடித்து வரும் பண்பாடு மேலும் திருமணச்சடங்கு, இறப்புச் சடங்கு அனைத்திலும் தேவேந்திரர்களுடைய சடங்கியல் முறை காணப்படுவதும் இவ்விருவருக்குமுள்ள பண்பாட்டு நெருக்கத்தைக் காட்டுகிறது

 

            1976-க்கு முன்னர் இவர்கள் பள்ளர் என்றே வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வசதிக்காகத் தங்களை இனங்காட்டியது தேவேந்திரருக்கும் வாதிரியார்களுக்கும் உள்ள பண்பாட்டுத் தொடர்பை வலியுறுத்துவதாகும். வாதிரியார் தெரு “பள்ளக்குடி” என அழைக்கப்படுவது மேலும் இத்தொடர்பை வலு சேர்க்கிறது.

 

            தேவேந்திர குலம் என்னும் மிகப்பெரிய சமூகத்தில் எண்ணற்ற கிளைகளும் குலங்களும் இருப்பதைப் பார்க்கையில் வாதிரியான் என்னும் ஒரு பிரிவும் இதனுள் ஒரு கிளையாக இருந்து பின்னர் தொழிலால் நெசவை ஏற்றதால் தனது பு}ர்வீகத் தொடர்பை இழந்து விட்டிருக்கலாம் என்றும் கருதலாம்.

 

தொகுப்புரை

 

            நெசவுத்தொழிலை ஏற்றுள்ள வாதிரியார் சமூகம் பண்பாடு பழக்க வழக்கங்கள் என்பதோடு பள்ளர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டு வாழ்வது அனைத்திலுமே தேவேந்திரரோடு தொடர்புடைய சமூகமாக விளங்குவதால் இவர்களைத் தேவேந்திரர்களின் ஒரு உட்பிரிவாகவே இக்கட்டுரை பதிவு செய்கிறது. வரலாற்றுச் சான்றுகளும் இதனையே உறுதி செய்கின்றது. மேலும் இதனை உறுதி செய்ய விரிவான ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும் என்றும் இக்கட்டுரையாளர் விழைகின்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

8.கிறிஸ்தவமும் வாதிரியார்களும்

 

17,18 ஆம் நூற்றாண்டுகளில் தென் தமிழகத்தில் கடற்கறை ஓரங்களில் இருந்த மீனவர்களும், அதையொட்டி வாழ்ந்து கொண்டிருந்த வாதிரியார்களும் கிறித்துவ மதத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அல்லது பாதுகாப்புக் கருதி மதம் மாறி இருந்தார்கள் என்பதை அறிவோம்.

 

            வாதிரியார் சமூகம் கிறிஸ்தவ மதத்திற்கு ஆற்றிய பணிகளும் இவர்கள் கிறிஸ்தவ மதத்தால் பெற்ற பயன்களும், சாயர்புரம் மற்றும் பரமன்குறிச்சி ஆகிய ஊர்களை ஆய்வுக்களமாகக் கொண்ட இக்கட்டுரை வரையப்பெற்றது. லூக்காவு+ரில் (சாயர்புரம்) ஊரில் உள்ள லுக்காபுரத்தைப் பற்றியும் லூக்கா ஆலயத்தைப் பற்றியும் கிறிஸ்தவ வரலாற்று மேதை அருட்திரு.து.யு.ஷாரான் தமது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

            ‘1885 வாதிரியார்கள் சிலர் கிறிஸ்து மார்கத்தில் சேர்ந்தார்கள். நெசவு அவர்கள் தொழில். அவர்களுக்குத் துன்பமுண்ணடாயிருந்தால், சாயர்புரத்திற்கு 1886 துவக்கத்தில் குடியேற்றப்பட்டார்கள். அந்த தெருவுக்கு ஷாராக் தெரு என்று பெயர் கொடுக்கப்பட்டது.

 

            மேலும் சிலர் கிறிஸ்து சமயத்தை தழுவினபோது பங்களாவுக்கு சுமார் 1ஃ4 மையிலுக்கப்பால் ஒரு குடியேற்றம் (ஊழடழலெ) அமைக்கப்பட்டது. அதில் ஒரு சிறு ஆலயமும் கட்டினார்.

 

            அவ்வருஷம் அக்டோபர் 18-ம் தேதி சுமார் 4 1ஃ2, 5 மணிக்கு அக்குடியேற்றத்தையும் ஆலயத்தையும் ஷாராக் ஐயர் லூக்காபுரம் என்றும் பரிசுத்த லூக்கா ஆலயம் என்றும் பிரதிஷ்டை செய்தார். அன்று பரி.லூக்காவின் திருநாள் 1886 யு.னு”

 

            இவ்வரலாற்றில் குறிப்பிட்டுள்ள லூக்கா ஆலயத்தைப் பற்றி எவ்வித தடையமுமில்லை. ஆனால் லூக்காபுரத்தில் மிஷனுக்குச் சொந்தமான 25 சென்ட் நிலமிருப்பதால் அவ்விடத்தில்தான் ஆலயம் இருந்திருக்குமென்று நம்பலாம்.

 

            மேற்கண்டவாறு அந்த ஆலயத்தின் வௌ;ளிவிழா மலர் அறிவிப்பதிலிருந்து 1800 வாக்கிலேயே இவர்கள் மதம் மாறியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

 

            அவ்வாறு மதம் மாறிய வாதிரியார்களில் குறிப்பிடத்தக்கவர் நம்மையாழ்வார் வாதிரியார் என திரு.து.P.வால் வாதிரியார் தமது “வாதிரியார் சமூக பழக்க வழக்கங்கள்” என்னும் நூலில் குறிப்பிடுகிறார். தனக்குச் சொந்தமாக குதிரை வைத்து பயணம் மேற்கொண்டிருந்த நம்மையாழ்வார் மதம் மாறி ஞானசிகாமணி என்ற பெயரில் பிற்காலங்களில் அழைக்கப்பட்டார். கிறிஸ்தவ மதத்தில் இவருக்கு இருந்த பற்றும் உறுதியும் மேலும் பல வாதிரியார்களை கிறிஸ்தவராக மாற்ற உதவியது. இதன்பொருட்டே பொறாமை கொண்ட சிலர் இவரை கொலை செய்ததாகவும், இவரை அடக்கம் செய்த இடம் இன்றும் நம்மாழ்வார் தேரி என்று அழைக்கப்படுவதில் இருந்தும் கிறிஸ்தவ மதத்திற்கு இரத்த சாட்சிகள் வரிசையில் இவரை வைத்து கொண்டாடுகிறார்கள் இங்குள்ள கிறிஸ்தவ வாதிரியார்கள்.

 

            இவர் கிறிஸ்தவ மதத்திற்குச் செய்த தொண்டினைப் பாராட்டியும், வாதிரியார்களுக்கு கல்வி வழங்கும் பொருட்டும் அன்று இருந்த மாவட்டத் திருச்சபை (னுளைவசiஉவ னுழைஉநளளந) இவரின் நினைவாக ஷாராக் தெருவில் ஞானசிகாமணி ஆரம்ப பாடசாலை ஒன்றை நிறுவினர். இச்சமூகத்தில் தலைசிறந்த கிறிஸ்த்தவராகவும் செல்வாக்குடையவராகவும் திரு.ஞானசிகாமணி வாதிரியார் அவர்கள் இருந்ததால் பிற்காலத்தில் இவர்களது குலத்தொழிலான கைத்தறிக்கு கூட்டுறவு சங்கம் ஒன்று தொடங்கப்பட்டபோது இவர் நினைவாக “ஞானசிகாமணி கைத்தறி நெசவாளர் உற்பத்தி விற்பனை சங்கம்” எனப் பெயரிடப்பட்டது. டாக்டர் து.ரு.போப் அவர்கள் சாயர்புரத்தில் தங்கியிருந்து சமயப்பணி ஆற்றிக்கொண்டிருந்தபோது நம்மையாழ்வார் வாதிரியாரே தமிழ் கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதையும் திரு.து.P.பால் வாதிரியார் குறிப்பிடுகிறார்.

 

            அதே வேளையில் 1920 களில் சாயர்புரத்தை சேர்ந்த மெய்ஞானபுரத்தில் உள்ள திரு.சந்தோஷம் வாதிரியார் அமெரிக்கா சென்று சமயப்பணி ஆற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

            வாதிரியார் இனத்தில் முதலாவதாக மதப்போதகர் (ஐயர்) பட்டம் பெற்றவர் கனம் ஏசுவடியான் ஐயர் அவர்கள். இவர் சாயர்புரம் சாத்ராக் தெருவைச் சேர்ந்தவர். இவர் அழகாக வயலின் இயக்கி பாட்டுப்பாடி பிரசங்கம் செய்வார்.

 

            இரண்டாவது கனம் பாபு இஸ்ரவேல் டீ.யு.டீ.னு பட்டம் பெற்று சிங்கப்பு+ர் சென்று சிங்கப்பு+ர் மலேசியா தமிழ் திருச்சபைக்கு தலைவராக பணியாற்றி சிங்கப்பு+ரில் பாடசாலை நடத்தி ஓய்வு பெற்றார். சென்னையில் வந்து தங்கி அவருடைய தாயின் பெயரால் “அன்னம்மாள் டிரஸ்ட்” ஏற்படுத்தி வாதிரியார் இனத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு மேல் படிப்புக்கு உதவி செய்து வந்திருந்தார்.

 

            இவ்வாறு மதம் மாறிய வாதிரியார்கள் கல்வி பெற்று அதனால் அரசுப்பணிகளில் அமர்ந்திருக்கிறார்கள். இதன் விளைவாக புலம் பெயர்ந்து சென்று நகரங்களில் குடியேறி பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த வாதிரியார்கள் ஒருபுறம், கண்டாங்கி கட்டி தறிக்குழியில் நின்று அயராது உழைத்தாலும், நிகரான கூலியின்றி வறுமையில் வாடிய வாதிரியார்களின் குழந்தைகள் நெய்தல் தொழில் மேல் வெறுப்புற்று தறிகளுக்கு மூடுவிழா நடத்தியமை மறுபுறம்.

 

            இன்று தெருவிற்கு ஐந்து தறிகள் கூட இல்லாமல், வெறிச்சோடி கிடக்கும் வாதிரியார்கள் தெருக்களில் இவர்களின் வாழ்வுக்கு கிறிஸ்துவத்தின் பங்கு மிக நுண்ணிய அளவே இருந்ததென்று மிக உறுதியாக கூறலாம்.

 

பரமன்குறிச்சியில் :

 

            1930 வாக்கில் பரமன்குறிச்சி வாதிரியார்கள் மதம் மாறி இருக்கிறார்கள். இவர்கள் பாவாற்றி தொழில் செய்வதை தடுக்கும்பொருட்டு அன்று ஆதிக்க சாதியினர் சிலர் தெருக்களில் உடை முட்களை வெட்டி வைத்து வேலி அமைத்திருக்கிறார்;கள். இக்கொடுஞ்செயலை எதிர்க்கத் துணிவின்றி பக்கத்து கிராமமான பிச்சிவிளையில் இருந்த மறைகுரு ஒருவரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். வௌ;ளைக்காரரான அந்த குருவானவர் இவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோவிலுக்கு வரவேண்டுமென்றும், அவருக்கு திருப்தி ஏற்பட்டபின் அவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்திருக்கிறார். இதன்படி சுமார் மூன்று மாத காலம் பிச்சிவிளைக்கும் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் சாத்தான்குளத்திற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தே கோயிலுக்கு சென்று வந்திருக்கின்றனர்.

 

            இவர்களின் மன உறுதியைப் புரிந்துகொண்டு அந்த வௌ;ளைக்கார குருவானவர் திருச்செந்தூர் காவல் துறையினருடன் பரமன்குறிச்சிக்கு வந்து இனி இம்மக்களை எவரேனும் துன்புறுத்தினால் துப்பாக்கியால் சுட்டவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இதன்பின்னரே ஆதிக்க சாதியினரின் துன்புறுத்தல் முற்றிலுமாக குறைந்திருக்கிறது. சிங்கராயர் என்ற வௌ;ளைக்கார குரு தமக்கு செய்த உதவியின் நினைவாக மதம் மாறிய வாதிரியார்கள் தமது தெருவிற்கு “சிங்கராயபுரம்” என்று பெயரிட்டு அழைத்தமை இங்கு நோக்கத்தக்கது.

 

            இவர் காலத்தில்தான் வாதிரியார்களுக்கான குடியிருப்பு இடங்களும் பொதுவிடங்களும் கோவில் வருமானத்திற்கான நெல் வயல்களும் வாங்கப்பட்டதாக அறிய முடிகிறது.

 

            ஓலைக்கீற்றால் வேயப்பட்டிருந்த கோவில் 1950 வாக்கில் இவ்வுழைக்கும் மக்களை கருத்தில் கொண்டு புனித சூசையப்பர் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. அதன்பின்னர் குருவானவர் தங்குதவற்குரிய இல்லமும், மறைதிரு அலாய்சியஸ் சுவாமிகளால் கட்டப்பட்டிருந்திருக்கிறது.

 

            அதன்பின்னா 1970 களில் சிங்கராயபுரம் தனிப்பங்கு உருவாகி மறைதிரு.சேவியர் இக்னேஷியஸ் சுவாமிகள் பங்குத் தந்தையாக இவ்வு+ரில் பணியாற்றி அன்றிருந்த வாதிரியார் இளைஞர்களுக்கு கல்வியின் பெருமையை எடுத்துரைத்திருக்கிறார். அவருக்குப்பின் பங்குத் தந்தையாக மறைதிரு.ரெசாரியோ குரையிரா பணியாற்றியிருக்கிறார். மிகச்சிறிய பங்காயிருந்தாலும், போதிய வருமானமின்மையாலும் தனிப்பங்காயிருந்த சிங்கராயபுரம் அமலிநகர் பங்கோடு இணைக்கப்பட்டது. 1980 களில் குடிசைகளாயிருந்த வாதிரியார் வீடுகளில் மழைக்காலங்களில் தொழில் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு ஓட்டு வீடுகள் கட்டுவதற்கு தூத்துக்குடி மறைமாவட்ட திருச்சபை உதவி புரிந்தது எனினும் குறைந்த ஊதியத்தால் அவதியுறும் வாதிரியார்களுக்கு கைத்தறிக்கு மாற்றாக விசைத்தறி நிறுவனங்கள் நிறுவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றே கருதலாம். இதன்விளைவாக மீண்டும் தறிகள் வெகுவாக குறைந்து வாதிரியார் இளைஞர்கள் பத்திரிகை போன்ற பல துறைகளில் வேலை தேடிப் புறப்பட்டனர். எனினும் இதற்கு கைமாறாக முப்பது வீடுகளுக்கு குறைவான சிங்கராயபுரம் வாதிரியார்கள் கத்தோலிக்க  திருச்சபை பணிக்காக தங்கள் ஊரிலிருந்து ஒரு குருவை அனுப்பியிருக்கிறார்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். திரு.இரா.பங்கராசு வாதிரியார் புதல்வர் திரு.ஜேசுராசன், 07.05.1993 அன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 09.05.1993 ஞாயிற்றுக்கிழமை மாலையில் இதே ஆலயத்தில் தனது நன்றித் திருப்பலியை நிகழ்த்தியது இங்கு நினைவு கூறத்தக்கது.

 

உவரி புனித அந்தோணியார் கோயிலும் வாதிரியார்களும்

 

            தனது குலதெய்வங்களை கும்பிட்டு, குறிப்பிட்ட நாளில் பல ஊர்களில் இருக்கும் உறவினர்களை ஒன்றாக அழைத்து திருமணம் போன்ற நிகழ்ச்சியை நிகழ்த்துவது குலதெய்வ வழிபாடு மதமாற்றத்தால் குலைந்து போனது. இதனால் இதற்கு மாற்றாக மதம் மாறிய வாதிரியார்கள் பல ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்குச் சென்று வர ஆரம்பித்தார்கள். அவ்வண்ணமே பரமன்குறிச்சி, சாயர்புரம், மகிழ்ச்சிபுரம் போன்ற ஊர்களில் இருக்கும் வாதிரியார்கள் புகழ்பெற்ற திருத்தலமான புனித அந்தோணியார் திருத்தலத்தில் (திருவிவிலியத்தில் ஒப்பேர் என்று குறிப்பிட்டிருக்கின்ற ஊர் உவரியை குறிப்பதாக நம்புகின்றனர்) பொங்கல் வாரத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழாவினை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். எட்டாவது திருநாளில் பிறந்த குழந்தைகளுக்கு முடியெடுப்பது, உற்றார் உறவினர்களோடு கூட்டாஞ்சோறு உண்பது, திருமணம் போன்றவற்றை பேசி முடிவெடுப்பது போன்ற நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு மூன்று நாட்களுக்குப்பின் வீடு திரும்புவர்.

 

            இதே காலத்தில் திரைப்படம் போன்ற ஊடகங்கள் வாயிலாக பெரிதும் புகழ்பெற்ற புனித வேளாங்கண்ணி மாதா திருக்கோயில் பற்றிய கருத்து இவர்களுக்கு மேம்பட்டிருந்தது. இதன்பொருட்டு, சுற்றுலாவாகவும், குடும்பம் குடும்பமாகவும் வேளாங்கண்ணிக்கு சென்று வர ஆரம்பித்தார்கள். இவ்வாறு தமது பக்தியையும் திருமணம் போன்ற சமூக நடப்புகளையும், மதம் மாறிய வாதிரியார்கள் தத்தம் அளவில் திருப்தியுடன் நடத்தி வருகிறார்கள்.

 

 

 

 

 

 

 

 

9. சாத்தன் வழிபாடும் வாதிரியார் வழக்கமும்

அறிமுகம் :

            ‘காலத்தின் கண்ணாடி’ எனத் திறனாய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகின்ற ‘இலக்கியம்’ என்பது ஒரு சமூகத்தின் பண்பாடும் நடைமுறைகளும் மாறா இருப்பனவன்று. காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே வருவதும், அதை இலக்கியங்கள் எடுத்தியம்புவது என்பதும் தொன்று தொட்டு வரும் நிகழ்வுகள்.

 

            தென்தமிழ்நாட்டில் வாதிரியார்கள் எனும் சமூகம் சாத்தன் வழிபாடு நிகழ்த்தும் முறையும் சாத்தன் எனும் கிராமத் தெய்வத்தின் நிலை  குறித்தும் இக்கட்டுரை ஆய்கிறது.

 

            ஆய்வுக்களம் கன்னியாகுமரிக்கு அருகிலிருக்கும் குண்டல் அருள்மிகு காரிசாத்தா திருக்கோவில் ஆகும்.

 

சாத்தன் யார்?

            சாத்தன் எனுஞ் சொல் தொன்மைக்காலந்தொட்டே நமக்கு அறிமுகமான சொல்தான். சீத்தலைச் சாத்தனார் எனும் தமிழ்ப்புலவர் இங்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மேலும் சாஸ்தா என்றழைக்கப்படும் சிறு தெய்வம் சாத்தன் தான் தென் தமிழ் நாட்டின் கிராமத் தெய்வங்களுள் முதன்மைத் தெய்வமான சாத்தன் பொதுவாக ஊருக்குப் புறத்தே காவல் தெய்வமாக வீற்றிருப்பார்.

 

            எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய திவாகர நிகண்டு சாத்தனாரைக் கீழ்க்கண்டவாறு அறிமுகப்படுத்துகிறது.

 

            “கோழிக் கொடியோன் சாதவாகனன்

            காரி சாத்தன் – கடல் நிற ஐயன்”

                                                                                    (திவாகர நிகண்டு – தெய்வங்கள்)

            அதன்பின் பிங்கல முனிவர் எழுதிய அகராதியில்

            “சாத்தன் வௌ;ளையானை வாகனன்” என்று குறிப்பிடுகிறார். இங்கு வேந்தன் எனும் மருத நிலக் கடவுளுக்கும் வெண்யானை வாகனமாய் அமைந்திருத்தல் ஒப்பு நோக்கத்தக்கது.

 

            பெருந்தெய்ய வழிபாடு ஓங்கி இருந்த சிலப்பதிகார காலத்தில் சாத்தன் வழிபாடு மிகச்சிறப்பாய் நடைபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

            இளங்கோவடிகள் ‘கனாத்திறமுரைத்த’ காதையில் மாலதி எனும் செவிலித்தாய் பால்விக்கி இறந்த பாலகனின் உயிரைத் திரும்பக் கேட்கும் பொருட்டு

 

            தருக்கோட்டம்                             –           கற்பகக் கோவில்

            வௌ;யானைக் கோட்டம்                   –           ஐராவதக் கோவில்

வௌ;ளை நாகர் கோட்டம்     –           பலதேவர் கோவில்

உச்சிக்கிழான் கோட்டம்                      –           சூரியக் கோவில்

ஊர்க்கோட்டம்                             –           முருகன் கோவில்

உச்சிரக் கோட்டம்                      –           உச்சிரப்படைக் கோவில்

நிக்கந்தக் கோட்டமம்               –           அருகன் கோவில்

நிலக் கோட்டம்                           –           சந்திரன் கோவில்

ஆகிய கோயில்களிலெல்லாம் வேண்டி ஒன்றும் நிறைவுறாததால் இறுதியாக

அப்பெண்

“எம் உறுநோய் தீர்மென்று மேவியோர் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாள்”

(தனது கவலை தீர்க்க சாத்தன் ஒருவனால் மட்டுமே முடியும் என்றெண்ணி அவனிடம் வரம் கேட்கப்பணிந்தாள்)

பின் சாத்தனே அப்பெண்ணுக்கு பாலகானய்ப் போய்க் கிடந்தார் என்றும் நிகழ்வு கூறப்படுகிறது.

(சிலம்பு- 9வது காதை – பாடல் 5-15 மற்றும் 25)

இவ்வாறு சாத்தன் எனும் தெய்வத்தின் சிறப்பு இலக்கியங்களில் பேசப்படுகின்றது. இன்று வரையிலும் வாதிரியார்கள் தங்கள் குல தெய்வமாகக் கும்பிட்டு வருகின்ற சாத்தன் எனும் தெய்வம் காவல் தெய்வமாய் கோழிக் கொடியுடன் கருங்குதிரை மேல் ஊர்வலம் வருகின்றார்.

ஊர்ப்பெயர்களில் சாத்தன்

குமரி மாவட்டம் தெங்கம்புதூரில் வாதிரியார் பெருமக்கள் வாழ்ந்து வரும் தெருஃஊர்ப் பகுதிக்குப் பெயர் சாத்தன் கோவில் விளை.

            அவ்வாறே தூத்துக்குடி பகுதியிலிருக்கும் செந்திகைக் குறையான் கிளையைச் சேர்ந்த வாதிரியார்கள் குல தெய்வம் அமைந்திருக்கும் பகுதி சாத்தன்குளம் என்று அழைக்கப்படுகிறது.

 

            இன்றும் சைவன் மற்றும் அருகப்பணிந்தான் கிளை உள்ளிட்டோர் குல தெய்வக் கோவில் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டம் உவரிக்கருகிலிருக்கும் அவ்வு+ரின் பெயர் காரிகுண்டல் அஃதாவது கரிய நிறமுடைய குதிரையின் மேலேறி ஊர்க்காவல் புரியும் சாத்தன் எழுந்தருளியிருக்கும் இடம் எனப் பொருள் கொள்வர்.

 

            இங்ஙனம் ஊர்ப் பெயர்களில் சாத்தனார் வலம் வருவது அறியப்பெறுகிறது.

கோவில் அமைப்பு :

           

            ஊரின் புறத்தே கிழக்கு நோக்கி கட்டப்பட்டிருக்கும் கோவிலின் மதில்கள் 6-8 அடி உயரத்திலிருக்கும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கும் 10ஒ6 கருவறையில் சாத்தன் மூலவராய் வீற்றிருப்பார். அறைக்கும் மதில்களுக்குமிடையிலிருக்கும் பிரகாரம் தேரிமணல் பரப்பப்பட்டதாய் இருக்கும்.

 

            கோவிலின் முன்முற்றத்தில் வரிசையாக சாத்தனின் படைத் தளபதிகளும் (கருப்பசாமி, மாடன், குறிகன், முண்டன் உள்ளிட்டோர்)நிற்கும் நிலையில் இருக்கின்றனர்.

 

            கருங்கற்களில் செதுக்கப்பட்ட பெருங்குதிரைகள் வாயில் நேராக நிற்கின்றன.

 

            இரவில் குதிரை மீது அமர்ந்து தனது பரிவாரங்களுடன் ஊர்வலம் வந்து காத்து நிற்பதாக கிராமத்திலிருக்கின்ற வாதிரியார் சமூகம் நம்பிக்கை கொண்டு வணங்கி வருகின்றனர்

 

சாத்தன் சாமி

 

            மூலவராய் இருக்கும் சாத்தனார் ஐயன் என்றும் அரிகரன் என்றும் சாஸ்தா என்றும் பலவாறு அழைக்கப் பெற்று வருகிறார். குறிப்பாக இவருக்குப் பலியிடுதல் இல்லையாயின் ஓதுவார் என்றழைக்கப்படும் பு+சாரி இவருக்கான பு+சைகளைச் செய்து வருகிறார்.

 

            மாறாக வெளியில் நின்று கொண்டிருக்கும் பரிவாரத் தெய்வங்களுக்கு இன்றும் பலியிடுதல் நடைபெறுகின்றது. இப்பலி நிகழ்வை ஊரிலிருக்கும் அம்பலகாரர் அல்லது தலைவர் எனப்படுபவர் நிறைவேற்றி வைக்கிறார்.

 

            இப்போது தங்களது குல தெய்வம் குடியிருக்கும் இடம் வெகுதொலையில் இருப்பதாலும், காலப்போக்கில் இடம் பெயர்ந்த வாதிரியார்கள் குறிப்பிட்ட ஒருநாளில் கூடி சாத்தனுக்கு விழா எடுக்கின்றனர்.

            அப்போது எண்ணெய் காணாத சிலைகள் எண்ணெய் பு+சப்பட்டு ஆண்டுக் கொருமுறை விழாவில் புதிய உருவம் பெற்றது போல் காட்சியளிக்கின்றன.

 

            விழா

            பார்த்தனுங் கருளும் வைத்தார்

                        பாம்பரை யாட வைத்தார்

சாத்தனை மகனா வைத்தவர்

சாமுண்டி சாம வேதம்

            கூத்தொடும் பாட வைத்தார்..;.

            (தேவாரம் 4:32:5)

            எனத் திருநாவுக்கரசர் சாத்தனை சிவனின் மகனாக்கி வணங்கி வருகின்றார். பெருந் தெய்வ வழிபாடு பெருகி நின்ற காலத்தும், பௌத்த மதம் மிளிர்ந்திருந்த காலத்தும் தமிழகத்தில் இருந்து வந்த சிறு செய்வங்கள் பெருந் தெய்வங்களோடு தொடர்பு படுத்தப்பட்டன. அவ்வாறே புத்தனுக்கும் மறு பெயராய் ஐயன் எனும் பெயர் வழங்கி வருகிறது.

 

            ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திர நட்சத்திரத்தன்று சாத்தன் வழிபாடு வாதிரியார்களால் சிறப்பாக நடத்தப்படுகிறது.

 

            உத்திரத்திற்கு முந்திய நாள் அதிகாலையில், சிறு சிறு கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் தமது குல தெய்வக் கோவில் நோக்கி நடந்தும், உந்துகளிலும் வரத் தொடங்கி வாதிரியார்கள் காலை 7-8 மணியளவில் கூடுகின்றனர். பின் தாம் கொண்டு வந்திருந்த கட்டுக் சோற்றை ஓரிடத்தில் வைத்துவிட்டு உற்றார் உறவினர்களுடன் கடல் நீராடச் செல்கின்றனர். பின் தங்கள் குலதெய்வம் சாத்தனை வணங்கிவிட்டுத் தாம் கொண்டு வந்திருந்த கட்டுச் சோற்றைப் பகிர்ந்து உண்கின்றனர்.

 

            அன்றே வெவ்வேறு கிராமத்திலிருந்து வந்திருக்கும் வாதிரியார்களில் சிலர் கூடி பு+சைக்குரிய பொருட்கள் வாங்குவதும், அதற்கான செலவுகளுக்கான தொகையைத் தங்களுக்குள்ளே வரியெனப் பகிர்ந்து கொடையாக வந்த கடா, சேவல், வாழைத்தார், அரிசி இவற்றையும் கணக்கில் கொண்டு மீதித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு கடைகளுக்குச் செல்கின்றனர்.

 

            வந்திருக்கும் பெண்கள் சமையல் செய்கின்றனர். அப்போதே வெவ்வேறு ஊரிலிருக்கும் பெண் மாப்பி;ள்ளை குறித்த செய்திகளும் பரிமாறப்படும். சில நேரங்களில் அங்கேயே திருமணம் பேசி முடிக்கப்படுவதும் உண்டு.

 

            அன்று இரவு 7 மணி அளவில் சாத்தனுக்கு சைவ பு+சை கொடுக்கப்படுகிறது. பு+, பழம், சர்க்கரை பொங்கல், தேங்காய் இவையே சாத்தனுக்கு படையல் பொருட்களாக வைக்கப்பட்டிருக்கும்.

 

            ஓதுவார்கள் என்று அழைக்கப்படும் புசாரிகள் கிராம தெய்வத்திற்கு தீப ஆராதனை காட்டி வணங்குகிறார். அதன் பின்பு நடை சாத்தப்பட்டு பரிவாரங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்படும். பின் வில்லுப்பாட்டு போன்ற நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. பொதுவாக வில்லுப்பாட்டில் இடம் பெறும் கதைகள் சுடலை மாடன் சுவாமி கதை, இசக்கியம்மன் கதை, பஞ்சபாண்டவர் கதை போன்றவை பாடப்படுகின்றன.

 

            பௌர்ணமி நாளாய் இருப்பதால் வங்காள விரிகுடா கடலின் அலைகள் பொங்கி எழும்புகிறது. அந்த நிலையிலும் வாதிரியார் இளைஞர்கள் கடல் நீராடுவதைக் காணலாம். இந்த நீராடல் நள்ளிரவு பு+ஜை தொடங்குகின்ற வரையிலும் நடைபெறுகிறது.

 

            பரிவாரங்களுக்கான உயிர்ப்பலி தொடங்கப்படுகிறது. இவ்வாறு பலி கொடுக்கும் நிகழ்ச்சி சங்ககாலம் தொட்டே நிகழ்ந்து வருவதற்குச் சான்றாக பல்வெறு இலக்கியங்களைக் காட்ட இயலும்.

 

            “பல்வேறு படவுட்பேணிக் கலிசிறந்து” (நற்: 251:8)

            “உயிர்ப்பலி பெறூஉம் உறுகெழு தெய்வம்” (அகநா : 166:7)

“நல்லிறை மெல்விரல் கூப்பி

இல்லுறை கடவுட்கு ஆக்குவது பலியே” (அகநா : 282:17-18)

“கணகங்கெழு கடவுட்குயிர்பலி தூஉய்ப்

பரவினம் வருகஞ் சென்மோ” (நற் : 358 : 6-7)

 

முதல் உயிர்பலி நிகழ்வாக மாடனுக்கு எதிரில் சிறு குழி ஒன்று தோண்டப்படுகிறது. அதில் தீக்கங்குகளை நிரப்பி அம்பலக்காரர் என்னும் முதன்மை வாதிரியார் சேவற்குஞ்சு ஒன்றை அதனுள் வைத்து மூடி விடுகிறார்கள். பின்னர் பலியான சேவற்குஞ்சை வெளியில் எடுத்து பனை ஓலையால் வனையப்பட்ட பட்டையில் வைக்கப்பட்டு படையல் இடப்படுகிறது. அதே வேளையில் நெல்லை, குமரி மாவட்டங்களில் மட்டுமே அடிக்கப்படும் இராஜமேளம் முழங்கப்படுகிறது.

 

            பின் கருப்பசாமிக்கு கடா ஒன்று பலியிடப்படுகிறது. நேர்ச்சியாய் வந்த கடா ஒன்றின் நெஞ்சைப் பிளந்து பட்டையில் இரத்தம் பிடிக்கப்பட்டு படையல் பொருளாக வைக்கப்படுகிறது. இவ்வாறு எல்லா பரிவாரங்களுக்கும் படையல் பொருட்கள் வைத்த பின்பு நள்ளிரவு பிளக்கப்பட்ட கடா சமைக்கப்படுகின்றன. இப்பொழுது பெண்கள் சமைப்பதற்கும் வந்திருக்கும் ஆண்கள் அதிகாலை பு+ஜைக்கு ஏற்பாடுகள் செய்யவும் தலைப்படுகின்றனர்.

 

            சமைக்கப்பட்ட கடாயும், சோறும், கருப்பசாமி உட்பட்ட சாத்தனாரின் பாரிவாரங்களுக்கு படைக்கப்பட்டு அதிகாலை பு+ஜை தொடங்கப்படுகிறது. இப்பு+ஜையில் சேவல் ஒன்று பனை மட்டையில் கழுவேற்றப்படுகிறது. பின் கடாய் ஒன்று நீண்ட அரிவாளால் சாமியாடியால் ஒரே வெட்டில் தலை வீழ்த்தப்பட்டு உயிர்ப்பலி கொடுக்கப்படுகிறது.

 

            அதன்பின் பு+ஜைகள் நடத்தி முடிக்கப்படுகிறது.

 

            சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் பரிமாறப்படுகிறது. விழா நிறைவாக சாத்தனுக்கு சைவ பு+ஜை மதியம் கொடுக்கப்படுகிறது.

தொகுப்புரை :

 

            ஒருசமூகம் தனது பண்பட்ட வரலாறுகளை, பழக்க வழக்கங்களை பேணிக்காப்பது இயல்பானதுதான். அவ்வாறே தென் தமிழகத்தின் மள்ளர் பிரிவினரான வாதிரியார்கள் தங்கள் குல தெய்வமான சாத்தனை வணங்கி வருகின்றனர்.

 

கள்ளும் கண்ணியும் கையுறை யாக

நிலைக்கோட்டு வௌ;ளை நால்செவிக் கிடாய்

நிலைத்துறைக் கடவுட் குட்பட வோச்சி

                                    (அகநா 156: 13-15)

என்னும் அகநானூறுப் பாடல் வழக்கு இன்றுவரை வாதிரியார்கள் வழக்கத்தில் உள்ளது பெருமை மிக்கதாய் இருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

10. வாதிரியார் வாழ்வில் “களியலடி” விளையாட்டு

 

            ஒரு சமூகத்தின் பண்பாட்டு வரலாறு என்று குறிப்பிடும்போது அவர்களின் பொழுதுபோக்கும் விளையாட்டும் இடம் பெறுவது இன்றியமையாத வொன்றெனலாம். தொல் தமிழர்களின் விளையாட்டுகளான

வட்டாடல்

பந்தாடல்

கழங்காடல்

கும்மியாட்டம்

ஊசலாட்டம்

ஓரையாடுதல்

வண்டலிழைத்தல்

கிலிகிலியாடல்

சிறுதேருருட்டல்

கோழிப்போர்

ஏறுதழுவுதல்

ஆகியன குறித்த செய்திகள் இலக்கியம் நெடுகிலும் காணலாம்.

            தனது கல்லா இளமைப் பருவத்தில் மங்கையர் வியக்கத்துடுமெனக் கிணற்றுள் பாய்ந்து மணல் அள்ளிக் கொண்ட வந்த நிகழ்வை நினைத்து ஏங்கும் விழுத்தண்டூன்றினார் குறித்த பாடல் தமிழர் வாழ்க்கயைpன் இளமைப் பருவ காலத்தை விளையாட்டு;ம் பொழுதுகோக்குமாய்க் களித்ததைப் பகரும்.

 

            “கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துதட துடுமெனப் பாய்ந்து குளித்து மணற் கொண்ட கல்லா இளமை” (புறம் – 243).

 

            இவ்வாறு தொன் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டிருக்கும் வாதிரியார் சமூகத்தினரின் நாட்டுபுறக் கலையான ‘களியல்’ எனும் கலை குறித்து ஆய்வு செய்கிறது இக்கட்டுரை.

களியலடி – சொல்

 

            களியல் எனும் சொல் களித்திருப்பது, மகிழ்வுடன் ஆடிப்பாடுவது எனும் பொருளில் ஆளப்படுகின்ற ‘களி’ என்ற சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்டிருக்கின்றது. வாதிரியார்கள் களரி, களியல், சிலம்பு முதலான விளையாட்டுகளில் தேர்ச்சியுற்றிருந்தனர். பொழுது போக்கிற்காகவும், திருமணம், பு+ப்பு போன்ற சடங்குகளின்போதும் இவர்கள் இவ்வாட்டத்தை ஆடி மகிழ்ந்திருந்தனர்.

 

            களியலடி எனும் பெயருக்கு ஏற்றவாறே மகிழ்ச்சியுடன் முறையாக இரு கோல்களைக் கொண்டு ஒன்றையொன்று அடிப்பதால் வெளிப்படும் ஓசை – இசையாக மாறி சுற்றியிருப்பவரையும் மகிழ்விக்கும் விளையாட்டாகும்.

 

            முறையாக கூடி கைகளால் தட்டி ஓசையெழுப்பும் கும்மியெனும் பெண்கள் ஆட்ட முறையினை இங்கு ஒப்பு நோக்கலாம்.

 

            கேரளத்தின் ‘கதகளி’ அதாவது கதைப்பாடலுடன் கூடிய ஆட்டம் என்ற சொல்லினை தொடர்புப்படுத்திப் பார்த்தால் களியல் ஆட்டத்தின் தொன்மை புலப்படும்.

 

களியற்கலை

 

            களியற்கலை என்பது ஒரு கூட்டுக்கலை. 8 அல்லது 12 வாதிரியார் இளைஞர்கள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுப்பர். அவருக்கு வாத்தியார் என்று பெயர். இவர்தான் இவர்களுக்கு ஆசான் அல்லது குரு. அவர் களியல் பாடல்கள் வெளியிலிருந்து பாட, களியல் அடிக்கும் இளைஞர்கள் பின்பாட்டு பாடுவர்.

 

            களியலுக்கு பயன்படும் கம்பு பாவாற்றுவதற்கு பயன்படுகின்ற உடங்கம்புதான். அதை ஒரே சீராக வெட்டி, வாத்தியார் தாள்பணிந்து ஆட்டத்திற்கு முன்பே பெற்றுக் கொள்வர்.

 

            ஆட்டம் முடிந்த பின்பும் அவ்வாறே குருவினை வணங்கி கையிலிருக்கும் கம்பினை (கழி)த் தருவர். பின்னர் அதை ஒன்றாக கூட்டப்பட்டு பிறிதொரு நாளுக்காக ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

 

            சில வேளைகளில் குழுவிற்கு ஒரே சீரான உடைகள் இருப்பதும் உண்டு. இவர்களின் நடனம் வட்டமாக அமைந்த இடத்தில் நடைபெறும். நடுவில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டிருக்கும்.

 

களியலடி :

 

            “திகிர் தாஆஆந் தை” எனும் ஆரம்ப அடியை குழுத்தலைவர் பாட பின்பாட்டுப் பாடி அனைவரும் குத்துவிளக்கை நோக்கி கைகளில் உள்ள குச்சியால் கும்பிடுவர்.

            பின் முன்னோர் வணக்கமும், குருவணக்கமும் செலுத்தப்படும்

 

            கால்களை முன்னும் பின்னும் நகர்த்தி வட்டமாக நிற்போர் ஒன்றுவிட்டு ஒருவராக எதிர் எதிர் திசைகளில் சுற்றி வருவதும், பாடலுக்கு தக்கவாறு கைகளில் உள்ள குச்சிகளைத் தட்டி இனிய ஓசை எழுப்புவதுமாய் தொடர்ந்து நிகழ்வது களியல் ஆட்டம்

 

            பல்லவி பாடும் போது சீராகவும் மெதுவாகவும் திரும்பும் கால்கள் சரணம் பாடும்போது மிக வேகமாகவும் அகன்றும் போர் மல்லன் கால்களை ஒத்திருக்கும். இதற்கு ‘காவோட்டுதல்’ எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். கையிலிருக்கும் புணித்தட்டைத் திருப்பி சூழ்ச்சத்தை மறு கையில் சுற்றி விடும் பாவோட்டு நிகழ்ச்சி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

 

            இவ்வாறு பாடி முடிந்ததும், இருப்போர், விழா நாயகர் முதலானோருக்கு வணக்கம் செலுத்தி இறுதியாக குருவணக்கத்துடன் களியலை முடித்து வைப்பர். “திந்தா திகிர்தா தை” என்பது முடிவு வரிகள்.

           

            வாதிரியார் சமூகத்தின் மணவிழா இறுதி நாள் சடங்குகளில் களியல் அடிக்கப்படுகிறது. திருமண நாட்களின்போது இவர்களை அழைத்து களியல் அடிக்கச் சொல்லும் மணவீட்டார் பரிசுகளும், பண முடிப்புகளும் வழங்குவதுண்டு.

 

 

 

 

களியல் பாடல்

 

            பல பாடல்கள் களியல் பாடல்களாய் இருப்பினும் எடுத்துக்காட்டாக குமரி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதிகளில் பாடப்பட்டு கரும் களியல் பாடலைக் காணலாம்.

 

            பல்லவி

            தெந்தே நாதி நாதி நன்னா

            தென்னாத்தந்தே நாதிநன்னா-2

            பாவோட்டு

1.         ஆதி முதல் அந்தம் வரை

ஆடிப்பாடி கழித்திடவே

அல்லலொன்றும் வந்திடாமல்

அருள்புரிவாய் எங்கள் நாதா.

2.         வந்திருக்கும் யாவருக்கும்

வணக்கம்பல கூறுகிறோம்

வரவேற்று எங்களையே

வாழ்த்தும்படி வேண்டுகிறோம்

3.         எம் களியல் ஆசானாகத்

தர்மலிங்கப் புலவரையே

ஏற்று நாங்கள் தெண்டனிட்டு

ஆடுகிறோம் ஆட்டத்தையே

4.         தாளமடி தப்பாமலே

தங்குதடை இல்லாமலே

தூள் பறக்கும் ஓட்டத்தாலே

தொல்லையில்லை ஆட்டத்தாலே

5.         முடுக்கி விடும் பாட்டினையே

முன்னிருந்து கேட்பவர்கள்

அடிக்கு அடி தாளம் போட்டு

ஆடத்தூண்டும் யாவரையும்

வேறு

1.         தங்கள் களியல் கலை சிறக்க – மக்கள் இதயமெல்லாம் துணையிருக்க

2.         களியாட்டம் கண்டாலே – மக்கள் கவலையெல்லாம் பறந்திடுமே

3.         நாடு போற்றும் கலையாக எங்கள் களியல் ஆட்டம் ஒயிலாக

4.         பாடுபட்டு உழைக்கின்ற – மக்கள் எல்லாம் வாழ்க வாழ்க

தொகுப்பாக

            தமது பண்பாடாகவும் பொழுதுபோக்கிற்காகவும் நாட்டுப்புறங்களில் ஆடப்பெற்று வந்த களியலாட்டம் இன்று அருகிவருவது கண்கூடு.

            நெசவுத்தொழிலை விட்டுவிட்டு நகர்புறங்களில் வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வாதிரியார் இளைஞர்களுக்கு இவை குறித்தெல்லாம் எண்ணக்கூட நேரமின்றி இருக்கின்றனர்.

 

            கடந்த 10ஃ20 ஆண்டுகளில் இவர்களது வாழ்க்கை முறையே மாறிவிட்டிருக்கின்றது எனினும் இன்றும் இதன்விட்ட குறை தொட்ட குறையாக வெகு சில சிற்றூர்களில் மட்டும் களியடிக்கப்படுவது மகிழ்ச்சியைத் தருகின்றது.

           

            ஒரு கலை அழிந்து போவதில் அரசு உட்பட யாருக்குத்த்hன் மகிழ்ச்சியாய் இருக்கும்?

 

 

 

 

 

 

 

11. வாதிரியார் இனப்பெண்கள் குறித்த உரையாடல்

 

கலந்துகொண்டவர்கள்                                    1. திருமதி.குணசீலி அம்மாள் (56)

                                                            2. திருமதி. இந்திராகாந்தி (35)

                                                            3. திருமதி.அமலா (30)

நாள் : 26.12.99. சென்னை

 

1.         வாதிரியார் இனப்பெண்கள் பிற சமூகத்தால் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?

பள்ளி, வாதிரிச்சி

2.         பிறப்புச் சடங்கில் ஆண் பெண் பாகுபாடு உண்டா? ஆம் எனில் அதன் விளக்கம்

ஆம். ஆண் குழந்தை பிறந்தால் குலவையிடுவர்

3.         நெய்தலின்போது பெண்களின் பங்கு என்ன?

சம பங்கு வகிக்கின்றனர். ஆண்களுக்கு இணையாகவும், மேலாகவும் – பசை போடுதல், பாவாற்றுதல் உட்பட அனைத்து வேலைகளிலும் பங்கேற்கின்றனர்.

4.         பு+ப்புச்சடங்கு நடைபெறும்போது – பெண்கள் பங்கு?

முட்டை கொடுக்கப்படும். எண்ணெய் மஞ்சள் பார்ப்பதில் பொதுவாக தந்தை வழி அத்தை மகளுக்கு முன்னுரிமை

5.         விழாக்காலத்தில் பெண்கள் நிலை என்ன?

     வீட்டு வேலை போக மீதி நேரத்தில் முளைப்பாரி, கும்மி அடித்தலில் பங்கேற்பு.

6.         திருமணத்தின்போது வாதிரியார்களின் கிளைவழி உறவு முறையை அறிந்திருக்கிறீர்களா? அறிந்திருந்தால் தொடர வேண்டுமா?

அறிந்திருக்கின்றோம் – மிகக் குறைந்த அளவில்

ழூ இவை தொடரத் தேவையில்லை

(ழூ இதில் வயதானவர்களுக்கும் இளம் பெண்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது)

  7. அக்காள் மகளைத் திருமணமுடிப்பது குறித்த உங்கள் கருத்து என்ன?

                        கூடாது. அம்மான் (மாமன்) என்றாலே அம்மாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்

8.         திருமணச் சடங்குகளை அறிந்திருக்கிறீர்களா?

அறிந்திருக்கிறோம். வாதிரியார்களுக்கென தனித்த பண்பாடாக கிளைப்பணம், கும்பிட்டுக்கட்டு போன்ற சடங்குகள் மிகவும் தொன்மையானதும் சிறப்பானதும் ஆகும்.

9.         மகப்பேற்றுச் சடங்குகள் குறித்து-

இச்சடங்கை வாதிரினிகள் ‘பொங்கி போடுதல்’ என அழைக்கின்றனர். பெண்ணின் பெற்றோர் மகள் வீட்டிற்கு வந்து, மாப்பிள்ளையின் ஊரில் இருக்கும் தமது இணை வழியினருக்கு விருந்து கொடுத்து தன் வீட்டிற்கு 7 அல்லது 9-வது மாதத்தில் அழைத்துச் செல்கின்றனர்.

10.       இறுதிச்சடங்கு – ஒப்பாரி – தெரியுமா?

ஒப்பாரி பாடத் தெரியாது.

 

 

 

12. புலம் பெயர்ந்த நிலையில்

 

            “இந்தியக் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் வறுமையை மறைத்து வேஷம் போடுவதிலும், அதைச் சமாளிப்பதிலும் நகர மக்களைவிட திறமைசாலிகளாக உள்ளனர்.

 

            “தெளிவான வரையறையற்ற நடுத்தர வகுப்பினர்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் போலியான கற்பனை உலக வாழ்க்ககை நடத்துகின்றனர்” என்று தனது “இந்திய சமுதாயம்” எனும் நூலில் சியாமா சரண்தூயே குறிப்பிடுகிறார்.

 

            பாரம்பரியமிக்க கோவில்களும், வீடுகளும் அகன்ற வீதிகளையும் உள்ளடக்கிய கிராமங்களை விட்டு விட்டு பிற சமூகங்கள் போலவே தொழில் மற்றும் படிப்பு விஷயமாக நகர் நோக்கி நகர்ந்த வாதிரியார்கள் வாழ்க்கை முறையை உற்று நோக்கும்போது மேற்கூறிய சரண் துபேயின் கருத்துக்கள் வாதிரியார் விஷயத்தில் மெய்ப்பட்ட நிலையை உணர முடிகிறது.

 

சூரத்தில்…

            குறிப்பாக நெல்லை மாவட்டம வள்ளியு+ருக்கு அருகில் இருக்கும் வள்ளியம்மாள் புரத்திலிருந்தும் மேலும் அதனருகில் இருக்கும் அருளானந்தபுரத்திலிருந்தும் புலம் பெயர்ந்த வாதிரியார்களின் 40, 50 குடும்பங்கள் வேலையின் பொருட்டு குஜராத் மாநிலம் சூரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

 

            பன்னிரண்டு மணி நேர மில் வேலையும், இந்தி, குஜராத்தி போன்ற புது மொழிகளுக்கும் தன்னை வெகு விரைவில் பக்குவப்படுத்திக் கொண்டும், இளம் வாதிரினிகள் குஜராத்தி உணவு முறைக்கு உடனே தங்களை மாற்றிக் கொண்டும் வாழும் நிலை வியப்பைத் தருகிறது.

 

            சூரத்தில் வாழுகின்ற வாதிரியார்களில் பெரும்பாலோர் கிருத்தவர்களாய் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில சர்ச்சுகளுக்குப் போய் வருவதும், விருந்தினர்கள் வந்தால் அவர்களை தப்தி நதிக்கரைக்கு அழைத்து வந்து படகு அமர்த்தி சூரத்தின் எழிலைக் காணவும் வைக்கிறார்கள்.

 

            ஆண்டுக்கு ஒருமுறை தமது சொந்தக் கிராமங்களுக்கு கோவில் திருவிழாவின்போது குடும்பத்துடன் வந்து திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்கள்.

           

            வாதிரியார் வாழ்நிலையின் பிறப்பு, பு+ப்பு, இறுதிச்சடங்குகள் எதுவும் கடைப்பிடிப்பதற்கு வாய்ப்பின்றி அங்கு உள்ளோரின் வாழ்நிலை, சடங்குகளை போலச் செய்கிறார்கள்.

 

சென்னை, கோவை, மதுரையில்…

            அரசுப்பணி நிமித்தமாகவும், பத்திரிக்கை துறைப் பணியின் பொருட்டும், சிறு வியாபாரிகளாயும், நகர் நோக்கி வந்தவர்களில் படித்து அரசுப்பணியில் இருப்பவர்களுக்கும் ஏனையோர்க்கும் நெடிய இடைவெளி இருக்கிறது. தனித்தனி தீவுகளாக இருக்கும் இவர்கள் திருமணச்சடங்குகளில் கூடிக்கொள்கிறார்கள்.

 

            வாதிரியார்களுக்கே உரித்தான மாமன் செய்தல், கும்பிட்டு கட்டு போன்ற எந்தச் சடங்கும் கடைப்பிடிக்காமல் இருப்பதோடு, போலச் செய்கின்ற சடங்குகளும், பண்டிகைகளும பகட்டு மிகுந்த நயகுறைவான தற்பெருமை வெளிப்படுத்தும் முயற்சியை போலாகி விடுகின்றன. ஏழ்மையிலிருந்தும் எல்லை மீறிச் செலவழிப்பது இந்த சடங்குகள் செய்வதை கவுரவத்திற்குரிய விஷயமாகவும், கடமையாகவும் நினைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பகுத்தறிவு பின் வாங்குகிறது.

 

            ஒரு வகையான பாதுகாப்பின்மையை எண்ணி, சிறு வணிகர்களும், ஒரு சில கடை வைத்திருப்பவர்களும், பிற படித்த நடுத்தர அரசுப்பணியினரும் கூட தங்களை தங்கள் சாதியால் அறிமுகப்படுத்திக் கொள்ளாமலும் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் அதே சமூக அடையாளத்தோடு சேர்ப்பதும் நடந்தேறி வருவது கண்கூடு.

 

            நகரங்களில் இந்த அடையாளத்தோடு சேர்ந்த பள்ளிக் குழந்தைகள், பட்டதாரிகளாக உள்ளீடற்றவராய் உலவுகின்றதை நாம் இன்றும் காண முடிகிறது.

 

            இந்த நிலை தொடருமானால், தன்னைப் பற்றி அறிந்து கொள்ளாத நகர் வாழ் வாதிரியார்களுக்கும் தனது தனித்த பண்பாடுகளை ஏழ்மைநிலையிலும் கடைப்பிடித்து வரும் சிற்றூர் வாதிரியார்களுக்கும் ஒருநீண்ட விலக்கு ஏற்பட்டு விட வாய்ப்பு இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

 

            இவ்வாறு இச்சமூகம் அதிர்ச்சி தரும் மாறுதல்களுக்கு உள்ளாகி வலி ஏற்படுகின்றன. இவை புண் படுத்துகின்றன என்பது உண்மைதான். இதை தொடர்ந்து இளைஞர்கள் புதிர் விடுவிப்போர்களாய் இச்சமூகத்திற்குப் பயன்பட்டுக் கொண்டு இருப்பது சற்று ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

 

            இவ்வாறு நகர் வாழ்வில் சிற்சில குறைகள் இருந்தாலும் அகமண உறவு முறையில் இன்றுவரையிலும் உறுதியாக இருக்கிறார்கள். இதுதான் தொப்புள் கொடி உறவாய்த் தொன்று தொட்டு தொடரும் மரபுகளுக்கும் பண்பாடுகளுக்கும் மதிப்பளித்து காப்பாற்றி வருகின்றது. இதனைப் போற்றி வருகின்றவர்கள் வணக்கத்திற்குரிய வாதிரியார்கள்.

 

 

 

 

 

 

 

 

Advertisements

பூமணியின் அஞ்ஞாடி குறித்து

த செயகுமார்

நல்லில் , 41- மங்கைமனவாள பெரிய தெரு, பறக்கை, கன்னியா குமரி மாவட்டம்- 629603 # 979 033 0773

பூமணியின் அஞ்ஞாடி குறித்து

“ அடேயப்பா! “ ன்னு நாம சொல்லும்படி பூமணி “ “ஸ் ….. அஞ்ஞாடி” ன்னு சொல்லி மலைப்பூட்டுகிறார்

எதை முதலில் குறிப்பிடுவது. நாவலை வாசித்துக் கொண்டிருக்கும் போது அறியாமலேயே கன்னத்தில் வழிந்து கண்ணாடி நனைத்து இறங்கிய கண்ணீர்த் துளிகளைச் சொல்வதா? பின்னிரவில் நீண்ட அமைதியில் ஒரு பைத்தியக்காரனைப்போல் சத்தமிட்டுச் சிரித்த செய்தியை விவரிக்கவா? பிரதிகள் சில வேளைகளில் மலரும் நினைவுகளாய் மாறி மேல் தொடர முடியாமல் புத்தகத்தை மூடி அந்நினைவுகளில் ஆழ்ந்து போவதைப் பேசுவதா? கடந்த நூற்றண்டின் மொழி வலிமையை முன் நிறுத்திய அந்த ஆளுமையைக் கண்டு சொல்வதா? நாட்டுபுறங்களில் மள்ளர்களின் பேச்சு பழக்கதில் அள்ளித் தெளித்த சொலவடைகளில் மலைத்து நின்றதைச் சொல்வதா? எதைச் சொல்வது?

இது தான் பூமணியின் செய்தி என்று அறுதியிட்டுக் கூற முடியாதவாறு பிறந்த ஜாதி, கடைப்பிடிக்கும் மதம், படித்த படிப்பு, செய்யும் தொழில், நிகழ்த்தும் வன்முறை, நோக்கும் கனவு, அளிக்கும் புனைவு. பழகும் கதைகள் அனைத்திலும் வெவ்வேறு காலங்களில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒழிந்து கிடப்பதை வெளிக் கொணர்வதாய் நாவல் நீள்கிறது. மக்கள் கூட்டத்தின் வெறுமையும், தனிமனிதனின் அருமையும் 22 படலங்களிலும் தொடர்கிறது.

இளவயது நாட்களில் அம்மா கூறிய செய்தி இது.
பாளையைங்கோட்டையில காலேஜ் ஆஸ்ட்ல்ல இருந்த தன்மகனை கண்குளிரப் பாத்துப்புட்டு அம்மாத சோத்துக்கட்டணுமும் கட்டிக்கிட்டு வரலாம்னு கண்டாங்கி கழற்றி வேட்டியும் துண்டும் போட்டுப்போன தங்கராசுவாதிரி, மகன் கூடபடிக்கிற பையங்ககிட்ட ‘ ‘எங்க வீட்டு வேலைக்காரன்னு’ சொன்னதைக் கேட்டு தறி ஆலையில நாண்டுக்கிட்டு நின்னு செத்துப்போனாரு” . இது தானே பொம்மக்காளும் எடுத்த முடிவு.

அது 1975 ம் வருடம் எஸ் எஸ் எல் சி பிள்ளைகளுக்கு இரவுப்பாடம் நடத்தும் பள்ளி வெள்ளாளன்விளையில் இருந்தது. ஒரு நாள் ராப்பள்ளி முடிந்ததும், பள்ளி மைதானத்தில் அலைந்து திரிந்த கழுதை மேல் நண்பர்கள் ஏற்றி விட, வேகமாய்ச் சுமந்து சென்று பள்ளிக்கூட கருக்குமட்டை வேலியில் உதறி விட்டு கழுதை ஒடி விட, முதுகில் சிராய்ப்பும், மறுநாள் வீட்டிலும் வாத்தியரிடமும் பிரம்படி பட்ட நிகழ்ச்சியின் பிரதிபலிப்பு தானே கால ஒடிச்சுகிட்ட ஆண்டி மற்றும் பல்லத் தொலைச்சுப்புட்ட மாரியின் கதை”

பின்னும் ஒரு நாளில் வட்டன்விளைப் பாதையில் விடிலி போட்டிருந்த போது வெள்ளைப் பன்றி ஒன்றை வளர்த்து வந்த வெள்ளையாநாடான், எங்கள் வீட்டிற்கு வந்து “ ஏ கிட்னன் மொவனே, கொஞ்சம் அடுப்புக் குப்ப தாடே “ ன்னு கேட்டு அரைக்கலயம் அளவுக்கு எடுத்துச் சென்ற போது தெரியாமலிருந்த விஷயம், அஞ்ஞாடி கோவிந்தன், அறுத்துப் போட்ட இடத்தில் சாம்பலை அப்பி கருவ முள்ளாள் தைத்த போது தெரிந்து கொண்டேன். அம்மாடி ! 40 ஆண்டுகள் ஆயிருக்கு எனக்கு, இந்த அனுபவத்தின் நினைவுகளை அசைபோட்டு அசைபோட்டு மகிழ்ந்ததை எப்படிச் சொல்வது?

போலிக் கலச்சாரத்தையும் , சாதிக் கட்டுப்பாட்டையும் கேலிக்குள்ளாக்கும் ஆண்டாள்களும், ஆழ்வார்சாமிகளும் எங்கும் எல்லா நாட்டு நாவல்களிலும் வலம் வருபவர்கள் தான். ஆனால் மகளின் முகத்தில் புதுக்களை கண்டு மெச்சும் பெத்தப்போடு நரயன நாயக்கரும், “ வாழப் பிற்ந்தவளே என் வளர்பிறையே கண்ணுறங்கு” ன்னு தாலாட்டுப் பாடும் வேலாயியும் தனியானவர்கள். இவர்களைப் போன்ற துணைருந்தால் எவ்வளவு தற்கொலைகளும் கொலைகளும் தடுக்கப்பட்டிருக்கும். நினைக்கையில் மனம் வேரில் பழுத்த பலாச்சுளையாய் இனிக்கிறது.

இவ்வாறு பல நிகழ்வுகள் வாசகனின் சொந்த அனுபவத்தின் தொகுப்பாய் கண்முன் விரியும். குறிப்பாக தெக்கத்திச்சீமைக் காரணாய் இருந்தால் கட்டாயம் கண்ணில் நீர் வழியும்.

இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மள்ளர்கள் – கீழ் வெண்மணி தொடர்ந்து புளியங்குடி, போடி கொடியங்குளம் பின்னர் பரமக்குடியிலும் பட்ட காயங்கள், பெற்ற வலிகள் வருங்காலத்தில் பூமணியின் எழுத்துலகக் கருவாகும் என்பதற்கு அச்சாரமாகத்தான் நாடார்கள் தொடர்புடைய கழுகுமலை, சிவகாசி கலவரம் மற்றும் குமரி மாவட்டத் தோள் சீலை போராட்டங்கள் அச்சு பிசகாமல் ஆவணப்படுத்தப்பட்டு காட்சியாய் விரிகிறது.

இன்னும் 18ம் நூரற்றாண்டு குடும்பமார்கள் வாழ்வியல் வரலாறு கலிங்கலில் தொடங்கி பட்டணம் தொடர்ந்து மற்றும் கலிங்கலில் இடுகுழி மேலிருந்தும் அருமையாக, துல்லியமாக வரையபட்டுள்ளது.

மகிழ்ச்சி, அழுகை, வீரம், பெருந்தன்மை, நட்பு, நக்கல், புதிர், பொறமை, கோபம் என வினைகளை வார்த்தையில் வடிக்கும் கலைஞனை பாராட்ட வார்த்தையின்றித் தவித்தபோது
“ வார்த்தை தேவனாய் இருந்தது”
அல்லது
“ படைப்பதனால் என் பேர் இறைவன்”

நெல்லை மாவட்டத்துக்காரன் போடுற சொலவடைகள்ல சொக்கிப்போகலாம்பாங்க. வெள்ளிவிழா காணும் தூத்துக்குடி மாவட்டத்துக்காரர் என்றாலும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்துக்காரர் என்பதை எப்படி அறிவது?

இப்படித்தான்.

எல்லோரும் அறிந்த பழமொழிகள் தவிர்த்து நாவலெங்கும் விரசிக்கிடக்கும் சொலவடைகளின் தொகுப்பை ஒரு நயத்திற்காக நிரலிட்டிருக்கிறேன்

• கைகண்ட சிருக்கிக்கி கண்ணீர் ஒன்னுதான் கொரைச்சலாக்கும்.
• ஒழக்கு நெல்லுக்கு ஒழைக்கப் போனேன், பதக்கு நெல்ல பண்ணி
தின்னுருச்சே.
• முந்தில இருக்கிற வண்டவாளத்த சந்தீல அவுத்து வுட்டுருவேன்.
• திங்கறதுக்கு தவுடு இல்லையாம் தங்கச் சரப்புளி தொங்கு தொங்குன்னு
ஆடுதாம்.
• ஊராளுத ராசாவுக்கு பேலுறதுக்கு எடமில்லயாம்.
• முத்துப் போல ஒத்தப் புள்ள பொத்திப் பொத்தி வளத்தாளாம்.
• ஒடயவன் இல்லாத சீல ஒரு மொழம் கட்ட.
• நனஞ்ச கிளடி வந்தா காஞ்ச வெறகுக்குத்தான் சேதாரம்.
• கள்ளி பெருத்தென்ன சிறுத்தென்ன காயுண்டா எணலுண்டா.
• பொந்தடி தவள மாறி புள்ள பெத்து போட்டிருக்கா.
• கொதி பொறுக்காத குருண குதியாளம் போடுற காலம்.
• சோத்துப் பான ஒடஞ்சா மாத்துப் பான இல்லாத உசிரு.
• கெடக்கிறது குட்டிச் சொவரு கெனாக்கான்றது மச்சி வீடா?
• கூலிக்கு அறுத்தாலும் குருணிக்கு அறுக்கலாம்.
• அய்யோ கூத்து அத கொஞ்சம் பீத்து.
• பிஞ்சத் திருகி வெயில்ல எறிஞ்சா வெம்பிப் போகாதா?
• அறுத்தெறிஞ்ச பூசணித்துண்டா கொற நிலா கோணிக் கெடக்குது.
• சொன்னத வுட்டுட்டுச் சொறையப் புடுங்காத.
• ஆடு நெனைக்கிற இடத்துல கூடு கவுத்த முடியுமா?
• நாறக் கருவாட்ட பூன மொறைக்கிற மாதிரி பாக்காத.
• ஊர ஒழக்காலா அளப்பான் நாட்ட நாழியால அளப்பான்.
• கடலு வத்தி கருவாடு திங்கணும்னு நெனச்ச கொக்கு உடலு வத்திச்
செத்ததாம்.
• கரும்பு கட்டோட இருந்தா எறும்பு தானெவரும்.
• அழிஞ்ச பிஞ்சயில குருத மேஞ்சாயென்ன கழுத மேஞ்சாயென்ன ?
• சோளம் நட்டாப்ல கம்பு கெட்டாப்ல இருக்கணும்.
• தாது வருசப் பஞ்சம் தரமட்டமாக்காம வுடாது.
• பொன்னுறுகக் காஞ்சி மண்ணுறுகப் பேயணும்.
• ஆனைக்கு வடிக்கிற வீட்டில பூனைக்குச் சொறில்லாமப் போச்சா?
• நாரை பறக்கிற கொளம் கோர கூட மொளைக்காம கெடக்குது.
• கொட்டாரம் பழசானாலும் குருவிக்குப் பஞ்சமா?
• வெள்ளத்து மீனு மாதிரி விர்ருன்னு ஏறி வாரானே.
• அரிசின்னு அள்ளிப் பாப்பாருமில்லே உமின்னு ஊதிப் பாப்பாருமில்லே.
• ஒலக்க தேஞ்சி உளிப்புடி ஆன கதை.
• இன்னிக்கு எலை அறுக்கிரவன் நாளைக்கு குலை அறுக்க மாட்டானா?
• அச்சானி இல்லத வண்டி முச்சாணும் ஓடாது.
• வைய வைய வைரக்கட்ட திட்டத் திட்டத் தேக்கங்கட்ட.
• அரணக்கயித்துல கோத்த தாயத்து போல.
• இச்சிப் பழத்த பிச்சிப் பாத்தா தெரியும் எத்தன புளு உள்ள இருக்குன்னு.
• ஈரங் காயிர வரைக்கும் குண்டில மண் இருக்கத்தான் செய்யும்.
• ஆறு போவது கிழக்கு, அரசன் சொல்வதே வழக்கு.
• நோஞ்ச மாட்ல ஈ ஒட்னமாதிரி.
• சீத்த குருவி கொழுத்தா செடியில நிக்காதாம்.
• இண்டஞ் செடிக்குள் தலய விட்டு முழிக்கிற பொழப்பு.
• காதுல கட்டெறும்பு கடிபட்ட கழுதக் குட்டியா காலம் கண்டமானிக்கு ஒடுது.
• செறகு முத்தி குருவி யாயிற்றா அதுக வாயி வயித்தத் தான் பாக்கும்.
• அணிலு கொப்புலதான் ஆம கெணத்துல தான்.
• கண்ணுக்கு கண்ணாம்பட்ட காத தூரமா?
• வேலிக்குப் போட்ட முள்ளு காலுக்கு வெனையாச்சு.
• கெடா பின்வாங்கறது பாச்சலுக்குன்னு தெரியாதா?
• அரிசி சிந்தினா அள்ளிரலாம் , வார்த்த சிந்தினா வார முடியுமா?
• நெருப்பாத்துல மயிர்ப்பாலம் கட்டுற மகராசங்க.
• அட்டமத்து சனியன் புடிச்சு புட்டத்துத் துணியையும் உறுவிருச்சு.
• ஆனயக் காணோம்னு ஆப்பைகுள்ள தேடுற ஆக்கங்கெட்ட பய.
• தென்ன மரத்துல தேள் கொட்டி பன மரத்துல பதவள கெட்ன கதை.
• சண்டக்காரனுக்கு தப்புனது சட்டக்காரனுக்கு இறையாவும்.
• பகல்ல பசுமாடு தெரியாதவனுக்கு இருட்டுக்குள்ள எருமமாடு எங்க
தெரியும்.
• தகப்பன் வெட்ன கினறுன்னாப்ல தலகீழா பாயலாமா?
• வாளக் கருவாட்டப் போல வசிய மருந்து உண்டுமா?
• ஒழவடிக்கயில ஒறங்கறவன இந்த ஒலகத்துல பாக்கமுடியுமா?

• செல்லச் சிறுக்கி புருஷன் செவ்வாக் கெழம செத்தானாம். வீடு வெறிச்னு
போகும்னு வெள்ளிக் கெழம எடுத்தாளாம்.
• செல்லிக்கு செரங்கு, சிறுக்கிக்கு அரையப்பு, பாக்க வந்த பாதகத்திக்குப்
பக்கப்பொளவாம்.
• நாட்டுக்கு நல்ல தொர வந்தாலும் தோட்டிக்கு சொம எறங்காது.
• அடுத்த ஊட்டு கல்யாணமே , ஏன் அழுகிற கோவணமே?
• கொத்தன் மோத்ரம் கோவுரத்லேயும் இருக்கும்.
• வாழ்ந்து கெட்டவன் வறுகோட்டுக்குக் கூட ஆக மாட்டான்.
• அரிசிப் பல்லுக் காரி அவுசாரி, மாட்டுப் பல்லுக் காரி மகராசி.
• இறுகினாக் களி எழகினாக் கூழு.
• சூத்துல கெட்டத் துணி இல்லாதவனுக்கு கூத்தியா ரெண்டு பேராம்.
• சீல இல்லன்னு சின்னத்தாயி வீட்டுக்குப் போனாளாம், அந்தத் தாயி
ஒலப் பாயக் கட்டிக்கிட்டு ஓடி வந்தாளாம்.
• மலையே உழுந்தாலும் தலதான் தாங்கணும்.
• நீருள்ள மட்டும்தான் மீன் துள்ளும்.
• எடங்குடுத்தா மடங் கேக்கிற எடுப்பெடுத்த நாயி.
• தொடையில இருக்கிற புண்ண கடையில காட்டுனா அசிங்கம்.
• பூ விரிஞ்சி கெட்டதாம் வாய் இளிஞ்சி கெட்டதாம்.
• குப்பையில மக்கப் போறதுக்கு கணக்கெதுக்கு.
• போக்கத்தவனுக்கு போறதெல்லாம் வழி.
• இன்னிக்கு சங்கடம் நாளைக்கு சந்தோசம்.
• ஆடு கடிக்கும்னு இடையன் உறி மேல ஏறி ஒழிஞ்சானாம்.
• ஆகாசத்துல பறக்க வழி சொல்றேன் என்ன ஆத்துக்கு அந்தப் பக்கம்
தூக்கி உடுன்னானாம்.
• பசி இல்லாம இருக்க வரம் தாரேன் கொஞ்சம் சோறுபோடு தாயி !
• பேறு காலத் தீர்மானம் எத்தன நாளைக்கு.
• நடக்கயில நாடெல்லாம் உறவு , படுத்துக்கிட்டா பாய்கூட பகைதான்.
• ஒடம்பு கெடக்குது மடத்துக்குள்ள கோவணம் கெடக்குது கெணத்துக்குள்ள.

சொக்கத்தானே செய்கிறது.

விடை பெறலாமா?

எப்படி?

இப்படி.

வாரேன்…… இவனே…!